பாரபட்சம் காட்டும் விஜய் டிவி.. சனம்க்கு தனி புரமோ ஏன் போடல.. திட்டித் தீர்க்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை: முதல் இரண்டு புரமோவிலும் சனம் ஷெட்டியின் இன்ட்ரோவை காட்டாத நிலையில், மூன்றாவது புரமோவிலாவது சனம் ஷெட்டி வருகையை காட்டுவார்கள் என பார்த்தால், ரேகா அழுது புலம்புவதை காட்டி ரசிகர்களை வெறுப்பேற்றியுள்ளனர்.
அன்பு கேங் வருகையையும் போஷ் கேங் வருகையையும் ஆர்ப்பாட்டமாக காட்டி விட்டு, ஆரியை அசிங்கப்படுத்தும் காட்சியை காட்டி விஜய் டிவி பாரபட்சம் காட்டுவதாக திட்டித் தீர்த்து வருகின்றனர்.
ரியோவுக்கு டைட்டில் வின்னர் கோப்பையை தூக்கிக் கொடுக்கவே பிக் பாஸ் குழு மற்றும் விஜய் டிவி போராடுவது தெளிவாக தெரிவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

நம்ம சனம் வெறித்தனம்
இரண்டாவது புரமோவிலேயே சனம் ஷெட்டியை பார்த்த ரசிகர்கள், மூன்றாவது புரமோவிலும் சனம் தரிசனம் கிடைக்க, நம்ம சனம் வெறித்தனம் என பிகில் போஸ்டரை போட்டு தெறிக்கவிட்டு வருகின்றனர். சனம் ஷெட்டி மட்டுமே ஆரிக்கு சப்போர்ட்டாக இருப்பார் என்றும், பாலாவுக்கு ஆப்பு வைப்பார் என்றும் ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்து வருகின்றனர்.

16 பேரில் ஆரி பெட்டர்
இந்த சீசனில் ஆரி தப்பே செய்யலைன்னு சொல்ல முடியாது.. ஆனால், பிக் பாஸ் போட்டியாளர்களாக தேர்வான 16 பேரில் மற்றவர்களை விட ஆரி ரொம்பவே பெட்டர். அதனால் தான் ரசிகர்கள் அவரை பாராட்டியும், அவருக்கு தொடர்ந்து ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைத்தும் வருகின்றனர் என இந்த ரசிகர் கமெண்ட் செய்துள்ளார்.

50 ஓட்டும் ஆரிக்கே
"நமது கவனமெல்லாம் ஹாட்ஸ்டார் ஓட்டிங்கில்தான்!... ஆரிக்கே அம்பது ஓட்டும்!.." என இந்த முறை ஆரி ஆர்மியினர் யாருமே ஓட்டை மற்றவர்களுக்கு பிரித்துப் போடாமல் மொத்தமாக போட்டு வருகின்றனர். ஓட்டுக்களை மட்டுமே வைத்து வெற்றி தீர்மானிக்கப்பட்டால் ஆரி தான் வெற்றி பெறுவார் என்றும், இல்லையென்றால், அது விஜய் டிவியின் களவாணி தனம் என்றும் நெட்டிசன்கள் வெளுத்து வருகின்றனர்.

அன்பு கேங் மொத்தமும்
கடைசி வாரத்தில் அன்பு கேங் மொத்தமும் மீண்டும் பிக் பாஸ் வீட்டில் அலப்பறை செய்து வருகிறது. அர்ச்சனா, ரியோவின் அட்டகாசம் தாங்கவே முடியலை என்றும், வெளியே போயிட்டு வந்தும் அர்ச்சனா கொஞ்சம் கூட திருந்தவே இல்லை என்றும் விடாமல் வச்சு செய்து வருகின்றனர் நெட்டிசன்ஸ்.

மக்கள் நாயகி சனம்
சனம் ஷெட்டிக்கு தனி புரமோ போடாமல் விஜய் டிவி பாரபட்சம் காட்டினாலும், முதல் ஆளாக சென்று ரேகாவுக்கு சனம் தான் ஆறுதல் சொல்றாங்க, மக்கள் நாயகி சனம்.. பாலாவுக்கு ஒரு நல்ல வேட்டு வச்சிட்டு சனம் ஷெட்டி வீட்டை விட்டு வெளியே போனால் சந்தோஷம் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

அதை பார்க்கணும்
ஆரியும் சனம் ஷெட்டியும் மீண்டும் சந்தித்துக் கொண்டு பேசும் தருணத்தை பார்க்க மட்டும் தான் இன்றைய ஷோவையே எதிர்பார்த்து வருகிறோம். இவங்க ரெண்டு பேர் ரீயூனியனும் தான் இன்னைக்கு ஹைலைட்டா இருக்கும். விஜய் டிவி என்ன தில்லாலங்கடி செய்தாலும், இவர்களை தடுக்க முடியாது என்று கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











