ஆனா ஊனா கட்டி புடிச்சிடுறீயே தம்பி.. நேத்து பாவனி.. இன்னைக்கு தாமரை.. அபிஷேக்கை விளாசும் நெட்டிசன்ஸ்
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் அபிஷேக்கை வச்சு செய்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவில் தன்னை இந்த வார எவிக்ஷனில் இருந்து காப்பாற்ற முயற்சி செய்வதாக கூறிய அபிஷேக்கின் காலில் விழுந்து கதறினார் தாமரை செல்வி.
அவருக்கு ஆறுதல் கூறுவதாக அவரை கட்டியணைத்தார் அபிஷேக். நேற்று பாவனியை கட்டிப்பிடித்த அபிஷேக் இன்று தாமரையை கட்டிப்பிடிப்பதை பார்த்த நெட்டிசன்கள் எதற்கெடுத்தாலும் பெண் போட்டியாளர்களை இப்படி கட்டிப்பிடித்து விடுகிறாரே என்று விளாசி வருகின்றனர்.

உள்ளேயும் அன்பை சம்பாதிச்சிட்டாங்க
இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், தாமரைசெல்வி உள்ளேயும் அன்பை சம்பாதிச்சிட்டாங்க.... என பதிவிட்டுள்ளார். தாமரை செல்வியை காப்பாற்ற அனைத்து போட்டியாளர்களுமே ஆர்வம் காட்டுவதை பார்த்து இப்படி பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

நன்றி உணர்வுல கால்ல விழுது..
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இவங்க எல்லாம் அக்காக்காக பண்றேன்னு ஸ்கோர் பண்றாங்க.. அந்தக்கா நன்றி உணர்வுல கால்ல விழுது.. கால்ல விழ தேவையில்லை அக்கா... இப்ப இருக்கமாதிரி இருந்தாலே ரொம்ப நாள் இருக்கலாம்.. என பதிவிட்டுள்ளார்.

ஆனா ஊனா கட்டி புடிச்சிடுறான்
இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஆனா ஊனா கட்டி புடிச்சிடுறான்
நேத்து பாவனி இன்னைக்கு தாமரை செல்வி..
அடேய் நீ தொடாம பேச மாட்டியா என்ன..
யாராவது இவனை தொடாதன்னு திட்டுவானுங்கனு பாக்குறேன் ஒருத்தனும் பேச மாட்டேங்கறானுங்க என்று பதிவிட்டுள்ளார்.

மூஞ்சு தெரிய என்ன வேலை பண்றான்..
அபிஷேக் தாமரை செல்விக்கு ஆதரவாக பேசி அவரை கட்டிப் பிடித்ததை பார்த்த இந்த நெட்டிசன், புரோமோவுல மூஞ்சு தெரிய என்னா வேலை பண்றான் பாரு இந்த அபிஷேக்கு! என பதிவிட்டுள்ளார்.
Recommended Video

அபிஷேக்கு எஸ்கேப்பு!
இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இந்த வாரமும் அபிஷேக்கு எஸ்கேப்பு! என பதிவிட்டுள்ளார்.

கண்டஸ்டென்டுகள் ரெடியாகிட்டாங்க!
இரண்டாவது புரமோவ பார்த்த இந்த நெட்டிசன், இப்ப கண்டென்டு கொடுக்க கண்டஸ்டென்டுகள் ரெடியாகிட்டாங்க! என பதிவிட்டுள்ளார்.

டிராமா ட்ரூப் ஆரம்பித்து விட்டார்கள்..
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், பிக் பாஸ் டிராமா ட்ரூப் ஆரம்பித்து விட்டார்கள்.. என கலாய்த்துள்ளார்.

எபிசோட் பார்த்தால் விளங்கும்
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், வெளியேற்றப் பட்டியலில் இல்லாத ஒருவர் கையில் அந்த தங்க நாணயம் அல்லது அது ஏதோ கிடைத்தால் நாமினேட் ஆன மற்றொருவரை காப்பாற்றலாம் போல... எதற்கும் எபிசோட் பார்த்தால் தான் விளங்கும்... என பதிவிட்டுள்ளார்.

காலில் விழுவது அநாகரீகம்
என்ன இன்னொசன்ட் என்றாலும் அப்படி இருக்க முயற்சி செய்தாலும் அபிஷேக் காலில் மட்டுமல்ல யார் காலிலும் விழ முயற்சி செய்ய வேண்டாம்... தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அது அநாகரீகமாக உள்ளது... 16 பேரில் யாரும் ஒருவருக்கொருவர் குறைந்தவர் அல்லர்.. அனைவருக்கும் அவரவர் துறையில் திறமையானவர்.. என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











