வனிதாவை விட அபிநய்க்கு எப்படி அதிக ஓட்டுக்கள் வந்துச்சு.. கடுப்பான பிக் பாஸ் அல்டிமேட் ரசிகர்கள்!

சென்னை: பிக் பாஸ் அல்டிமேட்டின் லேட்டஸ்ட் புரமோவை பார்த்து உச்சகட்ட கோபம் அடைந்துள்ளனர் அதன் ரசிகர்கள்.

ஜெமினி கணேசனின் பேரனான அபிநய் பிக் பாஸ் சீசன் 5ல் கலந்து கொண்டு விளையாடிய நிலையில், தற்போது பிக் பாஸ் அல்டிமேட்டிலும் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.

முதல் வாரத்தில் அபிநய் தான் வெளியேறுகிறார் என ரசிகர்க்ள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், வனிதாவுக்கு முன்னதாக அவர் சேவ் ஆகி உள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

ஏமாந்த ரசிகர்கள்

ஏமாந்த ரசிகர்கள்

இந்த வார துவக்கத்தில் குறைவான ஓட்டுக்களுடன் ஜூலி கடைசி இடத்தில் இருந்தார். அபிநய்க்கு எல்லாம் யார் தான்பா ஓட்டு போடுறீங்க என ரசிகர்கள் கலாய்த்த நிலையில், ஜூலி முன்னேறினார். வனிதா கடைசி இடத்திற்கு வந்தார். அதன் பின்னர், கடைசி இடத்திற்கு அபிநய் வந்த நிலையில், அவர் தான் எலிமினேட் ஆவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்கிற வசனத்துடன் வந்த கமல் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.

இரண்டாவது வாய்ப்பு

இரண்டாவது வாய்ப்பு

பிக் பாஸ் 5வது சீசனில் கமல்ஹாசன் தான் பல வாரங்கள் அபிநயை காப்பாற்றி வந்தார் என நெட்டிசன்கள் குற்றச்சாட்டுகளை அடுக்கி வந்தனர். ஆனாலும், கடைசி வரை நல்லா கேம் ஆடுகிறார் என்கிற பெயரை அபிநயால் எடுக்கவே முடியவில்லை. இந்நிலையில், அபிநய்க்கு இரண்டாவது வாய்ப்பாக பிக் பாஸ் அல்டிமேட் அமைந்துள்ளது.

சுரேஷ் தாத்தா எலிமினேட்

சுரேஷ் தாத்தா எலிமினேட்

அபிநய் எலிமினேட் ஆவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், சுரேஷ் தாத்தா முதல் வாரத்திலேயே எலிமினேட் ஆகி உள்ளது ரசிகர்களால் கொஞ்சம் கூட ஜீரணிக்க முடியவில்லை. இந்த முறை அபிநயை எப்படியாவது 70 நாட்கள் வரை இருக்க வைத்து விடுவார்கள் பாருங்கள் என சிலர் பெட் கட்டும் அளவிற்கு கடுப்பின் உச்சிக்கே சென்றுள்ளனர்.

வனிதாவை விட அதிக வாக்குகள்

வனிதாவை விட அதிக வாக்குகள்

சுரேஷ் தாத்தா எலிமினேட் ஆனதை விட கடைசி இடத்தில் இருந்த அபிநய் எப்படி வனிதா அக்காவை விட அதிக வாக்குகள் வாங்கி சேவ் ஆனார் என்கிற கேள்வியைத் தான் ஏகப்பட்ட பிக் பாஸ் அல்டிமேட் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். பிக் பாஸ் அல்டிமேட்டிலும் ஏமாற்று வேலைகள் எவிக்‌ஷனில் நடந்து வருவதாக குற்றச்சாட்டுக்களையும் முன் வைத்து வருகின்றனர்.

சுருதிக்கு பதில்

சுருதிக்கு பதில்

நாமினேஷன் வரான்.. ஒண்ணுமே பண்ண மாட்ரான்.. சேவ் ஆகுறான்.. ரிப்பீட்டு என மீம் போட்டு அபிநயை கலாய்த்து வருகின்றனர். மேலும், சுருதிக்கு கொடுத்த வந்தான், சாப்பிட்டான், தூங்குனான்.. ரிப்பீட்டு பட்டத்தை அபிநய்க்கு கொடுத்திருக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X