மம்முட்டி சார்.. இப்போ பண்ற வேலையா இது? கொந்தளிக்கும் ரசிகர்கள்!!
கேரள மக்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும்போது பட டிரெய்லரை வெளியிட்ட நடிகர் மம்முட்டிக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
Recommended Video

சென்னை: கேரள மக்கள் வெள்ளத்தில் தத்தளிக்கும்போது பட டிரெய்லரை வெளியிட்ட நடிகர் மம்முட்டிக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கேரளாவில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை கொட்டி வருகிறது. இதனால் கேரளமாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
2 மாடிகள் வரை வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். டிவி, பாத்திரங்கள் என வீட்டில் வைத்திருந்த பொருட்கள் எல்லாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன.

முகாம்கள்
ஆயிரக்கணக்கான வீடுகள் மண்சரிவால் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. லட்சக்கணக்கானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

உதவிக்கரம்
கடந்த 4 நாட்களில் மட்டும் கனமழை மற்றும் பெரு வெள்ளத்திற்கு 50க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். வெள்ளத்தால் தவித்து வரும் கேரளாவுக்கு தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் உதவிக்கரம் நீட்டியுள்ளன.

கவலையில் மக்கள்
ஊருக்குள் ஆற்று வெள்ளம் புகுந்ததால் வீடுகள் தண்ணீரில் மிதக்கின்றன. நிலச்சரிவுகளால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு உள்ளன. இதனால் அங்குள்ள மக்கள் வீடுகளையும் உடமைகளையும் இழந்து பெரும் கவலையில் இருக்கிறார்கள்.

டிரெய்லர் வெளியீடு
இந்த சோகத்துக்கு மத்தியில் நடிகர் மம்முட்டி மலையாளத்தில் நடித்து வரும் தன்னுடையை ‘குட்ட நாடன் பிளாக்' என்ற படத்தின் டிரெய்லரை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மம்முட்டிக்கு எதிர்ப்பு
இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துவரும் இந்த இக்கட்டான நேரத்தில் படத்தின் டிரெய்லரை வெளியிடலாமா? என்று மம்முட்டியை கண்டித்து கேரள ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பையும் கண்டனத்தையும் பதிவு செய்து வருகிறார்கள்.அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்களும் மம்முட்டி செயலை விமர்சித்து உள்ளனர்.


Click it and Unblock the Notifications











