திருக்குறளை டிவீட்டி வாங்கிக்கட்டும் விவேக்.. காக்கா பிரியாணியை பஞ்சாயத்துக்கு இழுத்த நெட்டிசன்ஸ்!
சென்னை: நடிகர் விவேக் ஒரு திருக்குறளை டிவிட்டி விட்டு வாங்கிக்கட்டி வருகிறார்.
தமிழ் சினிமாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் விவேக்.
இதுவரை நூற்றுக்கணக்கான படங்களில் ரஜினி, அஜித் விஜய், தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் விவேக்.

சின்னக்கலைவாணர்
நகைச்சுவை கதாப்பாத்திரங்கள் மட்டுமின்றி குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். ஏராளமான விருதுகளையும் குவித்துள்ளார். விவேக்கின் தனித்துவமான நகைச்சுவைக்ளுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை சொல்லும் அவரது நகைச்சுவைகளுக்காக சின்னக் கலைவாணர் என்றும் அழைக்கப்பட்டு வருகிறார் விவேக்.

டிவிட்டால் சர்ச்சை
மரம் நடுவது இயற்கையை பாதுகாப்பது என அப்துல் கலாம் வழியில் செல்லும் நடிகர் விவேக் சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். அவருடைய ஒவ்வொரு பதிவும் வைரலாவது வழக்கம். அந்த வகையில் இன்று அவர் பதிவிட்டுள்ள டிவிட்டை பார்த்து கடுப்பாகியுள்ளார்கள் நெட்டிசன்கள்.

எல்லா உயிரும் தொழும்
அதாவது கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்!! என்ற திருக்குறளை பதிவிட்டுள்ளார். அதாவது ஓர் உயிரையும் கொல்லாதவனுமாய்ப் புலாலையும் உண்ணாதவனை, எல்லா உயிரும் கைகூப்பித் தொழும் - எல்லா உயிரும் கை குவித்துத் தொழும் என்பது இதன் அர்த்தம்.

காக்கா பிரியாணி
இதனை பார்த்த ரசிகர்கள் இது தேவையில்லாத வேலை என தெரிவித்துள்ளனர். விவேக்கின் டிவிட்டை பார்த்த இந்த நெட்டிசன், காசு கொடுத்தா எது வேனா திங்குறது! ஆடு கோழி காக்கானு கூட வச்சிக்கலாம் சார். நாங்க என்ன சாப்பிடனும்னு பாடம் எடுக்காதீங்க, கடைசி காலத்துல அவப்பெயர் வாங்கிட்டு போகாதிங்க என தெரிவித்துள்ளார். மேலும் ரன் படத்தில் நடிகர் விவேக் காக்கா பிரியாணி சாப்பிடும் பிக்சரையும் பகிர்ந்துள்ளார்.

நிஜத்தில் இப்படி
அதே காக்கா பிரியாணி போட்டோவை பகிர்ந்த மற்றொரு நெட்டிசனான இவர், இது உண்மையான இறைச்சியா என்று எனக்கு தெரியாது..பணத்திற்காக சினிமாவில் மட்டும் இறைச்சி உண்பது போல் நடித்தால் தவறில்லை, ஆனால் நிஜ வாழ்க்கையில் மட்டும் உண்பது தவறு..இது என்ன கொள்கை?? கேட்டுள்ளார்.

நெட்டிசன்கள் ஆதரவு
இன்னும் சில நெட்டிசன்கள், சின்னக் கலைவாணரே இதுபோன்று பேசி சின்ன எஸ்வி சேகர் ஆகி விடாதீர்கள் என்றும் அறிவுத்தியுள்ளனர். அதேநேரத்தில் விவேக்கின் இந்த பதிவுக்கு பல நெட்டிசன்கள் ஆதரவும் தெரிவித்துள்ளனர். அவரது இந்த பதிவு வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











