சரக்கடிச்சுட்டு கண்டதையும் உளற வேண்டியது.. முதல்வர் பதவிக்கேட்ட நடிகையை விளாசும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிரதமர் மோடியிடம் தன்னை தமிழக முதல்வர் ஆக்குமாறு கூறிய நடிகையை நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர்.
நடிகை மீரா மிதுனுக்கு அறிமுகமே தேவையில்லை. அந்த அளவுக்கு தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானவர்.
2016ஆம் ஆண்டுக்கான ஃபெமினாஸ் மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை வென்றார். ஆனால் அதில் தனது வயது மற்றும் திருமணம் ஆன விஷயத்தை மறைத்ததாக சர்ச்சை எழுந்தது.

பிக்பாஸ் சீசன் 3
தொடர்ந்து அழகிப் போட்டி நடத்துவதாக கூறி இளம் பெண்கள் பலரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து அவரிடம் இருந்து அழகிப் பட்டம் திரும்பப் பெறப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அரைகுறை போட்டோக்கள்
இதில் சக போட்டியாளரான இயக்குநர் சேரன் தன்னை தவறான எண்ணத்தில் தொட்டதாக அபாண்டமாக குற்றம்சாட்டினார். இதன் மூலம் பெரும் பிரபலமானார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள நடிகை மீரா மிதுன், அவ்வப்போது தனது அரைகுறை போட்டோக்களை போட்டு நெட்டிசன்களிடம் வாங்கிக்கட்டி வருகிறார்.

அரசியல் ஆசை
அதோடு சமூக வலைதளங்களில் தமிழக அரசு, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார். தமிழக அரசின் செயல்பாட்டை கடுமையாக விமர்சித்து வரும் மீரா மிதுன், தான் முதல்வரானால் ஊழல் இல்லாத மாநிலமாக உருவாக்குவேன் என எதையாவது பேசி வருகிறார்.

தனக்கு வாய்ப்பு
கடந்த சில நாட்களாக டிவிட்டர் பக்கமே வராமல் இருந்த மீரா மிதுன், தொடர்ந்து தனது போட்டோக்களை ஷேர் செய்து காதல் கவிதை பாடி வருகிறார். இந்நிலையில் நேற்று தமிழக அரசு மற்றும் அமைச்சர்களை சாடி டிவிட்டியுள்ளார். மேலும் பிரதமர் மோடியிடம் தன்னை முதல்வராக்கி தனக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

உன் வொர்த் தெரியுமே
அதோடு தான் படித்த படிப்புகளையும் தனது அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார். அவரது இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள், மீரா மிதுனை வச்சு செய்துள்ளனர். மீரா மிதுனின் இந்த பதிவை பார்த்த இவர், முதலில் உன் தாயை பாரு.. அப்புறம் தாய் நாட்ட பார்க்கலாம்.. ஒன்றுக்கும் யூஸ் இல்லாத ஆள், உன் வொர்த் தெரியுமே.. உன்னை யாரும் மதிக்கல என கண்டப்படி சாடியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

உளற வேண்டியது
இன்னும் சில நெட்டிசன்கள் லூசு சரக்கு அடிச்சுட்டு கண்டதையும் ட்வீட் பண்ணிட்டு இருக்கு என கன்னா பின்னாவென டிவிட்டியுள்ளனர். இன்னும் சில நெட்டிசன்கள் சொல்ல முடியாத அளவுக்கு அவரை திட்டி தீர்த்திருக்கின்றனர். தமிழக அரசையும் அமைச்சர்களையும் அவதூறாக பேசும் மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











