என்ன தமிழகத்தை மகிழ்விக்கவா? நீங்க ஜல்சா பண்ண ஊரு பேர கெடுக்காதீங்க.. நடிகையை விளாசும் நெட்டிசன்ஸ்!
Recommended Video
சென்னை: தமிழக மக்களை மகிழ்விப்பதற்காக ஹரிஷ் பிரபல நடிகருடன் டேட்டிங் செல்ல விரும்புவதாக கூறிய நடிகையை நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் நடிகர் ஹரீஷ் கல்யாண் மற்றும் நடிகை ரைஸா வில்சன். இருவரும் பியார் பிரேமா காதல் என்ற படத்தில் இணைந்து நடித்தனர்.
ஹரீஷ் கல்யாண் நடிப்பில் அண்மையில் வெளியான தனுசு ராசி நேயர்களே படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார் ரைஸா வில்சன். எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்காததால் கிடைக்கும் வாய்ப்புகளை தட்டாமல் பயன்படுத்தி வருகிறார்.

கடுப்பான நெட்டிசன்கள்
இந்நிலையில் நடிகை ரைஸா வில்சன், தமிழக மக்களை மகிழ்விப்பதற்காக நடிகர் ஹரீஷ் கல்யாணுடன் டேட்டிங் செய்யப்போவதாக டிவிட்டரில் தெரிவித்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் கடுப்பாகி விட்டனர். உங்களின் ஜாலிக்கு எதற்கு ஊர் மக்களை இழுக்கிறீர்கள் என விளாசி வருகின்றனர்.
சமுதாயத்துக்கு தேவை?
இது நம்முடைய சமுதாயத்துக்கு ரொம்ப தேவையா என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.
வடிவேலு போட்டோ
ஹரீஷ் கல்யாணின் ரியாக்ஷன் இப்போது என வடிவேலு பீதியடையும் போட்டோக்களை பதிவேற்றியிருக்கிறார் இந்த நெட்டிசன்.
கேவலப்படுத்தாதீங்க?
வெய்ட்.. என்ன? நீங்க ஜல்சா பண்ண எதுக்கு தமிழ் நாடு ஹேப்பி ஆகனும்.. ஊர கேவலப்படுத்தாதீங்க.. என்று சாடியிருக்கிறார் இந்த நெட்டிசன்.
நான் எதிர்பார்க்கல
இதை நா எதிர்பார்க்கல.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
நல்லாருக்கு..
அட்டென்ஷன் சீக்கிங்காடா நல்லாருக்கு நல்லாருக்கு... என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
பப்ளிசிட்டி ஸ்டன்ட்
யாரும் இப்படி அறிவிச்சுட்டு டேட்டிங் பண்ண மாட்டாங்க.. இது எல்லாம் பப்ளிசிட்டி ஸ்டன்ட் என்கிறார் இந்த நெட்டிசன்.
மலேசியாவ கூட..
அவரோட டேட்டிங் பண்றது தமிழ்நாட்ட சந்தோஷப்படுத்தாது.. மலேசியாவ கூட சந்தோஷப்படுத்தாது என்று கூறுகிறார் இவர்.
யாருக்கு கவலை?
அதனால் எப்படி தமிழ்நாட்ட சந்தோஷப்படுத்துவீங்க.. டேட்டிங் உங்களோட பர்சனல்.. அதை பற்றி யார் கவலைப்படுகிறார்கள் என்கிறார் இவர்.
முத்திருச்சு
தமிழ்நாட்டு சந்தோஷத்துக்கும் நீங்க ஜல்சா பண்றதுக்கும் என்ன சம்பந்தம்.. முத்திருச்சுன்னு நினைக்கிற உங்களுக்கு.. என்று கேட்கிறார் இவர்.


Click it and Unblock the Notifications











