அதெல்லாம் சரி.. நீங்க என்ன செஞ்சிருக்கிங்க.. அட்வைஸ் செய்த.. நடிகையை வெளுத்து வாங்கிய நெட்டிசன்ஸ்!

சென்னை: மற்றவர்களுக்கு உதவி செய்வது குறித்து அட்வைஸ் செய்த நடிகையை நெட்டிசன்கள் வெளுத்து வாங்கியுள்ளனர்.

ஏராளமான விளம்பர படங்களில் நடித்திருப்பவர் மாடல் அழகியான சனம் ஷெட்டி. இவர் விளம்பர படங்கள் மட்டுமின்றி எராளமான படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழில் அம்புலி என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, கன்னடா என மற்ற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

போலீஸில் புகார்

போலீஸில் புகார்

கடைசியாக வால்டர் என்ற படத்தில் நடித்துள்ளார் சனம் ஷெட்டி. தற்போது மகா என்ற படத்தில் நடித்து வருகிறார். அண்மையில் பிக்பாஸ் தர்ஷனுடனான காதல் பிரச்சனையில் சிக்கி செய்திகளில் அதிகம் இடம் பெற்றார். நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் தர்ஷன் தன்னை திருமணம் செய்ய மறுப்பதாக போலீஸில் புகார் அளித்தார்.

ஊரடங்கு கறித்து கருத்து

ஊரடங்கு கறித்து கருத்து

3 வருடங்களாக கணவன் மனைவி போல் வாழ்ந்து விட்டு தற்போது பிக்பாஸ் மூலம் பிரபலம் ஆனதும் தன்னை திருமணம் செய்ய மறுப்பதாக கூறி பரபரப்பை கிளப்பினார். இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்ட்டிவாக உள்ள சனம் ஷெட்டி, தற்போது அமலில் உள்ள ஊரடங்கு குறித்து கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

உணரும் நேரம் இது

உணரும் நேரம் இது

அதில் ஒரு வசதியான வீடு, டேபிளில் உணவு மற்றும் உண்மையிலேயே அக்கறை கொண்ட அன்புக்குரியவர்கள் பக்கத்திலிருக்கு நாம் எவ்வளவு பாக்கியவான்கள் என்பதை உணர இதுவே நேரம் என குறிப்பிட்டுள்ளார். தேவைப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் சிறிய உதவிகளை செய்து நம்முடை கைய்ன்ட்னஸை காண்பிக்கும் நேரம் இது!

முடிந்த போதெல்லாம்

முடிந்த போதெல்லாம்

உண்மையான நிறுவனங்கள் (போலி நிதிக் குழுக்களைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள்) அல்லது மளிகைப் பொருட்கள் அல்லது சமைத்த உணவை நேரடியாக தேவையானவர்களுக்கு நன்கொடையாக வழங்குவது ஒரு பெரிய உதவியாக இருக்கும். பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு முடிந்த போதெல்லாம் உணவளிப்போம் என பதிவிட்டுள்ளார்.

ரொம்ப மோசம்

ரொம்ப மோசம்

இதனை பார்த்த நெட்டிசன்கள் நீங்கள் என்ன செய்தீர்கள் என விளாசியிருக்கின்றனர். சனம் ஷெட்டியின் இந்த பதிவை பார்த்த இவர், அதெல்லாம் சரி.. தேவைபடுபவர்களுக்கு நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்.. அட்வைஸ் செய்வது ரொம்பவே ஈஸி.. ஆனால் அதை நீங்களே பின்பற்றாமல் இருப்பது ரொம்ப மோசம். நீங்கள் நேர்மையான மனிதராக இருந்தால் உங்களின் அட்வைஸை உங்களாலேயே பின்பற்ற முடியாதபட்சத்தில் மற்றவர்களுக்கு அட்வைஸ் செய்யாதீர்கள் என்று கூறியுள்ளார்.

Recommended Video

களத்தில் இறங்கிய தளபதி ரசிகர்கள்.. தினக் கூலிகளின் பட்டினியை போக்க மாஸ் நடவடிக்கை! - வீடியோ
பப்ளிசிட்டி புராப்பர்ட்டியா?

பப்ளிசிட்டி புராப்பர்ட்டியா?

மற்றொரு நெட்டிசனான இவர், சொல்லாதம்மா செய்யு.. அது சரி.. ஒரு வேளை சாப்பாடு போட்டாலே, நீ வீடியோ போட்டு பப்ளிசிட்டி பண்ணுவ. அந்த குழந்தைகளை பத்தி யோசிச்சு பாத்தீயா? அவங்க என்ன பப்ளிசிட்டி புராப்பர்ட்டியா? உதவி செய்யறத விட பெரிய விஷயம் அதை சொல்லி காமிக்காம இருக்கிறது என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X