நீங்க ஆன்ட்டி இல்ல.. ஆயா.. ஸ்வரா பாஸ்கரை திட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்!
Recommended Video
மும்பை: 4 வயது சிறுவனை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டிய பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கரை கண்டித்து டிவிட்டரில் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
பாலிவுட் நடிகையான ஸ்வரா பாஸ்கர் 4 வயது குழந்தை நட்சத்திரத்தை கடுமையாக விமர்சிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் அந்த குழந்தை நட்சத்திரம் நடிகை ஸ்வரா பாஸ்கரை ஆன்ட்டி என்று அழைத்ததால் அவர் கோபமாக பேசியது தெரிந்தது.
குழந்தையை தரக்குறைவான வார்த்தையாலும் திட்டி தீர்த்தார் ஸ்வரா பாஸ்கர். இதனால் கடுப்பான மக்கள் ஸ்வரா ஆன்ட்டி என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி நடிகையை திட்டி தீர்த்து வருகின்றனர்.
நீங்க ஆயா..
ஸ்வரா ஆன்ட்டி இல்ல அவங்க ஒரு ஆயா என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
லைம் லைட்
ஸ்வராவின் நோக்கம் அவர் லைம் லைட்டில் இருக்க வேண்டும் என்பதுதான். பாலிவுட்டில் இருக்கும் பெண்கள் அவரின் அந்தஸ்தை நினைவில் கொள்வது கடினம். ஆனால் ஸ்வரா ஆன்ட்டிக்கு அதுதான் காரணம் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
தகுதியற்றவர்
ஆன்ட்டி மிகவும் மரியாதைக்குரிய குறியீடு. 'அன்னார்கலி ஆஃப் அரா' படத்தில் அவரது கதாபாத்திரம் போல அழைக்கப்படுவார். அவள் அதற்கு தகுதியானவள் அல்ல! என்று கூறுகிறார் இவர்.
வாயும் அழுக்கானதுதான்
உங்கள் விரல்கள் மட்டும் அல்ல உங்கள் வாயும் அழுக்கானதுதான். உங்களுக்கு யாரும் சான்றிழ் கொடுக்கவில்லை. யாருக்கும் வரையறையும் இல்லை. நீங்கள் இதுபோன்று அசிங்கமாக பேச வேண்டாம் என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்


Click it and Unblock the Notifications











