twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அதான் வெளியே வந்தாச்சுல்ல.. அப்புறம் அதை வச்சு ஏன் காசு பாக்குறீங்க.. வனிதாவை விளாசும் நெட்டிசன்ஸ்!

    |

    சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் ஷேர் செய்துள்ள வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அவரை வச்சு வாங்கியுள்ளனர்.

    பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் பிரபலமானார் நடிகை வனிதா விஜயகுமார். விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார் வனிதா.

    அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. சப்போர்ட்டிங் ரோல் மட்டுமின்றி ஹீரோயினாகவும் நடித்து வருகிறார் வனிதா.

    நடந்தது என்ன? பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து வனிதா வெளியேற காரணம் இதுதான்.. வெளியானது தகவல்!நடந்தது என்ன? பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து வனிதா வெளியேற காரணம் இதுதான்.. வெளியானது தகவல்!

    விலகிய வனிதா

    விலகிய வனிதா

    இந்நிலையில் வனிதா பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் சுரேஷ் சக்கரவர்த்தியும் வனிதாவும் ஜோடியாக நடனமாடி வந்தனர். கடந்த வாரம் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார் வனிதா.

    வளர்ச்சியை பொறுக்க முடியாமல்

    வளர்ச்சியை பொறுக்க முடியாமல்

    மேலும் சேனலோடு எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லையென்ற போதும், பணியிடத்தில் நிகழும் மோசமான தாக்குதல்களையும், துன்புறுத்தல்களையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. எனது தொழில்முறை வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிலரால் நான் அவமானப்படுத்தப்பட்டதோடு, எனக்கு அநீதி இழைக்கப்பட்டது.

    பொறாமை பிடித்த பெண்

    பொறாமை பிடித்த பெண்

    பணியிடங்களில் பெண்களை மோசமாக நடத்துவது ஆண்கள் மட்டுமல்ல; பொறாமை பிடித்த பெண்களும்தான். எனக்கு கிடைக்கும் வாய்ப்புகளையும் ஒழிக்க முயல்கிறார்கள். பல ஆண்டுகள் அனுபவம்மிக்க சீனியர் ஒருவர் தன்னைவிட வயது குறைந்தவர்களிடம் இப்படி நேர்மையின்றி நடந்துகொள்வது எனக்கு வருத்தம் அளிக்கிறது என தெரிவித்திருந்தார்.

    ஒரே ஒரு மார்க்

    ஒரே ஒரு மார்க்

    இதனை பார்த்த ரசிகர்கள் ரம்யா கிருஷ்ணனோடு பிரச்சனையா என கேட்டு வந்தனர். பின்னர் ரம்யா கிருஷ்ணன் வனிதாவின் நடனத்தை பார்த்து பத்துக்கு ஒரு மதிப்பெண் மட்டுமே வழங்கியதாகவும் அதுவே வனிதா பிக்பாஸில் இருந்து வெளியேற காரணம் என்றும் கூறப்பட்டது.

    காளி டான்ஸின் போது

    காளி டான்ஸின் போது

    வனிதா காளி வேடமிட்டு நடனமாடிய போட்டோக்கள் அண்மையில் வெளியானது. அந்த கெட்டப்பில் வனிதா நடனம் ஆடும் போதுதான் இந்த பிரச்சனை நிகழ்ந்ததாக தகவல் வெளியானது.

    இன்ஸ்டாவில் புரமோஷன்

    இன்ஸ்டாவில் புரமோஷன்

    இந்நிலையில் வனிதா தனது யூட்யூப் பக்கத்தில் காளி மேக்கப் போட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதற்கு புரமோஷனும் செய்துள்ளார் வனிதா.

    ஏன் இந்த வேலை?

    ஏன் இந்த வேலை?

    இதனை பார்த்த ரசிகர்கள் நீங்களே அதில் இருந்து விலகிட்டிங்க... ஆயிரம் விமர்சனங்கள் வச்சுட்டீங்க.. அப்புறம் எதுக்கு அதை வச்சு காசு பார்க்கனும் என விளாசி வருகின்றனர்.

    English summary
    Netizens slams Actress Vanitha Vijayakumar for sharing Biggboss jodigal Video. Vanitha has shared Biggboss jodigal make up video.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X