அனிமல் ஆல்ஃபா மேல் படம் அல்ல சரியான சங்கி படம்.. பிற மதங்களை இழிவுப்படுத்துகிறது.. ஃபேன்ஸ் பகீர்!

சென்னை: அனிமல் விவாதம் சோஷியல் மீடியாவில் கொளுந்து விட்டு எரிந்து வருகிறது. சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் வெளியான அனிமல் திரைப்படம் 900 வசூலை ஈட்டி பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. ஆனால், அதே நேரத்தில் அந்த படத்திற்கு எதிராக பாலிவுட் முதல் கோலிவுட் வரை பல பிரபலங்கள் மற்றும் விமர்சகர்கள் என பலரும் படத்தை மோசமான படம் என கழுவி ஊற்றி உள்ளனர். அதற்கு காரணம் அந்த படத்தில் காட்டப்பட்ட ஆபாசமான காட்சிகள் மற்றும் கொடூரமான காட்சிகள் தான் என்கின்றனர்.

அனிமல் திரைப்படத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல், திரிப்தி திம்ரி, பப்லு பிரித்திவிராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்துமே மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளன. சமீபத்தில் நடைபெற்ற ஃபிலிம் ஃபேர் விருதுகள் நிகழ்ச்சியிலும் ஆறு விருதுகளை அள்ளியது.

Netizens slams Animal not an Alpha male movie, its a purely Sanghi film

அனிமல் கதை என்ன?: அப்பா அனில் கபூர் சுவஸ்திக் எனும் கம்பெனியை நடத்தி வருகிறார். சிறுவயது முதலே அப்பாவின் அன்பிற்காக ஏங்கும் அவரது மகன் ஒரு கட்டத்தில் அக்காவை ராகிங் செய்தவர்களை கல்லூரிக்கு துப்பாக்கி எடுத்துக் கொண்டு சென்று மிரட்டுகிறார். அதன் பின்னர், அப்பா அவரிடம் பேசவில்லை. ஹாஸ்டலில் வளரும் ரன்பீர் கபூர் அனிமலாக மாறுகிறார்.

ராஷ்மிகா மந்தனாவின் நிச்சயத்திற்கும் சென்ற உடனே அவரை பார்த்ததும் காதல் ஏற்பட அவரது மனதை மாற்றி திருமணம் செய்துக் கொள்கிறார். வெளிநாட்டில் வாழ்ந்து வரும் ரன்பீர் கபூர் அப்பாவை யாரோ சுட்டு விட்டார்கள் என தெரிய வந்ததும் வீட்டுக்கு வந்து தனது உறவினர்களை அழைத்துக் கொண்டு பாதுகாப்பு வளையம் அமைத்து எதிரிகளை அப்பாவுக்காக கொன்று குவிப்பது தான் இந்த அனிமல் படத்தின் கதை.

Netizens slams Animal not an Alpha male movie, its a purely Sanghi film

பிரபலங்கள் எதிர்ப்பு: படத்தில் பெண்களை அடிமைப்படுத்தும் காட்சிகள், மோசமாக பேசும் வசனங்கள், நிர்வாணமாக தோட்டத்தில் அனைவரும் பார்க்க ஹீரோ நடந்து செல்வது, மனைவி இருக்கும் போதே இன்னொரு பெண்ணுடன் உடலுறவு கொள்வது மற்றும் ரத்தம் தெறிக்க தெறிக்க எந்தவொரு போலீஸ் விசாரணையே படத்தில் இல்லாமல் தனி உலகத்தில் படத்தின் கதை நடப்பது போல உருவாக்கப்பட்ட இந்த படத்தை பார்த்த ராதிகா சரத்குமார், பாடகர் ஸ்ரீநிவாஸ், ஒளிப்பதிவாளர் சித்தார்த்தா நுனி மற்றும் இந்த படத்தை பார்க்கவே மாட்டேன் என ஆர்ஜே பாலாஜி உள்ளிட்ட பல பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஆல்ஃபா மேல் இல்லை சங்கி: அனிமல் படத்தில் ரன்பீர் கபூர் ஆல்ஃபா மேலாக ஆணாதிக்கம் நிறைந்தவராக காட்டப்படுவது தான் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஆனால், உண்மையிலேயே படத்தில் அவர் ஒரு சங்கி என நெட்டிசன்கள் போட்டு பொளந்து வருகின்றனர். வயசு விருத்திக்காக யாகம் வளர்க்கும் போது கோமியம் குடிக்கும் நாயகன் சர்ச்சுக்கு செல்லும் போது பாவ மன்னிப்பு கேட்க மண்டிப் போட முடியாது என சொல்வதும், வில்லனாக வரும் பாபி தியோல் இஸ்லாம் மதத்தினராக சித்தரித்து 3 பெண்களை திருமணம் செய்வது, அந்த பெண்கள் சிகரெட் பிடிப்பது என காட்சிகள் வேண்டுமென்றே திணிக்கப்பட்டு இருப்பதாகவும் ஸ்வஸ்திக் முத்திரை என அனைத்துமே சங்கித்தனம் தான் என சோஷியல் மீடியாவில் அந்த படத்தை டீகோட் செய்து வருகின்றனர். கோலிவுட் ரசிகர்களுக்கும், டோலிவுட் ரசிகர்களுக்கும் இதனால் கடும் சண்டையே வெடித்து வருகிறது. அர்ஜுன் ரெட்டி படத்திலும் யாகம் வளர்க்கும் காட்சியை சந்தீப் ரெட்டி வங்கா வைத்திருப்பார் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X