கமலையே அட்வைஸ் வேண்டாம் என வாயை மூட சொன்ன அனிதா சம்பத்.. துப்பாத குறையாக திட்டிய நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் அறிவுரை கூறியபோது உங்களின் நேரத்தை வீணாக்காதீர்கள் என்று கூறிய அனிதா சம்பத்தை நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் அனிதாவை வறுத்தெடுத்தார் கமல்ஹாசன். பாசிப்பருப்பில் ஆரம்பித்து புளிசாதம் வரை தொடர்ந்தது பிரச்சனை.

ரியோவின் குற்றச்சாட்டுக்களை கேட்டு அனிதாவை விசாரித்தார் கமல். அப்போது நீங்கள் உடனே அழுதுவிடுகிறீர்கள், எமோஷனல் ஆகிவிடுகிறீர்கள் என்றார்.

கடுப்பான ரசிகர்கள்

கடுப்பான ரசிகர்கள்

அதற்கு உடனே சார் நீங்கள் உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள் என்றார் அனிதா. கமலிடம் அனிதா இப்படி முகத்தில் அடித்தது போல் பேசியது ஹவுஸ்மெட்ஸ் மட்டுமின்றி மொத்த ரசிகர்களையும் கடுப்பாக்கி விட்டது. சமூக வலைதளங்களில் அனிதாவை சரமாரியாக கழுவி ஊற்றி வருகின்றனர்.

அழகு முக்கியமில்லை

அழகு முக்கியமில்லை

உடல் வெளிப்புற தோற்றத்தில் அழகாக இருக்கும் இளைஞர்களுக்கு அனிதா ஒரு முக்கிய உதாரணம்..
அவர் ஒரு நல்ல பாடம் புகட்டிவிட்டார், வெளிப்புற அழகு மட்டும் வாழ்க்கைக்கு போதுமானதாக இல்லை உள் அழகு மிக முக்கியமானது.. என்பதை நிரூபித்துவிட்டார் என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

டிராமா பண்றது..

டிராமா பண்றது..

அனிதா ரொம்ப இரிட்டேட்டிங்.. எப்போ கமல் சார்க்கிட்ட இந்த டாப்பிக் பேசி உங்க டைம் வேஸ்ட் பண்ண வேண்டாம் சார்ன்னு சொல்லுது சார்.. கமல் சார் அனிதாவுக்கு அவருடைய பிரச்சனையை பேச இடம் கொடுக்கிறார்.. ஆனால் அனிதா அதனை மறுக்கிறார். அப்புறம் எனக்கு யாரும் ஸ்பேஸ் கொடுக்கலன்னு டிராமா பண்றது.. என விளாசியுள்ளார்.

மோஸ்ட் இரிட்டேட்டிங் அவார்டு

மோஸ்ட் இரிட்டேட்டிங் அவார்டு

இந்த சீசன் முடியும் பேது பிக்பாஸ் எங்கள் தலைவி அனிதாவுக்கு மோஸ்ட் இரிட்டேட்டிங் அவார்டு கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

ஹர்ட் ஆகியே செத்துருவா..

ஹர்ட் ஆகியே செத்துருவா..

அனிதா சம்பத் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக இருந்தால் என்ன ஆகும் என கற்பனை செய்து பாருங்கள்.. ஹர்ட் ஆகியே செத்துருவா... என கலாய்த்துள்ளார் இந்த நெட்டிசன்.

போய் உட்காந்துருவா..

போய் உட்காந்துருவா..

அதற்கு பதிலளிக்கும் வகையில் எனக்கு சமைக்க ஸ்பேஸ் கொடுக்கல அதுனால நான் சமைக்கலன்னு சொல்லிட்டு போய் உட்காந்துருவா.. என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

அது நல்லதுக்கு இல்லை

அது நல்லதுக்கு இல்லை

சுமங்கலி பிரச்சனையில் கமல்ஹாசன் அனிதாவை புகழ்ந்ததால் சந்தோஷப்பட்டார். அதேபோல் அட்வைஸ் செய்யும்போதும் அனிதா அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். கமல் அதை கடுமையாக கூட சொல்லவில்லை. ஷார்ட் டெம்பராக இருக்கக்கூடாது, உடனே அழக்கூடாது என்றுதான் கூறினார். ஆனால் அவர் அப்செட் ஆகிவிட்டார். அது நல்லதுக்கு இல்லை.. என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்

வாயை மூட சொல்லுது

வாயை மூட சொல்லுது

அனிதா சம்பத் கமலை விட அதிகம் சாதிச்சுட்டுள்ள அதான் அவரையே வாய மூட சொல்லுது.. அனிதாவோட கேரக்டராலேயே அது வாழ்க்கையில தோற்க போகுது என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X