Vijay: விஜய்க்கு ஆதரவாக பேசிய அந்தணன்.. வெச்சு விளாசும் இணையவாசிகள்.. இந்த பாயிண்ட் நல்லா இருக்கே

சென்னை: தளபதி விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படமான ஜன நாயகன் நாளை மறுநாள் வெளியாகும் என்று எதிர்பார்க்க பட்டாலும், சென்சார் இன்னும் கிடைக்காததால் ரசிகர்கள் குழப்பத்திலேயே இருக்கிறார்கள். இப்படி இருக்கையில் ஜன நாயகனா? பராசக்தியா? என்ற பஞ்சாயத்து தொடர்ந்து ஓடிக் கொண்டே இருக்கிறது. விஜய்க்கு ஆதரவாக பத்திரிகையாளர் அந்தணன் தெரிவித்த கருத்துக்கு இணையவாசிகள் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

அந்தணன் பேசும்போது, ஜன நாயகன் விஜயின் கடைசி படம் என்று தெரிவித்துவிட்டு படத்தை ரிலீஸ் செய்கிறார். அப்படி இருக்கும்போது சிவகார்த்திகேயன் வேண்டும் என்றே தனது படத்தை ரிலீஸ் செய்கிறார். விஜய் போன்ற உச்ச நட்சத்திரத்துடன் மோதி, லாபம் என்றாலும் நஷ்டம் என்றாலும் அதன் மூலம் சிவகார்த்திகேயனுக்கு நல்லது தான். விஜயின் மேனேஜர் ஜெகதீஷ் இடம் அவர் பேசினாரா? என்பதிலேயே சந்தேகம் உள்ளது என்று தெரிவித்தார். மேலும் அவர் ரஜினியோ, அஜித்தோ இதுதான் தனது கடைசி படம் என்றால் சிவகார்த்திகேயன் படத்தை ரிலீஸ் செய்வாரா? அது தானே அவர்களுக்கு கொடுக்கும் மரியாதையாக இருக்கும் என்ற கேள்வியை எழுப்பினார்.

Netizens Slams Anthanan Who Supported Vijay Jana Nayagan And Provoke Sivakarthikeyan Parasakthi
Photo Credit:

விமர்சனம்: இவரது அந்த பேட்டிக்கு இணையவாசிகள் பலரும் தங்களது விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்கள். அதாவது ஒரு இணைய வாசி, " கோலி தன்னோட கடைசி ஆட்டத்தை ஆடுகிறார் என்றால் எதிரணியில் இர்ப்பவர்கள் கோலி அடித்த பந்து கேட்ச்க்கு வந்தால் விட்டுவிடுவார்களா என்ன? என்ற கேள்வியை எழுப்பி உள்ளார். இது மட்டும் இல்லாமல், விஜய் ரசிகர்கள் ஏன் இந்த அளவுக்கு புலம்பிக் கொண்டு இருக்கிறார்கள். மேலும், நேற்று வந்த சிவகார்த்திகேயனைப் பார்த்து புலம்புகிறார்கள், ஆனால் 75 ஆண்டு கால கட்சியான திமுகவைப் பார்த்து எதிரி என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள் என்று விமர்சித்துள்ளார். இவரது இந்த கேள்வி லாஜிக் சரியாக உள்ளதே என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

சிவகார்த்திகேயன்: ஜனநாயகன் படத்துடன் மோதுவது எங்கள் எண்ணம் கிடையாது. பொங்கல் விடுமுறை கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு மேல் உள்ளது. எனவே இரண்டு படங்களுமே நன்றாக ஓட போதிய கால கட்டம் உள்ளது என்று விஜயே தெரிவித்தார் என்று சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவில், சிவகார்த்திகேயன் பேசி இருந்தார்.

Netizens Slams Anthanan Who Supported Vijay Jana Nayagan And Provoke Sivakarthikeyan Parasakthi
Photo Credit:

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X