கடைசியில என் கையால சாப்பிடாமலேயே போயிட்டாரு.. கண்ணீர் விட்ட அர்ச்சனா.. கழுவி ஊற்றிய நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சுரேஷ் வெளியேறிய போது தான் சமைத்ததை சாப்பிடாமலே போகிறார் என கண்ணீர்விட்டார் அர்ச்சனா.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் வயதில் மூத்தவராக இருந்தவர் சுரேஷ் சக்கவர்த்தி.

ஆனால் யாரிடமும் மரியாதையை எதிர்பார்க்காமல் சரி சமமாக பழகி வந்தார். பல இளம் போட்டியாளர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் விளையாடினார்.

கட்டிப்பிடித்து பிரியாவிடை

கட்டிப்பிடித்து பிரியாவிடை

சமூக வலைதளங்களிலும் சோஷியல் மீடியாவிலும் அதிக ஆதரவை பெற்ற சுரேஷ் சக்கரவர்த்தியின் வெளியேற்றம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சுரேஷ் சக்கரவர்த்திக்கு ஹவுஸ்மேட்ஸ் கட்டிப்பிடித்து பிரியாவிடை கொடுத்தனர்.

சாப்பிடாமலேயே போய்விட்டார்

சாப்பிடாமலேயே போய்விட்டார்

கேபி, தாத்தாவை ரொம்பவே மிஸ் பண்ணியதும் அழுததும் நன்றாக தெரிந்தது. கேபியை தொடர்ந்து அர்ச்சனாவும் கண்ணீர் விட்டார். சற்று தொலைவிலேயே இருந்தார் அர்ச்சனா. அப்போது சக ஹவுஸ்மேட்டான அனிதாவிடம் நான் சமையல் செய்ததை சாப்பிடமலே போய்விட்டார் என கண்ணீர் விட்டார்.

சாப்பிடாத சுரேஷ்

சாப்பிடாத சுரேஷ்

கடந்த சில நாட்களாக அர்ச்சனாவுடன் ரூல் சம்பந்தமாக ஏற்பட்ட மனக்கசப்பை தொடர்ந்து அர்ச்சனா சமைத்த எதையுமே சுரேஷ் சக்கரவர்த்தி சாப்பிடவில்லை. தண்ணீர் ஊற்றியும், நிஷா சமைத்ததையுமே சாப்பிட்டார் சுரேஷ் சக்கரவர்த்தி.

நீலி கண்ணீர் வரல

நீலி கண்ணீர் வரல

இந்நிலையில் சுரேஷ் சக்கரவர்த்தி கிளம்பும் போது அர்ச்சனா அழுததை பார்த்த நெட்டிசன்கள் அவரை விளாசியுள்ளனர். அர்ச்சனாவுக்கு ட்ரை பண்ணாலும் நீலி கண்ணீர் வரல அப்புறம் எதுக்கு வேஸ்ட்டா ட்ரை பண்ணிட்டு என்கிறார் இந்த நெட்டிசன்.

புரிந்து கொள்ள வேண்டும்

புரிந்து கொள்ள வேண்டும்

அர்ச்சனா வந்த பிறகுதான் சுரேஷ் தன்னுடைய பர்ஃபாமன்ஸையே நிறுத்தி விட்டார். சோம சேகரும் மற்றவர்களும் இதனை விரைவில் புரிந்துகொள்ள வேண்டும் என கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X