பிரியங்காதான் பெஸ்ட்.. நீங்க கிளம்புங்க.. அர்ச்சனாவை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிரியங்காதான் பெஸ்ட் நீங்க கிளம்புங்க என்று அர்ச்சனாவை விளாசி தள்ளியுள்ளனர் நெட்டிசன்கள்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தவர் அர்ச்சனா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அன்புதான் ஜெயிக்கும் என தனது தலைமையில் ஒரு கேங்கை உருவாக்கி விளையாடி வந்தார் அர்ச்சனா.

ஆரியை கண்டாலே

ஆரியை கண்டாலே

அன்பு கேங்கை சேர்ந்தவர்கள் தங்களின் கேங்கை சேராத மற்ற போட்டியாளர்களை வாரா வாரம் நாமினேஷன் புராசஸுக்காக நாமினேட் செய்து வந்தனர். குறிப்பாக அர்ச்சனாவுக்கு பிக்பாஸ் வீட்டில் ஆரியை கண்டாலே பிடிக்காமல் இருந்தது.

தகாத வார்த்தைகள்

தகாத வார்த்தைகள்

இதனால் கிடைக்கும் கேப்பில் எல்லாம் அவரைப் பற்றி சக ஹவுஸ்மேட்டுகளிடம் புலம்பித் தீர்த்தார். மேலும் சில நேரங்களில் தகாத வார்த்தைகளையும் பயன்படுத்தியிருக்கிறார் அர்ச்சனா.

விஜய் டிவி ஆங்கர்

விஜய் டிவி ஆங்கர்

மேலும் ஆரி எவிக்ஷனில் இருந்து சேவ்வானபோது கடவுள் இருக்கானா குமாரு என்று சக போட்டியாளர்களிடம் கேட்டு ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்த நிலையில் அர்ச்சனா விஜய் டிவியிலேயே ஆங்கர் ஆகிவிட்டார்.

மகிழ்ச்சியான தொகுப்பாளர்

மகிழ்ச்சியான தொகுப்பாளர்

காதலர் தினத்தன்று ஒளிப்பரப்பான காதலே காதலே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் அர்ச்சனா. இந்நிலையில் தான் சிவப்பு நிற உடையில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய போட்டோக்களை ஷேர் செய்துள்ள அர்ச்சனா, ஒரு மகிழ்ச்சியான தொகுப்பாளருக்கு பின்னால் அவருடைய மகிழ்ச்சியான ஆடைதான் உள்ளது என்று கேப்ஷன் கொடுத்துள்ளார்.

க்யூட் குமாரு..

க்யூட் குமாரு..

அர்ச்சனாவின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள், க்யூட் குமாரு என்றும் அழகா இருக்கிறீர்கள் என்றும் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர். இன்னும் சிலர் மீண்டும் ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கே வந்து விடுங்கள் என் கேட்டு வருகின்றனர்.

எதையும் மறக்கவில்லை

எதையும் மறக்கவில்லை

அதேநேரத்தில் சில நெட்டிசன்கள் தயவு செய்து ஜீ தமிழுக்கே சென்றுவிடுங்கள் என்றும் பிக்பாஸில் நீங்கள் நடந்து கொண்டதை நாங்கள் இன்னும் மறக்கவில்லை என்றும் பிரியங்காதான் எப்போதும் பெஸ்ட் என்றும் சாடியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X