ஆரியின் பெயரை சொல்லாவிட்டால் இந்த டம்மி மம்மிக்கு தூக்கமே வராதுபோல.. விளாசும் நெட்டிசன்ஸ்!
சென்னை: நாமினேஷன் என்றாலே ஆரியின் பெயரை சொல்லும் அர்ச்சனாவை நெட்டிசன்கள் கழுவி ஊற்றியுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோவில் சுவாரசியம் குறைவான போட்டியாளருக்கான நாமினேஷன் நடைபெற்றது.
இதில் அர்ச்சனா ஆரியின் பெயரை நாமினேட் செய்தார். ஆரி எந்த மெத்தடாலஜியை கொண்டு வந்தாலும் சரியில்லை என்று குறை சொல்வது பிடிக்கவில்லை என்றார்.

ஆரியின் பெயர்தான் அர்ச்சனாவுக்கு
வாரந்தோறும் எவிக்ஷனுக்கான நாமினேஷன் என்றாலும் சரி வொர்ஸ்ட் பர்ஃபாமருக்கான நாமினேஷன் என்றாலும் சரி அர்ச்சனா ஆரியின் பெயரை நாமினேட் செய்வதையே வாடிக்கையாக கொண்டுள்ளார். இதனை கவனித்த நெட்டிசன்ஸ் அர்ச்சனாவை விளாசி தள்ளியுள்ளனர்.

பெஸ்ட் பர்ஃபாமர் கொடுங்கப்பா
இந்த வாரம் வொர்ஸ்ட் பர்ஃபாமராக ஷிவானி ஜெயிலுக்கு அனுப்பப்பட்டதை பார்த்த இந்த நெட்டிசன், மிக்சர் மட்டுமே சாப்பிட்ட சிவானிக்கு பெஸ்ட் பர்ஃபாமர் கொடுங்கப்பா என கிண்டலடித்துள்ளார்.

டீலுக்கு ஒத்துக்கலைன்னா?
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஷிவானியை ஜெயிலுக்கு அனுப்பியது சரி, கேப்ரில்லாவை எப்படி அனுப்பினார்கள்? அவர் டாஸ்க்கை சரியாகத்தானே செய்தார்? இவங்க போட்ட நரி டீலுக்கு ஒத்து வரலனு போட்டாங்களா? என கேட்டுள்ளார்.

துணிச்சலாக விளையாடுபவர்
அன்பால் எமோஷனல் பிளாக் மெயில் பண்ணுபவர் அர்ச்சனா..
பயம் இல்லாம துணிச்சலாக விளையாடுபவர்.. ஆரி பாலா.. என புகழ்ந்துள்ளார் இந்த நெட்டிசன்.

தூக்கமே வராது டம்மி மம்மிக்கு
அர்ச்சனா ஆரியின் பெயரை சொன்னதை பார்த்த இந்த நெட்டிசன், ஆரியின் பெயரை சொல்லவில்லை என்றால் இந்த டம்மி மம்மிக்கு தூக்கமே வராதுபோல! என விளாசியுள்ளார்.

அப்படி ஒரு ஆசை வேறு
இன்ஸ்டாகிராம் இம்சைகளை வைத்துதான் உள்ளே போன!... எதுவும் பண்ணாமலேயே முதலில் சேவ் ஆகனும் ஆசை வேறு!... ஆட ஏம்மா நீ வேற, மிக்சர் சாப்பிடவே உனக்கு நேரம் போதல! என ஷிவானியை விளாசியுள்ளார் இந்த நெட்டிசன்.

ஆரி மேல பயம் அர்ச்சனாவுக்கு..
அர்ச்சான ஆரியின் பெயரை நாமினேட் செய்ததை பார்த்த இந்த நெட்டிசன், எப்ப பாரு ஆரி ஆரினு.. அர்ச்சானாவுக்கு ஆரி மேல பயம் அது அவளோட செய்கையில் நல்லா தெரியுது என சாடியுள்ளார்.

ஆரி என்ன பாலாஜியா?
ஏம்மா ஷிவானி குற்றச்சாட்டு வைக்காம எப்படி நாமினேஷன் பண்ணமுடியும் ஆரி என்ன பாலாஜியா கண்ணமூடிகிட்டு உன்ன பெஸ்ட் பர்ஃபாமருன்னு சொல்ல என்று கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











