அண்ணன் தங்கை கேரக்டரையே அசிங்கபடுத்திய பயில்வான், மிக்சர் முழுங்கி.. கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸின் பாட்டி சொல்லை தட்டாதே டாஸ்க்கில் அண்ணன் தங்கைகளாக இருந்த பாலாஜியும் ஷிவானியும் செய்த வேலையை பார்த்து காண்டாகி விட்டனர் நெட்டிசன்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று தீபாவளி ஸ்பெஷலாக பாட்டி சொல்லை தட்டாதே டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் பாலாஜிக்கும் ஷிவானிக்கும் அண்ணன் தங்கை கேரக்டர் கொடுக்கப்பட்டது.
ஏற்கனவே ரெண்டு பேருக்கும் காதல் என கிசுகிசுக்கப்படுகிறது. இருவரும் மாறி மாறி ஊட்டி விடுவதும் மாசாஜ் செய்வதுமாய் இருந்து வருகின்றனர்.

தடவிய பாலாஜி
இந்நிலையில் நேற்றைய டாஸ்க்கில் அண்ணன் தங்கை கேரக்டர் கொடுக்கப்பட்டதும் இருவரும் நகரவே இல்லை. குறிப்பாக பாலாஜி ஷிவானி மீது கை வைத்து தடவியப்படியே இருந்தார். இதனை பார்த்த நெட்டிசன்கள் அண்ணன் தங்கை உறவையே அசிங்கப்படுத்தி விட்டதாக விளாசியுள்ளனர்.

நல்லா வௌங்கும்டா..
ஷிவானியும் பாலாஜியும் செய்த வேலையை பார்த்த இந்த நெட்டிசன், கொடுத்த அண்ணன் தங்கை கேரக்டரையே அசிங்கபடுத்திய பயில்வான், மிக்சர் முழுங்கி சிவானி!!... நல்லா வெளங்கும்டா.. என கூறியுள்ளார்.

பாலாஜியும் ஷிவானியும்தான்
நேற்றைய எபிசோடை பார்த்த இந்த நெட்டிசன், இந்த தமிழ் நாட்டுலயே.. ஏன் இந்த இந்தியாவிலேயே.. அது எதுக்கு இந்த உலகத்திலேயே.. அண்ணன் தங்கச்சிக்கு ஒரு எடுத்து காட்டு யாருன்னா அது நம்ம பாலாஜியும் ஷிவானியும்
மட்டும்தான் என கலாய்த்துள்ளார்.

ரெட் கார்டுக்கு தகுதியானவர்
மற்றொரு நெட்டிசனான இவர், பாலாஜி முருகதாஸ், ரெட் கார்டு பெற தகுதியானவர், அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என கூறியுள்ளார்.

கொச்சைப்படுத்துறீங்க..
பாலாஜி மற்றும் ஷிவானி நீங்க ரெண்டு பேரும் உங்கள நீங்களே அசிங்கப்படுத்துறது மட்டும் இல்லாம அண்ணன் தங்கச்சி உறவையே கொச்சை படுத்துறீங்க.. வொர்ஸ்ட் என குறிப்பிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

பார்க்க சகிக்கலை
பாலாஜியையும் ஷிவானியையும் பாசமா இருக்க சொன்னா கசமுசாவா இருக்கீங்க.. டேய் பிக்பாஸ் அவங்க ரோலை யாரையாவது மாத்தி தொலை.. பார்க்க சகிக்கலை என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

கேவலமா பண்றாங்க..
அண்ணன் தங்கச்சி மாதிரி இருக்க சொன்னா டெய்லி பண்றத விட கேவலமா பண்ணிட்ருக்காங்க என்று விளாசியுள்ளார் இந்த நெட்டிசன்.

தடவும் வீடியோ
எப்பா..பாலாஜி முருகதாஸ்.. நீ ஷிவானி
தங்கச்சியை நல்லா பார்த்துக்கிட்டே.. என பாலாஜி ஷிவானியை தடவும் வீடியோவை ஷேர் செய்து நக்கலடித்துள்ளார் இந்த நெட்டிசன்,


Click it and Unblock the Notifications











