Just In
- 9 min ago
பிரியா ஆனந்தின் க்யூட்டான படுக்கையறை செல்ஃபி.. திணறும் இணையதளம்!
- 3 hrs ago
ஸ்கூல் பாப்பா மாதிரி இருக்கீங்க.. லாஸ்லியாவின் நியூ போட்டோ ஷுட்டை பார்த்து ஜொள்ளுவிடும் ஃபேன்ஸ்!
- 12 hrs ago
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- 12 hrs ago
விமல் நடிக்கும் படத்தின் பூஜை இன்று இனிதே துவங்கியது !
Don't Miss!
- News
சென்னை மெரினா சாலையில் தேசிய கொடியேற்றினார் ஆளுநர்.. வீர தீர விருதுகளை வழங்கிய முதல்வர்
- Automobiles
இந்தியாவில் இப்படிப்பட்ட டுகாட்டி பைக் விற்பனைக்கு வருகிறதா?! இத்தாலியில் தயாராகிறது!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 26.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகப்பெரிய நிதி நன்மையைப் பெற வாய்ப்பிருக்காம்…
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இது பிக்பாஸ் ஷோவா? மிருகக்காட்சி ஷோவா? சைக்கோ பாலாவை வெளியேற்றுங்கள்.. கொதிக்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவை பார்த்த ரசிகர்கள் கொதித்து போயுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் வெள்ளிக்கிழமை இரவு நடந்த காட்சிகள் காட்டப்பட்டன.
'நம்ம செவனாண்டி பெத்த பொண்ணா இது? ஆச்சரியமா இருக்கே..' ஊதா கலரு ரிப்பனை அப்படி வியக்கும் ரசிகர்கள்
இதில் தூங்கப் போகும் ஆரியிடம், பல வாரங்களுக்கு முன்பு கூறிய காதல் கண்ணக்கட்டுது என்று கூறியதை வைத்து வம்பிழுக்கிறார் பாலாஜி.

துப்பாத குறையாக..
கோபத்தில் ஆரியை அடிப்பதை போல் தலையணையை தூக்கி அடித்து நிதானமிழந்து நடந்து கொள்கிறார் பாலாஜி. மேலும் போயா வாயா என்றும் பேசுகிறார். இதனை பார்த்த ரசிகர்கள் பாலாஜியை துப்பாத குறையாக திட்டி தீர்த்து வருகின்றனர். மேலும் முதல்ல பாலாஜியை வெளியேற்றுங்கள் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

வெளியே அனுப்புங்கடா..
முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், யோவ்!.பிக்பாஸ்!.. பைத்தியகார பயில்வானை எல்லாம் வச்சுகிட்டு ஏன்டா ஷோ நடத்துறீங்க அவனை வெளியே அனுப்புங்கடா! என பதிவிட்டுள்ளார்.

எங்க பிபியே ஏத்தாதீங்க..
இன்றைய புரமோவில் பாலாஜியின் நடத்தையை பார்த்த இந்த நெட்டிசன், டேய்.. முதல்ல இந்த சைக்கோவ வெளியே அனுப்புங்கடா.. எங்க பிபியே ஏத்தாதீங்க.. ஆரிக்கு இருக்க கிரேஸ்ஸ பாத்து வேணும்னே வம்பிழுக்குறான்.. அதுக்கு மேல இந்த விஷப்பூச்சி ரம்யா.. இந்த ரெண்டு பைத்தியங்களையும் வெளியேத்தனும் முதல்ல என பதிவிட்டுள்ளார்.

ஆண்டவரு சரியில்லை
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இந்த ஆண்டவரு சரியில்லை!.. ஆரம்பத்திலேயே இந்த சோம்பேறி பாலாவை மண்டையில இரண்டு அடி வச்சு இருந்தா இப்படி பண்ணுவானா?.. அவன் எது செய்தாலும்.. ஹாஹாஹான்னு சிரிச்சிகிட்டே போவாரு இந்த கமலு என பதிவிட்டுள்ளார்.

எப்போவோ போயிருப்பான்
கமலை ரசிகர்கள் திட்டுவதை பார்த்த இந்த நெட்டிசன், கமல் சார் என்ன பண்ணுவாரு? விஜய் டிவி சொல்றதை செய்றாரு. அப்பிடி நியாயம் பார்த்து இருந்தா இந்த கெட்ட பாலா எப்போவோ எலிமினேட் ஆகி போயிருப்பானே? என்று பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

முற்றுப்புள்ளி வையுங்க
முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அடேய் பாலாஜி நீ வேணும்னே சண்டைக்கு போகுற மாதிரி தெரியுது.. ஒன்னு நல்லா தெரியுது நீ ஷிவானி அம்மா உன்கூட பேசாத கோவத்திலும் அவங்க அம்மா ஆரிக்கிட்ட பேசுன விதத்தையும் பாத்து ஒரு மாதிரி மெண்டல் பிரசர்ல இருக்குற. கமல் இந்த சண்டைக்கு முற்றுப்புள்ளி வைங்க என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

ஆரி பேசக்கூடாது..
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இவரு பாலாஜி தான் காதல் கண்ணு கட்டுதே ஏன்னு ஷிவானி கூப்பிட்டு வந்து கேப்பாரு.. ஆனா ஷிவானி டாப்பிக் பத்தி ஆரி பதில் பேச கூடாது.. என பாலாஜி நடந்து கொண்ட விதத்தை விளாசியுள்ளார்.

மிருகக்காட்சி ஷோவா?
புரமோவில் பாலாஜி கொடூரமாக நடந்து கொள்வதை பார்த்த இந்த நெட்டிசன், ஏன்டா இது பிக்பாஸ் ஷோவா? மிருககாட்சி ஷோவா? அந்த சைக்கோ பாலாவை வெளியே அனுப்புங்க! என் பதிவிட்டுள்ளார்.

உள்ளுக்குள்ள உதறல்..
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இந்த பைத்தியத்தை ரெட் கார்டு கொடுத்து வெளில அனுப்புங்க... குழந்தைங்க வயசானவங்கன்னு உலகம் முழுக்க இந்த நிகழ்ச்சிக்கு ஆடியன்ஸ் இருக்காங்க. இப்படி வெறி பிடிச்ச மிருகம் மாதிரி இருக்க இவனைப் பார்த்து மிரண்டு போயிட போறாங்க. இரண்டு நாளாய் பார்க்கிறவங்களுக்கு உள்ளுக்குள்ள ஒரு உதறல் இருக்கு என்று பதிவிட்டுள்ளார்.

ஆரியும் ஜிம்பாடிதான்டா...
பிக்பாஸ் புரமோவையும் நிகழ்ச்சியையும் பார்த்த இந்த நெட்டிசன், ஒரு மனுசன் எவ்வளவு தூரம் பொறுத்து போகமுடியும்? சைக்கோ பாலாபோல் ஆரியும் அடிதடியில் இறங்கினால் என்ன ஆகும்?... ஆரியும் ஜிம்பாடிதான்டா!.. ஆனா பொறுமையா இருக்காரு!.. ஆரி நீ கிரேட்யா! என்று பதிவிட்டுள்ளார்.

பார்வையாளர்களை பாதிக்கும்
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஆரிக்கு இவ்வளவு மன அழுத்தத்தை கொடுக்கக்கூடாது.. இதை சேனலும் ஆதரிக்கக்கூடாது.. எவன் செத்தா என்ன? பத்தி எரியட்டும்னு இருக்கானுங்க.. இதுபோன்ற சம்பவங்கள் பார்ப்பவர்களின் மனதையும் பாதிக்கும்.. என கூறியுள்ளார்.