இங்க ஒண்ணு பேசு அப்புறம் இவங்களுக்கே குழிப்பறி.. புரமோவை பார்த்து பாலாஜியை விளாசும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Recommended Video
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவில் ஆரி, அனிதா, பாலாஜி மற்றும் ஷிவானி ஆகியோர் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
அப்போது பேசும் ஆரி, இன்டிவிட்ஜுவலா விளையாடுறவங்களையெல்லாம் வெளியே அனுப்பிட்டுருக்காங்க என்று குமுறுகிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இவங்களுக்கே குழிப்பறி
நல்லா நாலு பேரும் உட்கார்ந்து பேசுவீங்க!
ஒரு சண்டை வந்துச்சுனா நீங்க 3 பேரும் அடிச்சுக்குவீங்க!
பாலாஜி நீ தான் இன்டிவிட்ஜுவல் பிளேயர்ஸ போட்டு தள்ளுரதே.. இங்க ஒண்ணு பேசு அப்புறம் இவங்களுக்கே குழிப்பறி! என்று விளாசியுள்ளார் இந்த நெட்டிசன்.

மாட்டிக்கப்போறாரு...
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அது சரி ஷிவானிக்கே சங்கு ஊதுற ஆள் தானே! உன்ன நம்பி ஆரி எதாவது சொல்லி மாட்டிக்கப்போறாரு! என்று கூறியுள்ளார்.

அர்ச்சனா குரூப்புன்னு போடுய்யா..
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், யோவ்!... கப்புல நல்லா பெரிய எழுத்துல "அர்ச்சனா குரூப்பு"னு பேரை போடுய்யா என கலாய்த்துள்ளார்.

வேல் கேங்தான் வின் பண்ணும்
ஆரி சொல்றது கரெக்ட்தான், இன்டிவிட்ஜூவல் ப்ளேயர்ஸ்தான் வெளில போய்ட்டு இருக்கிறாங்க.. ஆரி தான் வின்னர் இது மக்கள் தீர்ப்பு.. தீர்ப்பை மாத்தினால் சேனல் தப்பு. பாக்குறதுக்கும் வோட் போடுறதுக்கும். அடுத்த யாரு ஆரி இல்லை ரம்யா போகலாம். ஆனால் வேல் கேங்தான் டைட்டில் வின் பண்ணும் என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

பல பேருக்கு தோணும்போல..
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன் மிக்சர் சாப்பிட்டா சேவ் ஆகிடலாம்னு பல பேருக்கு உள்ளே தோணும்போல! என்று கூறியுள்ளார்.

இனி உடைக்க கஷ்டம்
இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், மர மண்டைக்கு இப்போ தான் புரியுது.. அன்பு டீம் ஸ்ட்ராங் ஆகி இனி உடைக்க கஷ்டம்.. உங்க டைம் போய்ச்சு

தேவையில்லாத ஆணி
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், ஆரி & பாலாஜி.. சேர்ந்துட்டாங்க.. அன்பு குரூப்க்கு ஆப்பு இருக்கு போல.. அன்பு குரூப்ல மூணு பேரு தேவை இல்லாத ஆணி எல்லாத்தையும் தொரத்தி விடணும் என்று கூறியுள்ளார்

இப்போவாச்சும் எதிர்ப்பீங்களா?
அய்யா ஆரி, இதானா சாமி உங்க டக்கு. இதை சுரேஷ் ஆரம்பத்துலயே சொன்னார். பாலா அடிக்கடி சொல்லி இருக்கான். பாலாவோட பகை கண்ணை மறைச்சிடுச்சி போல. சரி, இப்போவாச்சும் அன்பு குரூப்பை எதிர்ப்பிங்களா? இல்ல, அதே வழ வழ கொழ கொழ அணுகுமுறை தானா? நம்ம கமல் சார் மாதிரி என்று கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











