சாவு வீடுன்னா பிணம்.. கல்யாண வீடுன்னா மாப்பிள்ளை.. என்ன மனநிலை.. பாலாவை கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் பாலாஜியை துப்பாத குறையாக திட்டி தீர்த்துள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவில் பாலாஜி, சனம் ஷெட்டிக்கு ஆதரவாய் பேசினார்.

நேற்றெல்லாம் சனம் ஷெட்டியுடன் மல்லுக்கு நின்ற பாலாஜி இன்று இப்படி அந்தர் பல்டி அடித்திருப்பது ஹவுஸ்மேட்ஸ்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

பாலாஜி அட்ராசிட்டி

பாலாஜி அட்ராசிட்டி

புரமோவை பார்த்த பார்வையாளர்களும் என்னடா நடக்குது என குழம்பியுள்ளனர். பாலாஜி எல்லோரையும் சீண்டி விட்டு தான் மட்டும் பலராலும் பார்க்கப்பட வேண்டும், புரமோ, நிகழ்ச்சி என எல்லாவற்றிலும் தானே முன்னிலையாக இருக்க வேண்டும் என நினைக்கிறார் என கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

பயில்வான் குதிக்கிறாப்புல

பயில்வான் குதிக்கிறாப்புல

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இந்த பிக்பாசுல போடற சண்டைக்கு ஏற்ற மாதிரி காசு கொடுப்பாங்களாம்!... அதனாலதான் இந்த பயில்வான் இப்படி குதிக்கிறாப்புல! என கூறியுள்ளார்.

டார்கெட் பண்றாங்க

டார்கெட் பண்றாங்க

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், பாலாஜிய.. வைச்சு செய்ய சொன்னார் போல பிக்பாஸ் அதனால எல்லாம் சேர்ந்து பாலாஜி டார்கெட் பண்றாங்க.. என டிவிட்டியுள்ளார்.

வடை மட்டும் சுடுவாரு..

வடை மட்டும் சுடுவாரு..

மற்றொரு நெட்டிசனான இவர், இந்த பயில்வான் வாயிலேயே வடை மட்டும் சுடுவாரு! என பாலாஜியை திட்டியுள்ளார்.

இப்படி பண்றீங்களேம்மா?

இப்படி பண்றீங்களேம்மா?

பிக்பாஸின் இன்றைய கோர்ட் டாஸ்க்கில் சுச்சி ஜட்ஜாக இருப்பதை பார்த்த இந்த நெட்டிசன், ஏம்மா இந்த சுசித்ரா எல்லாம் ஜட்ஜாமா, என்னமா நீங்க இப்படி பண்றீங்களேம்மா என கிண்டலடித்துள்ளார்.

நல்லாருக்கே. .

நல்லாருக்கே. .

புரமோவில் பாலாஜி சுரேஷிடம் சண்டை போடுவதை பார்த்த இந்த நெட்டிசன், ஓ.. சண்டைக்குள்ளே ஒரு சண்டையா!... நல்லாயிருக்கே!. என கிண்டலாக டிவிட்டியுள்ளார்.

மிக்சர் ரெடி பண்றாங்க

மிக்சர் ரெடி பண்றாங்க

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இந்த சிவானி, கேப்பி, ஆஜித், ரமேசு, என்னப்பா பண்றாங்க.. ஓ.. அவங்களா! அவங்க வாயில்லா ஜீவன்கள்!... ஆதனால ஒரு ஓரமா உர்காந்து தீபாவளிக்கு மிக்சர் ரெடி பண்றாங்க!. என கலாய்த்துள்ளார்.

ஜெயில்ல போடுங்க

ஜெயில்ல போடுங்க

பிக்பாஸ் வீட்டில் பாலாஜி செய்யும் ரகளையை பார்த்த இந்த நெட்டிசன், யுவர் ஆனர்.. அந்த பயில்வானை புடிச்சி ஜெயில்ல போடுங்க.. என கூறியுள்ளார்.

பலி கடாவாகிறதே..

பலி கடாவாகிறதே..

புரமோவின் ஒரு ஷாட்டை ஷேர் செய்துள்ள இந்த நெட்டிசன், ஆடுகளே ஆடுகளே ஓநாய்க்கு தானே போய் பலிகடாகிறதே!!! உங்க எதிரி எதிரில் இல்லங்க உங்களுக்கு நடுவுல என யாரையோ குறிப்பிட்டுள்ளார்.

மாச கணக்கில்

மாச கணக்கில்

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இவங்க இரண்டு பேரும் மாசக்கணக்கில் ரிஹர்சல் பாத்திட்டு வந்த மாறியே இருக்கு! என பாலாஜி மற்றும் சனம் ஷெட்டியின் போட்டோவை ஷேர் செய்து கூறியுள்ளார்.

கல்யாண வீடுன்னா மாப்பிள்ளை

கல்யாண வீடுன்னா மாப்பிள்ளை

பாலாஜியின் நடவடிக்கையை பார்த்த இந்த நெட்டிசன் சாவு வீடுனா அங்க நான் தான் பிணமா இருக்கணும், கல்யாண வீடுனா அங்க நான் தான் மாப்பிள்ளையா இருக்கணும். என்ன ஒரு மனநிலை என பாலாஜியை கழுவி ஊற்றியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X