இரண்டு வாரமா குறைக்குடம் கொந்தளிச்சது தான் மிச்சம்..ஒரு லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கும் உருப்படியா பண்ணல!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோவை பார்த்த நெட்டிசன்கள் பாலாஜியை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரம் தோறும் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் கொடுக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையிலேயே ஹவுஸ்மெட்டுகளுக்கு சமையலுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாய் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கில் சொதப்பி வருகிறார். கடந்த வாரம் டாஸ்க்கில் முட்டை மதிப்பெண்கள் பெற வைத்து மொத்தத்துக்கும் வேட்டு வைத்தார்

லக்ஸரி பட்ஜெட்டுக்கு ஆப்பு
இந்த வார டாஸ்க்கிலும் 3 மணி நேரத்தை 4 மணி நேரத்திற்கு மேலாக கணித்தும், 3 மணி நேரத்தை ஒன்றரை மணி நேரத்துக்குள் கணித்தும் சொதப்பினார். இதனை பார்த்த ஹவுஸ்மேட்ஸ் இந்த வாரமும் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்குக்கு ஆப்புதான் என்று நினைத்தனர்.

வெற்றி பெற்ற டீம்ஸ்
ஆனால் இன்று வெளியான முதல் புரமோவில் வெற்றி பெற்ற டீம்கள் குறித்த அறிவிப்பு வெளியானது. இதனால் ஹவுஸ்மெட்ஸ் நிம்மதி அடைந்துள்ளனர். ஆனால் நெட்டிசன்கள் பாலாஜியை கழுவி ஊற்றி வருகின்றனர்.

வுமன் பவர்
கடினமான.பணியை கடினமான நேரங்களில் நல்லா செஞ்ச இந்த பெண்கள் உண்மையில் வெற்றியாளர்கள்! கடினமாக உழைத்தவர்கள் நிஷா, சனம், அனிதா.. ஸ்மார்ட் வொர்க்கர்ஸ் அர்ச்சனா, சாம், சோம்.. வுமன் பவர் திஸ் சீசன் என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

உருப்படியா பண்ணல
இரண்டு வாரமா குறைக்குடம் கொந்தளிச்சது தான் மிச்சம்!
ஒரு லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கும் உருப்படியா பண்ணல என பாலாஜி முருகதாஸை கழுவி ஊற்றியுள்ளார் இந்த நெட்டிசன்

ஆரி குழு அசத்தல்
ஆரி மற்றும் அவரது டீம் டாஸ்க்கில் பங்கேற்றதை பார்த்த இந்த நெட்டிசன், என்றுமே உழைப்பு வீண்போகாது.. ஆரி குழு அசத்தல்! என பாராட்டியுள்ளார்.

பகடி பயில்வான்
மற்றொரு நெட்டிசனான இவர் ஆமா.. இந்த பகடி பயில்வான் கேப்டன் ஆக வாய்ப்பில்லை எதுக்கு இந்த குதியாட்டம் என கடந்த சில வாரங்களாய் பிக்பாஸ் வீட்டில் அவர் போட்ட ஆட்டத்தை விமர்சித்துள்ளார் இந்த நெட்டிசன்.

குடோன்லயே இருந்துருக்கலாம்
வாழ்த்துக்கள் அர்ச்சனா, சம்யுக்தா, சோம்.. பின்னிட்டீங்கடா..
பாலாஜி & டீம் இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்து இருக்கலாம்.. ரம்யா பாண்டியன் இல்லனா அதுவும் இல்ல அந்த டீம் என சாடியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

சோம்பேறி பயில்வான்
ஒருசில டாஸ்குல கல்லாட்டம் ஆடி கலக்கியதாக கபடம் பேசி... கல்லா கட்டுற பயில்வானை இனி சோம்பேறி பயில்வான் என்றே தைரியமாக அழைக்கலாம்.. என பாலாஜியை விளாசியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

ஏமாத்துற டாஸ்க் கொடுத்தா
மற்றொரு நெட்டிசனான இவர் ஏமாத்துற டாஸ்க் கொடுத்தா அண்ணன் பயில்வான் அசத்துவாரு!... யோவ் பிக்பாசு..உனக்கு தில்லு இருந்தா டாஸ்க்கை கொடுத்து பாருயா.. என பாலாஜியை சீண்டியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

கெஸ் பண்ண முடியல
புரமோவுல ஏதும் கெஸ் பண்ண முடியல.. ஆனா ஒன்னு தெரியுது.. ரியோ , ஆரி , கேபி.. அர்சனா, சோம், சம்யுக்தா இந்த 6 பேரா இருக்கலாம் போல என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.
Recommended Video

வெறுப்பேத்தாம இருந்தாசரி
பாலாஜி முதல் முறையாக ஜெயிலுக்கு செல்ல உள்ளது உறுதியாகியுள்ளதா.. அவன் ஜாலியாதான் போவான்னு நினைக்கிறேன்.. பிக்பாஸ வெறுப்பேத்தாம இருந்தா சரி. அப்புறம் அவரு கடுப்பாகி மூணு நாள் உட்கார வச்சுருவாரு.. என கிண்டலடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











