அரைவேக்காடு.. கோமாளி.. உடம்பு மட்டும்தான் இருக்கு மூளையே இல்ல.. பாலாவை திட்டி தீர்க்கும் ரசிகர்கள்!

சென்னை: பிக்பாஸ் வீட்டில் டாஸ்க்கை தவறாக விளையாடிய பாலாஜியை நெட்டிசன்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த மூன்று நாட்களாக பாட்டி சொல்லை தட்டாதே டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் பாட்டியை சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும் என கண்டிஷன் போட்டார் பிக்பாஸ்.

ஆனால் பாலாஜியோ, சோமிடம் இருந்த சொத்து பத்திரத்தை திருடி வைத்துக் கொண்டு எல்லோரும் அவரை கெஞ்ச வேண்டும் என கண்டிஷன் போட்டார்.

காதில் வாங்காத பாலாஜி

காதில் வாங்காத பாலாஜி

பாட்டியா அர்ச்சனா, அனிதா, சனம், நிஷா என பலரும் எவ்ளோவோ எடுத்து சொல்லியும் கெஞ்சியும் பார்த்தனர். ஆனால் அதனை கொஞ்சமும் காதில் போட்டுக்கொள்ளவில்லை பாலாஜி. பத்திரம் வேண்டுமென்றால் நான் சொல்வதை கேளுங்கள் என்றார்.

பூஜ்ஜியம் மதிப்பெண்கள்

பூஜ்ஜியம் மதிப்பெண்கள்

இந்நிலையில் இன்று வெளியான முதல் புரமோவில், பாலாஜி டாஸ்க்கை புரிந்துகொள்ளாமல் தவறாக நடந்துகொண்டதால் லக்ஸரி பட்ஜெட் மதிப்பெண்களை மொத்தமாக குறைத்து பூஜ்ஜியம் வழங்கியுள்ளார் பிக்பாஸ். மேலும் பாலாஜியையும் டாஸ்க்கை புரிந்துகொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

அதிமேதாவித்தனம்

அதிமேதாவித்தனம்

புரமோவை பார்த்த நெட்டிசன்கள் பாலாஜி முருகதாஸை கழுவி ஊற்றி வருகின்றனர். அதிமேதாவித்தனமாக விளையாடினால் இப்படிதான் ஆகும் என்றும், உடம்புதான் இருக்கே தவிர மூளை இல்லை என்றும் விளாசி வருகின்றனர்.

மூக்கு உடைபடுவது சகஜம்..

பிக்பாஸின் முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், பயில்வான் சூப்பரா கேம் விளையாடுறார்னு மற்றவங்க சொல்லனுமாம்.. இந்த நினைப்பால அடிக்கடி பயில்வான் மூக்கு உடை படுவது சகஜம்தான்! என நக்கலடித்துள்ளார்.

அப்படின்னா என்ன?

புரமோவில் பாலாவை பிக்பாஸ் கிழித்ததை பார்த்த இந்த நெட்டிசன், பாலா டூ பிக்பாஸ்.. ஏங்க இந்த டாஸ்க்கு டாஸ்க்குனு சொல்றீங்களே அப்படினா என்ன... என கேட்டு நக்கலடித்துள்ளார்.

பயில்வானின் பக்கா பிராடுத்தனம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின்ன் இன்றைய புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், அடாவடிக்கும் ஒரு அளவு இருக்கு!.. எல்லை மீறி போகும் பயில்வானின் பக்கா பிராடுத்தனம்! என விளாசியுள்ளார்.

பாலாஜி ஈகோ..

இவரு பெரிய பிக்பாஸ்! டாஸ்க் அன்ட் ரூல்ஸ மாத்தி எல்லாரும் இவர கன்வெனியன்ஸ் பண்ணணுமாம்!
மொத்தமா போச்சா! இவன் ஈகோ நாள மொத்த டாஸ்க்கும் போச்சு! என விளாசியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

ஒண்ணுமே பிடிக்க முடியாது

கேம் ரூல்ஸ்னு ஒண்ணு வைக்கிறதே இந்த மாறி கண்றாவி குழப்பத்த தவிர்க்க தான்! இவரு அப்படியே ஆட்டத்தின் திசை மாத்தி கிளிச்சிட்டாரு! கலங்குன குளத்தில ஒண்ணுமே பிடிக்கமுடியாது! என்று விளாசியுள்ளார்.

சண்டை வளர்க்க அவசியமில்லை

உண்மையிலே கேம் பிளேயர்ன்னா இவனே திருடி வச்சிட்டு யாரு லாக்கர்லேருந்து திருடுனாங்கனு பாலாஜி புரூவ் பண்ணி சண்டை வளர்க்க அவசியமில்ல!
அடேய் அவங்கள திருட.சொன்ன பிக்பாஸ்க்கிட்டேயே நான் திருடலன்னு சொல்றியே! என்று சாடியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

செருப்படி..

பாலாஜி முருகதாஸ் இந்த டாஸ்க்க முறையா செய்ய தவறிட்டீங்க.. முதல் டாஸ்க் சரியா புரிஞ்சிக்க முயற்சி பண்ணுங்க.. அடேய் பாலாஜி பண்ணது வாவ் செம அப்படினு ஒரு கூட்டம் சுத்திட்டு இருந்துச்சு அந்த கூட்டதுக்கு செருப்படி என விளாசியுள்ளார் இந்த நெட்டிசன்.

அரை வேக்காடு..

பயில்வான் ஒரு அதிபுத்திசாலின்னு யாரோ பின்பக்கம் இருந்து ஏத்திவிட்டுகொண்டே இருப்பாங்க போலிருக்கு!.. அதனாலதான் இப்படி அரை வேக்காட்டுதனமா உள்ளே உலாவர்றாப்ல!.. என கிழித்துள்ளார் இந்த நெட்டிசன்.

பயில்வானுக்கு சாணி அடி

பிக்பாஸின் முதல் புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், பிக்பாசிடம் இருந்தும் சாணி அடி வாங்கிட்டாரு பயில்வான்!. என கலாய்த்துள்ளார்.

தைரியமா சொல்றீயே..

புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், யோவ் பிக்பாசு இப்பதான் உனக்கு புத்தி வந்துருக்கு! பயில்வானிடம் தைரியமா எடுத்து சொல்றீயே!.. தீபாவளியை முன்னிட்டு பிக்பாசுக்கு புத்தி வந்துருச்சிடோய்!.. என பிக்பாஸையே கிண்டலடித்துள்ளார் இந்த நெட்டிசன்.

மூளை இல்லை

பாலாஜியால் மொத்த லக்ஸரி பட்ஜெட்டும் போனதை அறிந்த இந்த நெட்டிசன், கோமாளி, உடம்பு மட்டும் தான் இருக்கு, மூளை கொஞ்சமாச்சும் இருக்கா? என கழுவி ஊற்றியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X