இப்பகூட பாருங்க பாலாஜி எப்படியாவது ஆரியை மாட்டிவிடலாமான்னு பாக்குறத.. பட்டென பிடித்த நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் பாலாவின் வில்லத்தனத்தை தோலுரித்துள்ளனர்.
Recommended Video

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவில் கடலை பருப்பு பிரச்சனையை கையில் எடுத்துள்ளார் கமல்.
அப்போது பேசும் பாலாஜி, ஆரிதான் தன்னிடம் கடலை பருப்பு ஊற வைத்து மூன்று நாட்காளாய் அப்படியே இருப்பதாய் கூறினார் என்று ஆரியை மாட்டி விடுவது போல் பேசினார்.

விளாசும் நெட்டிசன்ஸ்
இதனை பார்த்த ரசிகர்கள் பாலாஜியின் வில்லத்தனத்தை கரெக்ட்டாக கண்டுபிடித்துள்ளனர். ஆரிதான் சொன்னார் என்பதை போட்டுக்கொடுக்கும் வகையில் அழுத்தம் திருத்தமாக சொன்னதை வைத்து அவரை விளாசி வருகின்றனர்.

யாரும் மதிக்கவில்லை..
புரமோவில் கமல் பேசுவதையும் மற்ற ஹவுஸ்மேட்ஸ் நடந்து கொள்வதையும் பார்த்த இந்த நெட்டிசன், ஆழ்வார்பேட்டை ஆண்டவர்.... இந்த பிக்பாஸ் வீட்டில் யாரும் மதிக்கவில்லை... என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.. என கூறியுள்ளார்.

நிறைய இருக்கு..
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன் எல்லார்கிட்டேயும் நியாயம் கேட்பாங்க.. இவங்களிடம் யாரும் நியாயம் கேக்கக்கூடாது.. வாழ்க்கையில் நிறைய இருக்கு கற்றுக்கொள்ள.. நல்ல போட்டியாளர் இன்னும் கொஞ்சம் தன்னை சுய பரிசோதனை செய்து இருந்தால் வெற்றியாளர்.. என்று அனிதாவை குறிப்பிட்டுள்ளார்.

அடுத்து இவர்தான்..
புரமோவில் அனிதா பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், இன்றே கடைசிநாள்.. அனிதாவுக்கு.. பிக்பாஸில். அனிதாவை அனுப்பியாச்சி!... அடுத்து ஆஜித் என்று கூறியுள்ளார்.

மாட்டாமல் இருக்கணும்..
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், பயில்வானின் வாய் ஜாலத்தில் வசமா மாட்டாமல் ஆண்டவர் இருக்கனும். ஆரியை மட்டம் தட்டவே மணிக்கணக்காய் காத்திருக்கும் பயில்வான்.. என்று பாலாஜி குறித்து குறிப்பிட்டுள்ளார்.

துண்ட விரிச்சு..
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன் எல்லாரும் டிவி ஷோல கன்டெஸ்டண்ட் மாதிரி உக்காந்து இருக்காங்க. ஆனா ஒருத்தர் மட்டும் துண்ட விரிச்சு கோயில் வாசல் முன்னாடி உட்காந்து இருக்காரு என்று ரியோவை கலாய்த்துள்ளார்.

சில்லரைத்தனங்கள் வேண்டாம்
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இப்பக்கூட பாருங்க பாலாஜி எப்படியாவது ஆரியை மாட்டிவிடலாமனு பார்க்குறார்.. அடங்கு பாலா அடங்கு.. இரண்டு பேரும் டாஸ்க் போட்டி போட்டு ஆரோக்கியமா விளையாடுங்க.. இந்த மாதிரி சில்லரைத்தனங்கள் வேண்டாம்.. என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











