'குற்றம் உள்ளவனுக்கு குறுகுறுன்னு இருந்ததாலதான் கூவுறான்..' பாலாஜியை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள், பாலாஜியை வச்சு செய்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரமோவில் நாமினேஷனின் போது சக போட்டியாளர்கள் கூறிய காரணத்தை பெயரை சொல்லாமல் குறிப்பிட்டார்.
அதில் காதல் கண்ண மறைக்குது என்று பிக்பாஸ் சொன்னதை பிடித்துக்கொண்டார் பாலாஜி. பிக்பாஸ் பேசி முடித்ததுமே யார் அப்படி சொன்னது என்பதை போல பொத்தாம் பொதுவாய் விளாச தொடங்கி விட்டார்.

எச்சரித்த பாலாஜி
யாராவது அப்படி பேசினால், நான் வேற மாதிரி கேட்பேன் என சக ஹவுஸ்மெட்ஸ்களை எச்சரித்தார். இதனால் பிக்பாஸ் வீட்டில் பெரும் பதைபதைப்பு ஏற்பட்டுள்ளது. எப்போதும் ஷிவானியுடன் ஒட்டி உரசியப்படி இருக்கும் பாலாஜி, தங்களுக்குள் காதல் இல்லை என கூறியதை கேட்ட நெட்டிசன்ஸ் விளாசி வருகின்றனர்.

காதல் வந்துட்டாலும்..
புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், யோவ் பயில்வான் உனக்கு அப்படியே காதல் வந்துட்டாலும்!...என்னத்த சொல்ற!... ஓவரா ஆடாத! என விளாசியுள்ளார் இந்த நெட்டிசன்.

மாமா டவுசர் கழண்டுச்சு
அடேய்.. பாலாஜி பிக் பாஸ் பொதுவாதான் சொன்னாரு உனக்கு ஏன் தேள் கொட்டுன மாதிரி இருக்கு. நீ இதை டீப்பா எடுத்துக்கலாம் இல்ல என்னவா வேணாலும் எடுத்துக்கலாம்.. மாமா டவுசர் கழண்டுச்சு... இந்த பாட்டு கூட உனக்கா போடுறது தான்.. என்று பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

யார் பார்க்கிறது..
ஷிவானியிடம் காதல் வந்தால் சொல்கிறேன் என்று பாலாஜி கூறியதை கேட்ட இந்த நெட்டிசன், பயில்வான்.. உன் காதல் கண்றாவியெல்லாம் யாருடா இங்க பார்க்கிறது என கேட்டுள்ளார்.

அந்த மனுஷன் நிம்மதியா இருக்கட்டும்
மற்றொரு நெட்டிசனான இவர், இந்த வருஷத்தின் மிகப்பெரிய தியாகி அனிதா புருஷன் மட்டுமே..!
ப்ளீஸ் அனிதாவ எலிமினேட் பண்ணிடாதீங்கடா
இந்த பிக்பாஸ் 100நாள் ஆச்சும் அந்த மனுஷன் நிம்மதியா இருந்து தொலைக்கட்டும் என கிண்டலடித்துள்ளார்.

அதுக்கு பேரு என்ன?
மற்றொரு நெட்டிசனான இவர், அடப்பாவி, அப்போ எல்லாம் நாடகமாக? அதுக்கு பேரு என்னாச்சு சொல்லிட்டு போடா.. என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

பாலா தைரியமா திட்டுறான்
பாலாஜி பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், சோம்க்கு இருக்குற மாதிரி மடியில் கனமில்ல அதனால பாலா தைரியமா திட்டுறான்.. ஆனா இப்ப ஆரிதான் திருடனுக்கு தேள் கொட்டுன மாதிரி கம்முனு இருக்கனும்.. என கூறியுள்ளார்.

சோம் நெஞ்சுல குற்றம் இல்லை
மற்றொரு நெட்டிசனான இவர் குற்றம் உள்ளவனுக்கு குறுகுறுன்னு இருந்ததாலதான் கூவுறான் என பாலாஜியை விளாசியுள்ளார். சோம் நெஞ்சுல குற்றம் இல்லை.. இவனுக்கு ஏன் கோவம் வருது என விளாசியிருக்கிறார்.

ஒட்டிக்கிட்டு உரசுறீங்க..
பாலாஜி பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், அப்புறம் எதுக்குடா ஒட்டிக்கிட்டு உரசுறீங்க!... பயில்வான் பக்கிரிகளா.. என சாடியுள்ளார்.


Click it and Unblock the Notifications











