என்னப்பா பாலாஜி.. உனக்கு வந்தா ரத்தம் மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா.. பங்கமாக்கும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் பாலாஜியை வச்சு செய்து வருகின்றனர்.

இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரமோவில் பேசிய பாலாஜி தான் சொன்ன ஒரு விஷயத்தை கேபி அர்ச்சனாவிடம் சொன்னதாக ஆஜித்திடம் கூறினார்.

தான் நம்பி சொன்ன ஒரு விஷயத்தை பின்னால் பேசியிருக்கிறார் என்று கேபியை விளாசுகிறார்.

ஆரியின் முதுகில் குத்தியது

ஆரியின் முதுகில் குத்தியது

இதனை பார்த்த நெட்டிசன்கள் ஆரி, ரியோ கேப்டன்ஸி டாஸ்க் குறித்து கூறியதையும் அர்ச்சனாவுடனான சப்பாத்தி பிரச்சனை குறித்து பேசியதையும் எல்லோர் முன்பும் கூறி பாலாஜி முதுகில் குத்தியதை நினைவு கூர்ந்துள்ளனர்.

பின்னால் பேசும் பாலாஜி

பின்னால் பேசும் பாலாஜி

பின்னால் பேசுவது, முதுகில் குத்துவது, நம்ப வைத்து கழுத்தறுப்பது, எல்லாம் பாலாஜிக்குதான் கை வந்த கலை என்றும், சுயநலத்துக்காக அவரது அம்மாவை பற்றியே தவறாக பேசிய பாலாஜி, ஆரி குறித்தும் பிக்பாஸ் வீட்டில் தவறாக பேசி வருவதை வைத்து சாடியுள்ளனர்.

உலகமகா யோக்கியர்

உலகமகா யோக்கியர்

பாலாஜி கேபி குறித்து பேசியதை பார்த்த இந்த நெட்டிசன், ஆமா ஆமா.. இந்த பயில்வான் உலகமகா யோக்கியர்தான்! என கூறியுள்ளார்.

பாத்ரூம் வரைக்குமா?

பாத்ரூம் வரைக்குமா?

கேபி பாத்ரூமில் அமர்ந்து ரியோவிடம் பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், இந்த ஆயா குரூப்!... சாரி...இந்த அன்பு குரூப் பாத்ரூம் வரையுமா ஒட்டிகிட்டே போகுது? என கலாய்த்துள்ளார்.

தக்காளி சட்னியா?

தக்காளி சட்னியா?

புரமோவில் பாலாஜி பேசியதை பார்த்த இந்த நெட்டிசன், டுபாக்கூர் பொய்யன் பாலாஐி நாம பண்ற கருமாதான் திரும்பவும் நமக்கு வரும். ஆரி அண்ணா உன்ன நம்பி பேசுனதை எத்தனை தடவை எல்லார் முன்னாடியும் சொல்லி அவர் முதுகுல குத்திருக்க? இப்ப புரியுதா பொய்யனுக்கு உனக்கு வந்தா இரத்தம் மத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னியா? என கேட்டு கழுவி ஊற்றியுள்ளார்.

சபையில் சொல்லலையா?

சபையில் சொல்லலையா?

பாலாஜி புரமோவில் பேசியதை பார்த்த இந்த நெட்டிசன் ரியோ கேப்டன்ஷிப் ஜெயிச்சவுடன் ஆரி உன்னை நம்பி பேசியதை சபையில போய் சொல்லலையா என்று பாலாஜியை விளாசியுள்ளார்.

அந்த கடுப்பு பாலாவுக்கு..

அந்த கடுப்பு பாலாவுக்கு..

பாலாஜிக்கு ஷிவானிதான் பெஸ்ட்.. அதனால கேபி ஓபன் அப் ஆகலன்னு தான் சொல்லுவார். கேபி கூட பேசி எதுலேயும் பாலாஜி வின் பண்ணினது இல்ல.. அந்த கடுப்பு.. வெளியே போனவர் பத்தி பேசுறார்.. ரம்யா இதையும் கொஞ்சம் கேட்கலாமே என்று பதிவிட்டுள்ளார்.

காலர் டாஸ்க்க பிடிச்சுட்டு..

காலர் டாஸ்க்க பிடிச்சுட்டு..

கேபி குறித்து பாலாஜி பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், சுச்சி என்ட்ரி அப்போவே அர்ச்சனாக்கிட்ட சொல்லிட்டாங்களே.. பாலாஜி என்ன காலர் டாஸ்க்க பிடிச்சுட்டு இருக்காரு என்று விளாயுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X