ச்சீ.. தங்கச்சி.. தங்கச்சின்னு இப்படி தடவுறானே பாலாஜி.. கண்டபடி விளாசும் பிக் பாஸ் ரசிகர்கள்!

சென்னை: பாட்டி சொல்லை தட்டாதே டாஸ்க்கில் ஜோடிகளை இஷ்டத்துக்கு கோர்த்து விட்டு இருக்கிறார் பிக் பாஸ்.

இதுவரை பிக் பாஸ் வீட்டில் காதல் ஜோடிகளாக சுற்றி வந்த பாலாஜி முருகதாஸ் மற்றும் ஷிவானி நாராயணனை அண்ணன் தங்கைகளாக மாற்றி விட்டார்.

அதை பார்த்து சந்தோஷப்பட்ட ஷிவானி ஆர்மியினருக்கு, பாலாஜியின் செய்கை ரொம்பவே கடுப்பை கிளப்பி இருக்கிறது.

பாட்டி சொல்லை தட்டாதே

பாட்டி சொல்லை தட்டாதே

பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த வாரம் தீபாவளி கொண்டாட்டமாக மாறி உள்ளது. என்னதான் கொண்டாட்டமாக இருந்தாலும், பிக் பாஸ் போட்டியாளர்களிடையே உப்புக்கும் பிரயோஜனம் இல்லாத சண்டைகள் உருவாகி மறைவது வழக்கம் தான். அர்ச்சனாவை பாட்டி ஆக்கி விட்டு, அவரது சொத்துக்களை ஆட்டையை போடுவதையே டாஸ்க்காக பிக் பாஸ் கொடுத்துள்ளார்.

பெரிய மிஸ்டேக்

பெரிய மிஸ்டேக்

சனம் ஷெட்டிக்கு ஜித்தன் ரமேஷை ஜோடியாக்கியதும், ஜித்தன் தனது ஜித்து வேலைகளை காட்ட ஆரம்பித்து விட்டார். சனம் ஷெட்டி மீது கையை போட்டுக் கொண்டு டூயட் பாடாத குறையாக சுற்றி வருகிறார். ஆனால், இவர்கள் இருவருக்கும் இரண்டு பசங்கன்னு போட்ட இடத்தில் தான் பிக் பாஸ் பெரிய மிஸ்டேக் செய்து விட்டார்.

பாலாவுக்கு அம்மா யார் தெரியுமா?

பாலாவுக்கு அம்மா யார் தெரியுமா?

பாலாஜி முருகதாஸ் தனது அம்மா குடிப்பாங்கன்னு சொல்லி பரபரப்பை கிளப்பிய நிலையில், இந்த டாஸ்க்கில் பாலாவுக்கு அம்மாவாக சனம் ஷெட்டியை போட்டுள்ளனர். பாலா உடனான சண்டை இன்னமும் தொடர்வதால், தன்னால் அந்த டாஸ்க்கை செய்ய முடியவில்லை என சீன் போட்டு வருகிறார் சனம் ஷெட்டி.

அண்ணன் தங்கை

அண்ணன் தங்கை

பிக் பாஸ் வீட்டில் இதுவரை அண்ணன் தங்கையாக இருந்த ரியோவையும் நிஷாவையும் ஜோடியாக்கிய பிக் பாஸ், காதல் பறவைகளாக பிக் பாஸ் வானில் சுற்றிப் பறந்த பாலாஜி முருகதாஸ் மற்றும் ஷிவானி நாராயணனை அண்ணன் தங்கையாக மாற்றி துரோகம் செய்து விட்டார். எப்படி பிரிக்கிறேன் பாருங்க உங்களை என பிக் பாஸ் திட்டம் போட, பாலா அதையும் மாற்றி விட்டார்.

என்னடா இப்படி மாறிட்டீங்க

என்னடா இப்படி மாறிட்டீங்க

டாஸ்க்குன்னு வந்துட்டா அடுத்த செகண்டே நம்ம பிக் பாஸ் போட்டியாளர்கள் தாங்கள் ஒரு ஜகஜால நடிகர்கள் என்பதை எப்படி நிரூபிக்கிறாங்க பாருங்க, பொதுமக்களை எல்லாம் உள்ளே விட்டால், இப்படி எல்லாம் நடிப்பார்களா? அண்ணன் தங்கை என்றதுமே, எங்க அண்ணன் என பாலாவை பார்த்து பாட ஆரம்பித்து விட்டார் ஷிவானி.

என்ன தடவு தடவுறான்

என்ன தடவு தடவுறான்

தங்கச்சி.. தங்கச்சி என சொல்லிக் கொண்டே, ஷிவானியை எல்லோர் முன்னிலையிலும் பாலாஜி முருகதாஸ் கட்டிப் பிடித்தும், தடவுவதையும் பார்த்த ரசிகர்கள், அண்ணன் தங்கச்சி பாசத்தை இப்படியா கொச்சைப் படுத்துவீங்க, இதெல்லாம் ஒரு பொழப்பா என கண்டபடி திட்டித் தீர்த்து வருகின்றனர்.

மாமா பையன் ஆஜித்

மாமா பையன் ஆஜித்

இது ஒரு கொடுமை போதாதுன்னு சுட்டிக் குழந்தை ஆஜீத்தை ஷிவானிக்கு மாமா பையனாக மாற்றி இன்னொரு கொடுமையையும் பிக் பாஸ் அரங்கேற்றி உள்ளார். ஆஜித்துடன் ஷிவானி சுத்த வேண்டும் என்று சொன்னால், அவர் ஜாலியாக பாலாவை கட்டிப் பிடித்துக் கொண்டு சுற்றி வருவதை பயங்கர கடுப்பில் ஷிவானி ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X