சைக்கோவா இருப்பானோ.. ஆரியை தொடர்ந்து டார்கெட் பண்ணி கத்தும் பாலா.. கடுப்பான நெட்டிசன்கள்!

சென்னை: புத்தாண்டு அதுவுமாக நேற்று ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில், தேவையில்லாத சண்டைகள் நிறைய இருந்தன.

வார இறுதி என்பதால், அடித்துக் கொள்ளாத குறையாக பிக் பாஸ் வீட்டின் டஃப் போட்டியாளர்களான ஆரி, பாலா மற்றும் ரியோவுக்கு இடையே பலத்த சண்டை நடைபெற்றது.

ரியோவுக்கும் பாலாவுக்கும் டைட்டில் கிடைக்காமல் தடுக்கப் போவது ஆரி தான் என்பதை அறிந்து நல்லாவே கார்னர் செய்வது தெரிகிறது என பிக் பாஸ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

சைக்கோ பாலா

சைக்கோ பாலா

ஆரி நாமினேஷன் பண்ணும் போதே, வரம்பு மீறி நான் பேசுவேன் என வீண் சண்டை முதலில் ஆரம்பித்த பாலா, கடைசி வரைக்கும் ஆரி மற்றவர்களுடன் பேசினாலும், வேண்டுமென்றே அவர் கிட்ட போய் ரொம்பவே மோசமாகவும், காட்டுக் கத்தல் கத்தியும் பேசியதை பார்த்த ரசிகர்கள் சைக்கோவா மாறிட்டானோ பயில்வான் என திட்டித் தீர்த்து வருகின்றனர்.

வயித்தெரிச்சல்

வயித்தெரிச்சல்

பைனல்ஸ் நெருங்கும் நிலையில், டைட்டிலுக்கு ஆசைப்படும் பாலாஜி முருகதாஸ், ரியோ, சோமுவுக்கு டைட்டில் கிடைக்கக் கூடாது என்று ஆஜீத்திடமும் ரம்யா அதற்கு தகுதியில்லை. யாருக்கு கொடுத்தாலும் ஓகே ஆரிக்கு மட்டும் கொடுக்கக் கூடாது என ஷிவானியையும் நல்லாவே மூளைச் சலவை செய்தது வொர்ஸ்ட் பர்ஃபார்மர் தேர்வில் எதிரொலித்தது. அவ்வளவு வயித்தெரிச்சல் பாலாவுக்கு என ட்ரோல் செய்து வருகின்றனர்.

சமாளிக்க முடியவில்லை

சமாளிக்க முடியவில்லை

ஷிவானி அம்மா, ரம்யா தம்பி, சோமசேகர் தம்பி, ஆஜீத் குடும்பம் என பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தவர்கள் எல்லாரும் ஆரியை பற்றி பேசியதை கொஞ்சம் கூட பாலாவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ரியோவும், அதே வெறுப்பில் தான் உள்ளார். ஆனாலும், பாலா ஆரியை அடுத்த வாரம் வெளியே அனுப்ப என்ன எல்லாம் செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்ய தயார் ஆகிவிட்டார் என்றே தெரிகிறது.

சோம்பேறின்னு சொல்லாதீங்க

சோம்பேறின்னு சொல்லாதீங்க

பாலா மீண்டும் மீண்டும் தன்னை கார்னர் பண்ணுவதை புரிந்துக் கொண்ட ஆரி, உள்ளுக்குள் அவ்வளவு கவலையை வைத்துக் கொண்டும், இது கேம் தான் இவன் மரியாதை கொடுக்கணும்னு எதிர்பார்க்கக் கூடாது. கத்துற பாலாவை மேலும், எப்படி கத்த விட்டு வேடிக்கை பார்க்கலாம் என பாலாவை சோம்பேறின்னு சொல்லி கிளப்பி விட்டார். சோம்பேறின்னு சொல்லாதீங்க என பேய் மாறி பாலாவும் ஆரி விரித்த வலையில் விழுந்துவிட்டார்.

பழிக்கு பழி

பழிக்கு பழி

ஆரியை காலி பண்ண வேண்டும் என பாலா நகர்த்தும் நகர்வுகளை நல்லாவே புரிந்து கொண்ட ஆரி, தனக்கு தோண்டும் குழியில் பாலாவையே எப்படி தள்ளிவிட வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு பழிக்கு பழி வாங்கி வருகிறார். டென்ஷன் தலைக்கு ஏறினாலும், வார்த்தை விவாதத்தை மட்டுமே ஆரி வைத்து கெத்துக் காட்டினார். பாலா போல ஓவர் சீன் போடவில்லை.

பேக்கு ஆரி

பேக்கு ஆரி

ஆரி பாலாவை ஒரு பொருட்டாகவே நினைக்காமல், அன்பு கேங்கை வைத்துக் கொண்டு விளையாடும் ரியோவின் லீலைகளை வெளியே கொண்டு வரும் முயற்சியில் இறங்கினாலும், அங்கேயும் வந்து ஆரியை அசிங்கப்படுத்த பாலா கத்தி பேசியும் ஒருமையில் திட்டியும், மரியாதை இல்லாமல் பேசியும் பேக்கு, சோம்பேறின்னு பதிலுக்கு ஆரியை திட்டியும் தன் பெயரை கெடுத்துக் கொண்டார்.

பொய் சொல்லும் பாலா

பொய் சொல்லும் பாலா

சோம்பேறின்னு கண்ணாடி சிறையில் ஆரி பாலாவை பார்த்து சொன்னதற்கு இன்னொரு தடவை சொன்னீங்க அழுதுடுவேன் ரேஞ்சுக்கு பாலாவின் கண்கள் குளமாகி விட்டன. உடனே அந்த வார்த்தையை வாபஸ் வாங்கிக்கிறேன், மன்னித்து விடு எனக் கூறியும் வெளியே வந்த பிறகும், மன்னிப்பு கேட்கவில்லை என பாலா பொய் சொன்னதற்கு குறும்படம் போடுவாரா கமல் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

ஸ்பெஷல் பவர் என்ன செய்யுமோ

ஸ்பெஷல் பவர் என்ன செய்யுமோ

ஆரிக்கும் பாலாவுக்கும் இடையே நடக்கும் இந்த சண்டை எங்கே போய் முடியுமோ என்றும், பாலாவுக்கு இந்த வாரம் ஸ்பெஷல் பவரை பயன்படுத்தக் கொடுக்கவில்லை என்றால், அடுத்த வாரம் ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களும் ஆரியை நாமினேஷனுக்கு கொண்டு வரும் போது, ஆரியை வெளியேற்ற பிக் பாஸ் குழு அதை பயன்படுத்தும் என்றும் கணிக்கப்பட்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X