For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  வேர்க்கடலை சாப்பிடுறவன்லாம் வின் பண்ணக் கூடாது.. யப்பா பாலா.. இதுவரைக்கும் யாரும் அப்படி வின் பண்ணல!

  |

  சென்னை: பிக் பாஸ் டைட்டிலை வேர்க்கடலை சாப்பிடுறவன்லாம் வின் பண்ணக் கூடாது என பாலா பேசியது ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

  அனிதா தான் யார் டீம்லயும் இல்லை என சொல்லிக் கொண்டு, பாலாவிடமே தனியாக பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

  நாமினேட் செய்யாமல் சேஃபா புடிச்சவங்களுக்கே கால் பண்றாங்க என அனிதா பேசியதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.

  என்ன டாஸ்க்

  என்ன டாஸ்க்

  ஒய் பிளட் சேம் பிளட் டாஸ்க் கால் சென்டர் டாஸ்க்காக வடிவமைக்கப்பட்டு இருந்தது. ரேண்டாம் காலாக இதனை பிக் பாஸ் குழு வடிவமைக்காமல் விட்டது பெரிய தப்பு. இரண்டு வாரங்களாக நடக்கும் இவ்வளவு பெரிய டாஸ்க், சுவாரஸ்யமே இல்லாமல், சேஃப் கேம் டாஸ்க்காக கடைசியில் முடிந்து விட்டது என்ற குற்றச்சாட்டை அனிதா முன் வைத்துள்ளார்.

  பாலாவுடன் அனிதா

  பாலாவுடன் அனிதா

  பாலாவுடன் தனியாக அமர்ந்து பேசிய அனிதா, ரியோ, ஆஜீத், சோம், கேபி எல்லாம் அடுத்த வாரம் நாமினேஷனுக்கே வராமல் சேவ் ஆகிவிட்டனர் என பாலாவிடம் புலம்பி தள்ளினார். எனக்கு தெரியாதா புடிச்சவங்களுக்கே போன் பண்ண சொல்லி, அதை கட் பண்றதுக்கு என கோபமாகவும் சீறினார்.

  ஜோசியர் அனிதா

  ஜோசியர் அனிதா

  ஜித்தன் அண்ணாவும் காப்பாற்றப்படுவார். நிஷாவுக்குத் தான் கால் பண்ணுவார். அவங்க கண்டிப்பா போனை கட் பண்ணிடுவாங்க என பின்னாடி நடக்கப் போவதை அப்படியே முன்னாடியே கணித்து அனிதா பாலாவிடம் புறம் பேசிக் கொண்டிருந்தார். பாலா, சனம்க்குத் தான் கால் பண்றதா இருந்தார் என்று சொல்ல, இல்லை நிஷாவுக்குத் தான் பண்ணுவார் என்றார். அதே தான் நடந்தது. அடுத்த ஜோசியர் அனிதா ரெடி!

  வேர்க்கடலை சாப்பிடுறவன்

  வேர்க்கடலை சாப்பிடுறவன்

  வேர்க்கடலை சாப்பிடுறவன்லாம் வின் பண்றான் என்கிற மித் மாறணும், மாறும் என கைகளை முறுக்கி, ஆர்ம்ஸை மடக்கி அனிதாவுக்கு முன் தனது பைசப்ஸ்களையும் பராக்கிரமங்களையும் காட்டி பாலா பேசினான். அதை பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள், இதுவரைக்கும் டைட்டில் வின் பண்ண யாரும் ஷிவானி போல மிக்சர் திண்ணல என்றும், உன்னை போல ராவடி செய்யல என்றும் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

  சோமை தான் சொல்றாரா

  சோமை தான் சொல்றாரா

  டைட்டில் வின்னராக ஜெயிக்கப் போவது சோமசேகர் தான் என்கிற ரீதியில் தான் பாலாஜி முருகதாஸ் இப்படி பேசுகிறாரா என்கிற சந்தேகத்தையும் நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர். ஏனென்றால், பாலாஜி அந்த வார்த்தையை சொல்லும் போது, எடிட்டர் சரியாக சோமின் காட்சிகளை போட்டது தான் இந்த பிரச்சனைக்கு காரணம். சோம் ரசிகர்கள் பாலாவை கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர்.

  அமைதியா இருந்தா தான்

  அமைதியா இருந்தா தான்

  பாலா தன்னை குறிப்பிட்டே டைட்டில் வின்னருக்கு தகுதியானவர் என பேசுகிறார் என்பதை புரிந்துக் கொண்ட அனிதா, உடனே, அமைதியா இருந்தா தான் டைட்டில் வின் பண்ண முடியும். இதுவரைக்கும் அப்படித் தான் டைட்டில் வின் பண்ணியிருக்காங்க என்றும், ஆடியன்ஸ் அதைத் தான் விரும்புகின்றனர் என ரசிகர்கள் மீதே பழியை தூக்கிப் போட்டுள்ளார்.

  Cook with Comali Ashwin Kumar Unknown Details | Kannam Veesi, Ok Kanmani | Filmibeat Tamil
  அப்படி யாரும் வின் பண்ணல

  அப்படி யாரும் வின் பண்ணல

  மேலும், முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகேன் ராவ் என அனைவருமே திறமையான போட்டியாளர்கள் தான் யாரும் வேர்க்கடலை சாப்பிட்டுக் கொண்டு பிக் பாஸ் டைட்டிலை வின் பண்ணல, எல்லாத்துக்கும் எகிறுவதும், பொய்யா கத்துவதும் தான் டைட்டிலை ஜெயிக்க வைக்கும் என நினைப்பது எல்லாம் கடைசியில் பலிக்காது. பாலாவுக்கு டைட்டில் கிடைக்க வாய்ப்பில்லை ராசா என்றும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

  English summary
  Balaji Murugadoss and Anitha secretly talks about title winner. Netizens slams Balaji Murugadoss for his words about title winner myth.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X