For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பாலா மாமா.. பாலபிஷேகம்.. எல்லாமே அவங்க செட்டப் தானாமே.. சனம் ஷெட்டி கிளம்பியதும் அதனால் தானாம்?

  |

  சென்னை: பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் நடந்த ஏகப்பட்ட விஷயங்கள் போட்டியாளர்களே தனிப்பட்ட முறையில் செட்டப் செய்தது தான் என்கிற தகவல் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

  கடந்த ஞாயிற்றுக் கிழமை விஜய் டிவியில் பிக் பாஸ் கொண்டாட்டம் நடைபெற்றது.

  'தாண்டவ்' வெப் சீரிஸ் குழுவினரின் நாக்கை அறுத்தால் ரூ.1 கோடி பரிசு.. கர்ணி சேனா பகிரங்க மிரட்டல்! 'தாண்டவ்' வெப் சீரிஸ் குழுவினரின் நாக்கை அறுத்தால் ரூ.1 கோடி பரிசு.. கர்ணி சேனா பகிரங்க மிரட்டல்!

  டைட்டில் வின்னர் ஆரி, ரன்னர் அப் பாலாஜி முருகதாஸ், ரியோ ராஜ், ரம்யா பாண்டியன், அர்ச்சனா, அனிதா சம்பத் உள்ளிட்ட போட்டியாளர்களுக்கு மட்டும் எக்ஸ்ட்ரா ஸ்பெஷலாக சில பல விஷயங்கள் அரங்கேறியது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

  பாலா மாமா

  பாலா மாமா

  பிக் பாஸ் தமிழ் சீசன் 4ன் ரன்னர் அப் ஆன பாலாஜி முருகதாஸ் தான் தனக்கு சர்ப்ரைஸ் கொடுத்த இளம் பெண்களை செட்டப் செய்து நிகழ்ச்சிக்கு வர வழைத்தார் என்கிற தகவல் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. கைதட்டவே காசு கொடுத்து ஆட்களை விஜய் டிவி சேர்க்கும் நிலையில், பாலா வருவியா நீ என் ஆளா? பாலா மாமா என ஷிவானியை வெறுப்பேற்றவே பாலா இப்படி செய்ததாக நெட்டிசன்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

  பாலபிஷேகம்லாம் ஓவர்

  பாலபிஷேகம்லாம் ஓவர்

  பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில், வீட்டுக்கு சென்ற ரம்யா பாண்டியனுக்கு செண்டை மேள வரவேற்பு எப்படி அவரது சொந்த காசில் ஏற்பாடு செய்யப்பட்டதோ, அதே போலத்தான் கட் அவுட், பாலாபிஷேகம்லாம் செய்யப்பட்டதாகவும் விஜய் டிவி இதனை ஏற்பாடு செய்யவில்லை என்கின்றனர்.

  பழனிசாமி பிரதர்ஸ்

  பழனிசாமி பிரதர்ஸ்

  பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடைசி நாள் வரை இருந்த ரியோ ராஜ் தனது பிளாக்‌ஷிப் யூடியூப் சேனல் டீம் நண்பர்களை வைத்துக் கொண்டு நடத்திய ஷோவும் அவரது ஏற்பாடு தானாம். ரியோவை பார்த்து நீ தான் டா ரியல் வின்னர் என ஆரியை வைத்துக் கொண்டே டிடி நீலகண்டன் சொன்னது எல்லாம் விஜய் டிவியின் செல்லப்பிள்ளை என்பதாலே!

  அறக்கட்டளை சார்பாக

  அறக்கட்டளை சார்பாக

  பிக் பாஸ் டைட்டில் வின்னரான நடிகர் ஆரி அர்ஜுனாவும் அந்த மேடையில் விவசாய பிரதிநிதிகளை தனது மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை சார்பாகவே கொண்டு வந்தார் என்றும், அவர் செய்ததில் ஆவது சமுதாயத்திற்கு தேவையான நல்ல விஷயங்கள் அடங்கி இருந்ததாகவும் விமர்சித்துள்ளனர்.

  சனம் கிளம்பியது ஏன்

  சனம் கிளம்பியது ஏன்

  பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் கடைசி வரை இருந்த சோமசேகர் இது போல எந்த ஏற்பாடுகளையும் செய்யவில்லை. பிக் பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் உங்களுக்கு தேவையான ஏற்பாடுகளை நீங்கள் செய்து கொள்ளுங்கள் என விஜய் டிவி சொன்னதன் விளைவாகவே குறிப்பிட்ட போட்டியாளர்கள் அவர்களது ரசிகர்களை களமிறக்கினர். ஆனால், சனம் ஷெட்டியிடம் அதை விஜய் டிவி மறைத்தது தெரியவரவே அங்கிருந்து கோபமாக அவர் வெளியேறியதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. இது தொடர்பாக போட்டியாளர்கள் மெளனம் கலைத்தாலே உண்மை நிலை தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

  Anitha வை நேரில் வந்து சந்தித்த Aari Arjunan | Bigg Boss Tamil
  என்ன சாதனை

  என்ன சாதனை

  பிக் பாஸ் வீட்டில் 100 நாட்கள் இருந்ததை ஏதோ பெரிய சாதனை செய்து விட்டது போல இப்படி விழா நடத்தி கொண்டாடுவதெல்லாம் என்ன சாதனை என்றும், இந்த சீசனே செம போர் அதில் இந்த கொடுமையெல்லாம் வேறா என்றும் கிராண்ட் ஃபினாலேவுடன் நிறுத்திக் கொள்ளாமல் தேவையற்ற தம்பட்டம் ஏன் என்றும் நெட்டிசன்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.

  English summary
  Netizens slams Bigg Boss Kondattam is full of fake set up created by Bigg Boss contestants itself buzz circulates in social media.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X