அடப்பாவிகளா.. டாப்புல இருந்தாரே.. இப்படி டப்புன்னு வெளியே தள்ளி விட்டுடீங்களே.. கடுப்பான ரசிகர்கள்!

சென்னை: பல வாரமா மிக்சர் (அ) பர்கர் தின்பவர்களை எல்லாம் விட்டுப்புட்டு இப்படி சுரேஷ் சக்கரவர்த்தியை வெளியே தள்ளிட்டீங்களே என இரண்டாவது புரமோவை பார்த்த ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர்.

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு நம்ம மொட்டை பாஸ் தான் போகப் போகிறார் என்பதை ரசிகர்கள் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை.

சனம், சோமசேகர் மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தி ஆகிய மூவரில் இன்று ஒருவர் வெளியே போகிறார் என கமல் புரமோவில் வைத்த அடடே ட்விஸ்ட்டையும் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

போங்கடா நீங்களும் உங்க கேம் ஷோவும்

போங்கடா நீங்களும் உங்க கேம் ஷோவும்

சுரேஷ் சக்கரவர்த்தியை இவ்வளவு சீக்கிரமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றுவது நியாயமே கிடையாது. விஜய் டிவி போங்கடா நீங்களும் உங்க கேம் ஷோவும், யார் ஃபைனலுக்கு போகணும்னு ஏற்கனவே தீர்மானித்து விட்டு ஷோ நடத்துறீங்க என்று இந்த நெட்டிசன் ரொம்பவே கோபப்பட்டு திட்டி உள்ளார்.

சஸ்பென்ஸ் எதுக்கு

சஸ்பென்ஸ் எதுக்கு

"அட அட... சஸ்பென்ஸ் எல்லாம் வேண்டாம் ஆண்டவரே!... சட்டுபுட்டுன்னு சுரேசுனு சொல்லுங்க!... அதான் எங்களுக்கும் தெரியுமே!..." என இந்த தீவிர பிக் பாஸ் ரசிகர் கமெண்ட் அடித்துள்ளார். ஏகப்பட்ட ரசிகர்களும் சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேறுவது குறித்த கமெண்ட்டுகளையும் தங்களின் எதிர்ப்புகளையும் போட்டு வருகின்றனர்.

உங்க குசும்பு தான் பலம்

உங்க குசும்பு தான் பலம்

"உங்க குசும்பு தான் உங்க பலம்.. ஆனால் நீங்க அது உங்க பலவீனம்ன்னு நினைச்சது தான்.. நீங்க வெளியேற காரணம்! உங்க பலவீனம், உங்க கோபம், வார்த்தைகள்.. சிறந்த நடிகர் வெளில வந்து வெல்லுங்க!" என சுரேஷ் சக்கரவர்த்தி ஏன் இந்த வாரம் வெளியேறுகிறார் என்பதற்கான ஆதாரங்களையும் காரணங்களையும் இந்த ரசிகை அடுக்கி உள்ளார்.

பர்கர் தின்னும் ஷிவானி

பர்கர் தின்னும் ஷிவானி

"மிக்சர் தின்னுட்டு.. சாத்தூர்ல வந்த இது ஏதோ செக்கோஸ்லோவியாவில் இருந்து வந்த மாதிரி சீன் போட்டுக்கிட்டு இருக்கும்.. இதை துரத்தி இருக்கலாம்" என்றும், மிக்சர் அப்டேட்டட் வெர்ஷன் பர்கர் என்றும் ஏகப்பட்ட ரசிகர்கள் ஷிவானி மீது தங்கள் வெறுப்பை கொட்ட ஆரம்பித்து விட்டார்கள்.

நீங்க தான் ரியல் மாஸ்

நீங்க தான் ரியல் மாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சி என்னதான் உங்களை வெளியே அனுப்பினாலும், நீங்க தான் ரியல் மாஸ், நல்ல என்டர்டெய்னர். நீங்க இல்லாம இந்த சீசன் பிக் பாஸ் வீடு ரொம்பவே போர் அடிக்கும் இது வரைக்கும் வெளியே போன ரேகா, வேல்முருகன் மேல எல்லாம் பிக் பாஸ் ரசிகர்களுக்கு அதிகமா பாசம் இல்லை. நீங்க வெளியே போனா ஏகப்பட்ட ரசிகர்கள் உண்மையா கண்ணீர் சிந்துவார்கள் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

டாப்புல இருந்தாரே

டாப்புல இருந்தாரே

"அடப்பாவிகளா! டாப்புல இருந்தாரே இப்படி டப்புன்னு வெளியே தள்ளி விட்டுடீங்களே" அர்ச்சனா உள்ளே நுழையும் போது டிரெண்டிங் போட்டியாளர் என பெயர் வாங்கிய சுரேஷ் சக்கரவர்த்தியை இவ்ளோ சீக்கிரமா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே அனுப்புறது சரி இல்லை என்றும் ரசிகர்கள் தங்களின் எதிர்ப்புகளை தொடர்ந்து வைத்தாலும், விதி வலியதே!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X