அப்போ யாரையும் மக்கள் அனுப்பல.. சுரேஷை தொடர்ந்து சுச்சியையும் வெளியேற்றிய பிக் பாஸ் குழு?

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஓட்டுப் போடுங்க என மக்களிடம் சொல்லிவிட்டு, அவர்கள் இஷ்டத்துக்கு போட்டியாளர்களை வெளியே அனுப்பி வருகிறார்கள் என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சுச்சியை திட்டமிட்டே இந்த வாரம் வெளியேற்ற வேண்டும் என்கிற முடிவை எடுத்த பிறகு தான் அவருக்கு அதிகப்படியான நாமினேஷன் வந்தது என்றும், போரிங் போட்டியாளர் என ஜெயிலில் தள்ளினார்கள் என்றும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை நெட்டிசன்கள் வைத்து வருகின்றனர்.

சுரேஷ் சக்கரவர்த்தியின் வெளியேற்றத்தின் போது கூட, இது நன்றாகவே தெரிந்தது குறிப்பிடத்தக்கது.

மக்கள் ஓட்டு

மக்கள் ஓட்டு

என்னதான் மக்கள் ஓட்டுப் போட்டு தலைவர்களை தேர்வு செய்வதாக தெரிந்தாலும், ஏகப்பட்ட குளறுபடிகள் நிஜ தேர்தல்களிலேயே நடப்பதும், கள்ள ஓட்டுக்கள் போடப்படுவதும், ஓட்டு இயந்திரத்தையே ஹேக்கிங் செய்வதும் என இருக்கும் பட்சத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மட்டும் என்ன மக்கள் ஓட்டுப் போடாத நபர்கள் தான் வெளியேறுகிறார்களா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

பிளான் பண்ணி

பிளான் பண்ணி

பிக் பாஸ் நிகழ்ச்சி ஸ்க்ரிப்டட் என்கிற குற்றச்சாட்டு முதல் சீசனில் இருந்தே வெடித்து வருகிறது. ஆனால், அது அப்படி இல்லை என வெளியேறும் போது போட்டியாளர்களும், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் போது கமல்ஹாசனும் பல முறை வாதாடி வருகின்றனர். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சி மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை ஓவியா, கஸ்தூரி, மதுமிதா உள்ளிட்ட பலர் வைத்தது குறிப்பிடத்தக்கது.

குறைவான ஓட்டு இவருக்குத்தான்

குறைவான ஓட்டு இவருக்குத்தான்

இந்த வாரம் அனிதா சம்பத்துக்குத்தான் குறைவான ஓட்டுக்கள் கிடைத்தது என்றும், சுசித்ராவை ரசிகர்கள் எலிமினேட் பண்ண விரும்பவில்லை என்றும் ஏகப்பட்ட நெட்டிசன்கள் தங்களின் கருத்துக்களை கூறி வருகின்றனர். வேறு ஒரு பிரச்சனை காரணமாகவே சுச்சியை வந்த வேகத்திலேயே வீட்டுக்கு அனுப்ப பிக் பாஸ் குழு முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.

சுரேஷ் தாத்தாவையும்

சுரேஷ் தாத்தாவையும்

பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியையே விறுவிறுப்பாக்கியவர் என்றால் அது சுரேஷ் சக்கரவர்த்தி தான். அவரையே தீபாவளிக்கு முன்னாடி இப்படித் தான் அதிரடியாக வெளியேற்றி விட்டார்கள், கேட்டா அவருக்குத் தான் மக்கள் ஓட்டுப் போடவில்லை என்றும் சமாளித்து விட்டார்கள் என பிக் பாஸ் நிகழ்ச்சி நடத்துபவர்களின் முகத்திரைகளை கிழித்துத் தொங்க விட்டு வருகின்றனர்.

ரொம்ப போரிங்

ரொம்ப போரிங்

மேலும், இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சி போன சீசன் அளவுக்கு இல்லை என்றும், ரொம்ப போரிங்கா போகுதுன்னு நடிகை ஸ்ரீபிரியா உள்ளிட்ட பலர் பலமுறை ட்விட்டரில் தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்திய பின்னரும், எந்தவொரு சுவாரஸ்யமும் இல்லாமல் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.

புரமோவிலே எலிமினேஷன்

புரமோவிலே எலிமினேஷன்

இன்றைக்கு வெளியான மூன்றாவது புரமோவிலேயே சுசித்ரா தான் வெளியேறினார் என்பதை பிக் பாஸ் எடிட்டர் காட்டி விட்டார். சுசித்ராவை வழியனுப்பி விட்டு வீட்டுக்குள் மத்த எல்லா போட்டியாளர்களும் வரும் காட்சியை வைத்து விட்ட பின்னர், ஏற்கனவே இவர் தான் வெளியேறுகிறார் என தெரிந்த பின்னர், நிகழ்ச்சியை பார்ப்பதில் என்ன சுவாரஸ்யம் இருக்கப் போகிறது என்றும், நிகழ்ச்சியை இயக்குபவரை மாற்றுங்கள், எடிட்டரை மாற்றுங்கள் என ஏகப்பட்ட புகார்கள் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X