இருக்குற கலவரம் பத்தாதா பிக்பாஸ்? ஏன் இப்படி? புரமோவால் பீதியாகும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சயின் இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த நெட்டிசன்கள் பிக்பாஸ் இப்போ ஒரு முடிவோடுதான் இருக்கிறார் போல என்று கூறி வருகின்றனர்.
பிக்பாஸ் வீட்டில் நேற்று விருது விழா நடைபெற்றது. இதில் பெஸ்ட் பிளேயர், பெஸ்ட் எண்டெர்டெய்னர் மற்றும் பெஸ்ட் டிரெஸ்டுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.
இந்நிலையில் இன்றைய எபிசோடும் இந்த விருது விழாவின் தொடர்ச்சியாக உள்ளது. இதில் அனைத்து ஹவுஸ்மேட்டுக்களுக்கும் அவரவர் கேரக்டருக்கு ஏற்ப க்ரீடம் வழங்கப்படுகிறது.

பெரும் பிரளயமே வெடிக்கும்
விஷ பாட்டீல், தொட்டாச்சினிங்கி, சிம்பிளி வேஸ்ட் என ஒவ்வொருவருக்கும் கிரீடம் வழங்கப்படுகிறது. இதனால் பிக்பாஸ் வீட்டில் பெரும் பிரளயமே வெடிக்கும் என தெரிகிறது. ஒவ்வொரு ஹவுஸ்மேட்டும் கிரீடத்தை பெற்றுக்கொண்டு கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

காமெடி பண்றீங்க....
இதனை பார்த்த நெட்டிசன்கள், இருக்கும் பிரச்சனை பத்தாதா இதுவேறயா என கேட்டு வருகின்றனர். புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், பிக்பாஸ் இவங்களுக்கு டாஸ்க் கொடுப்பீங்கன்னு பார்த்தால் அவார்டு கொடுத்து காமெடி பண்றீங்க.... என பதிவிட்டுள்ளார்.

இன்னும் எதிர்பார்க்குறீங்களா?
இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், இருக்குற கலவரம் பத்தாதா சண்டை இன்னும் எதிர்பார்க்கிறீங்களா பிக்பாஸ்? அவார்டு ஃபங்ஷன்னு ஒன்னு கன்டெக்ட் பண்ணிட்டு ஃபேமிலி மெம்பர்ஸ் இப்படி அடிச்சுக்க விட்டுட்டீங்களே.. உங்க ஃபேமிலிக்குள்ள நீங்களே இப்படி கொளுத்தி போடலாமா என கேட்டுள்ளார்.

டம்மி பீஸ்மா நீ...
இன்றைய புரமோவில் இசைவாணி சொடக்கு போட்டு பேசிய டயலாக்கை பார்த்த இந்த நெட்டிசன், இசைவாணி டயலாக் மட்டும் ரொம்ப கெத்தா பேசுவாங்க செயல்னு வந்தா டம்மி பீஸ்மா நீ... எப்போதும் சொடக்கு போட்டுக்கிட்டு.. ப்ளா ப்ளான்னு உளறிக்கிட்டு என பதிவிட்டுள்ளார்.

இதுக்கு பின்னாடி யார் மூளை?
இன்றைய புரமோவில் நிரூப்புக்கு சிம்பிளி வேஸ்ட் கிரீடம் வழங்கப்பட்டதை பார்த்த இந்த நெட்டிசன், நிரூப் சிம்பிளி வேஸ்ட் இல்லை... நீங்களே பெஸ்ட் பிளேயர்ன்னு அவார்டு கொடுப்பீங்க... அப்புறம் சிம்பிளி வேஸ்ட் அவார்டும் அவருக்கே வா... இதுக்கு பின்னாடி யாரோட மூளை இருக்கு? பாவனி நீங்களா? என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

பாவனி செம ஃபார்ம்..
இன்றைய இரண்டாவது புரமோவை பார்த்த இந்த நெட்டிசன், பாவனி செம ஃபார்ம்.. ஜெய்கிறோமோ தோக்கறோமோ, ஃபர்ஸ்ட் சண்ட செய்யனும்! எல்லாரும் மிமிக்ரி பண்ணிட்டு சுத்திட்டு இருக்கட்டும்.. நீ ஆடுமா!! பாவனியால் விளையாட்டு சுவாரசியமாக செல்கிறது.. என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











