“டான்“ புளூ சட்டை மாறன் போட்ட ட்வீட்… கடுப்பான நெட்டிசன்ஸ்!
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படத்தை விமர்சனம் செய்யும் வகையில் புளூ சட்டை மாறன் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் புகைப்படம் நெட்டிசன்களை கடுப்பாக்கி உள்ளது.
இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிபி சக்ரவர்த்தி இயக்கி உள்ள டான் திரைப்படத்தில் பிரியங்கா மோகன், சூரி, சிவாங்கி, பால சரவணன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி என ஏராளமானோர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

டான்
டான் படத்தில் சிவகார்த்திகேயன் மூன்று விதமான கெட்டப்பில் நடித்துள்ளார். பள்ளி மாணவனாகவும், கல்லூரி மாணவனாகவும், குடும்பஸ்தனாகவும், 3 வெவ்வேறு கெட்டப்புகளில் நடித்துள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். காதல், காமெடி ,சென்டிமென்ட் என படம் நல்ல விமர்சனத்தை பெற்றுள்ளது.

புளூ சட்டை மாறன்
விமர்சனம் செய்கிறேன் என்ற பெயரில் அனைத்துப் படத்தை கண்டபடி விமர்சனம் செய்யும் புளூ சட்டை மாறன், டான் திரைப்படத்தை கிண்டலடிக்கும் வகையில் திரையரங்கில் அனைவரும் தூக்கும் ஒரு புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் புளூ சட்டை மாறனை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

கேவலமா இருக்கு
இணையவாசி ஒருவர், டே லூசு.. பக்கி இப்படி தூங்கிட்டுதான் நீ எல்லா படத்தையும் விமர்சனம் பண்றியா? அதுதான் உன் விமர்சனம் சம்மந்தா சம்பந்தமில்லாம கேவலமா இருக்கா.. பாத்ரூம்ல கதை கேட்டு விமர்சனம் போடாதே என்று கூறியுள்ளார்.

எல்லாரையும் திருப்திபடுத்த முடியாது
இவ்வளவு பெரிய தியேட்டர்ல உங்களுக்கு இந்த 6 பேர் தூங்கறதுதான் தெரியுதா? ஒரு படத்துல எல்லா மக்களையும் திருப்தி பண்ணமுடியாது சார், சில பேர் இப்பிடித்தான் இருப்பாங்க இவனுங்கள ஒரு, படம் பண்ண சொல்லுங்க பாக்கலாம் என கேட்டுள்ளார்.

பாதி படம் ஓடமா போகுது
புளூ சட்டை மாறன் பதிவால் கடுப்பான சிவகார்த்திகேயனின் ரசிகர் ஒருவர், இவன் எல்லாரும் வெச்சி செய் செய்யின்னு செஞ்சி தள்ளுங்கயா... இப்படி பண்ணி பொழப்பு ஓட்டிட்டு இருக்கான் இவனால் தான் பாதி படம் ஓடமா போகுது என்று பதிவிட்டுள்ளார்.

மறந்து போச்சா
புளூ சட்டை மாறன் ஆண்டி இண்டியன் என்று படம் எடுத்திருந்தார் அந்த படம் கடந்த ஆண்டு வெளியானது. ஆனால், படம் சரியாக ஓடவில்லை. ரசிகர் திரையரங்கு காலியாக இருக்கும் போட்டோவை பதிவிட்டு மறந்துபோச்சா என கேட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











