For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஜிப்ஸி ஹீரோ பிச்சைக்கார நாய்.. ஹீரோயின் லூசு.. எல்லை மீறிய ப்ளு சட்டை.. கழுவி ஊற்றிய நெட்டிசன்ஸ்!

  |

  சென்னை: ஜிப்ஸி படத்தின் விமர்சனம் என்ற பெயரில் அப்படத்தின் ஹீரோவையும் ஹீரோவையும் தரக்குறைவாக பேசிய ப்ளு சட்டை மாறனை நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர்.

  GYPSY REVIEW | CENSORED REPLY TO BLUE SATTAI | FILMIBEAT TAMIL

  ஜோக்கர், குக்கூ உள்ளிட்ட வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குநர் ராஜு முருகன். இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ஜிப்ஸி.

  நடிகர் ஜீவா, நடாஷா சிங், லால் ஜோஷ், சன்னி வயன், சுஷீலா ராமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு செல்வகுமார் எஸ்கே ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

  மதக்கலவரம்

  மதக்கலவரம்

  படம் குறித்து பல்வேறு மீடியாக்களும் தங்களின் விமர்சனங்களை பகிர்ந்து வருகின்றன. அவற்றில் பெரும்பாலும் வாரணாசியில் நடைபெறும் மதக்கலவரத்தையும் காதலையும் மையமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் படத்தில் சென்சார் போர்டு ஆங்காங்கே கையை வைத்து கத்தரி போட்டதால் இயக்குநர் சொல்ல நினைத்ததை முழுமையாக சொல்ல முடியவில்லை என்றே தெரிவிக்கப்பட்டு வருகிறது.

  எமோஷனல் காதல்

  எமோஷனல் காதல்

  சாமானிய சினிமா ரசிகர்கள் கூட ராஜு முருகனின் ஜிப்ஸி படத்தில் பல அரசியல் நடந்திருப்பதை எளிதில் கண்டு பிடித்து கதையை உணர்ந்து கமென்ட் தெரிவித்து வருகின்றனர். சென்சார் கட்டுகள் இருந்த போதும் எமோஷனல் காதல் ஸ்டோரி அழகாக வெளிப்பட்டு இருக்கிறது என்றும் ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

  இழிவான விமர்சனம்

  இழிவான விமர்சனம்

  குதிரையை வைத்து நடனமாடி நாடோடியாக வாழும் நடிகர் ஜீவா, அந்த கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் என பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் குதர்க்கமாக படங்களை விமர்சனம் செய்யும் யூட்யூப் விமர்சகரான ப்ளு சட்டை மாறன், ஜிப்ஸி படத்தையும், படத்தில் நடித்துள்ள ஹீரோ மற்றும் ஹீரோயினை மிகவும் இழிவான, தரக்குறைவான வார்த்தைகளால் எல்லை மீறி விமர்சித்திருக்கிறார்.

  பிச்சைக்கார பய

  பிச்சைக்கார பய

  தனது விமர்சனத்தின் பல இடங்களில் படத்தின் ஹீரோவான ஜீவாவை, பிச்சைக்கார நாய், பிச்சைக்கார பய, பொறம்போக்கு, பொறுக்கி என சகட்டு மேனிக்கு திட்டியிருக்கிறார். அதேபோல் படத்தின் ஹீரோயினையும் லூசு கிறுக்கி என விமர்சித்துள்ளார். விமர்சனம் என்ற பெயரில் அவர் வெளியிட்டிருக்கும் இந்த வீடியோ காண்போரை முகம் சுளிக்க வைத்துள்ளது.

  மரியாதை குறைகிறது

  மரியாதை குறைகிறது

  அவரது விமர்சனத்தை பார்த்த ரசிகர்கள் அவரை படு மோசமாக திட்டி தீர்த்திருக்கின்றனர். ப்ளூசட்டை மாறனை நெட்டிசன்கள் விளாசியிருப்பதில் சில நாகரீகமான பதிவுகள்... மாறன் சார் நீங்க சொல்றமாதிரி படம் கேவலம் லாஜிக் இல்லாம கூட ஏத்துக்கட்டும் ஆனால் ஒருவரை நாய் என்றும் பிச்சைக்காரன் என்றும் கேவலப்படுத்த காரணம் என்ன? இந்த வீடியோவால் உங்கள் மேல் உள்ள மரியாதை குறைகிறது என்கிறார் இந்த நெட்டிசன்.

  இறக்கி விட்டுருவாய்ங்க

  இறக்கி விட்டுருவாய்ங்க

  இந்த நெட்டிசன் சார், ராக்பெல்லர் பேமிலில இருந்து வந்திருக்கீங்களோ..அதென்ன சார், குதிரையை வச்சு பொழப்ப ஓட்டுனா, பிச்சைக்கார நாயா..அப்படியே நீங்க ராக்பெல்லர் பேமிலில இருந்து வந்திருந்தா கூட சகமனுச இழிவுபடுத்துற உரிமை உங்களுக்கு இல்ல சார்..நீங்க டிரோல் பண்றத ரசிக்கிறதுனால, நீங்க என்ன பேசுனாலும் ரைட்டு இல்லீங்க சார். எல்லை மீறாம விமர்சனம் பண்ணுங்க சார்.. இல்லாட்டினா, உசரத்துல இருக்குற யாரையும், ஒரு நிமிசத்துல இறக்கி விட்டுருவாய்ங்க சார்.. என்று எச்சரிக்கிறார் இந்த நெட்டிசன்.

  ஜிவ்வுனு ஏறுது

  ஜிவ்வுனு ஏறுது

  ப்ளு சட்டை மாறனின் ஜிப்ஸி படத்திற்கான வீமர்சனத்தை பார்த்த இந்த நெட்டிசன், இவர்தான் ஆன்லைன் பிச்சைக்காரர் என கிண்டலடித்திருக்கிறார். மற்றொரு நெட்டிசனான இவர்
  அது ஏன்னு தெரியல ஜீவா படம்னாலே அண்ணனுக்கு ஜீவ்வுனு ஏறுது.. என தனது கமென்ட்டை பதிவு செய்துள்ளார்.

  ஓசில சைட் டிஷ்

  ஓசில சைட் டிஷ்

  ஜீவா மேல உங்களுக்கு ஏதோ பழைய பிரச்சனை இருக்கு.
  ஆனால் பழிவாங்க இது இடமல்ல எனக்கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன். மற்றொரு நெட்டிசனான இவர் ஓசில தண்ணி அடிச்சவன், ஓசில சைட் டிஷ் கிடைக்க்லன்னா, இப்படி தான் கிறுக்கு பிடிச்சு பேசுவான். ஆமா... அப்படிப் பார்த்தா நீயும் பிச்சைக்காரன். ஓ... நீ கேவலமான பிச்சைக்காரன் ஆச்சே என கடுமையாக சாடியிருக்கிறார்.

  விளாசல்

  விளாசல்

  இன்னும் மோசமாக நெட்டிசன்கள் விமர்சகர் ப்ளு சட்டை மாறனை விளாசியிருக்கின்றனர். மேலும் இதுபோன்று தரக்குறைவாக விமர்சிப்பவர்களை தமிழ் சினிமா அனுமதிக்கக்கூடாது என்றும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். ப்ளு சட்டை மாறனின் இந்த தரக்குறைவான விமர்சனத்திற்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. மற்ற படங்களை வாய்க்கு வந்தப்படி விமர்சிக்கும் ப்ளு சட்டை மாறன் தற்போது ஒரு படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  English summary
  Cinema Online reviewer Blue Sattai maran abusing Gypsy movie hero and heroine. Netizens slams Blue Sattai maran for his degrading review.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X