என்னம்மா ஒரு கேப்டன் பேசுற பேச்சா இது.. நான் பேசி முடிச்சோன சண்டை போடுங்க என சொல்லும் இசை!
சென்னை: அபிநயை இந்த வாரம் வீட்டில் இருந்து விரட்ட வேண்டும் என்கிற முடிவுடன் கேப்டன் பதவியை பறித்துக் கொண்ட இசைவாணி பிக் பாஸ் வீட்டில் ஒரு கேப்டன் போலவே செயல்படவில்லை என குற்றச்சாட்டுக்களை பிக் பாஸ் ரசிகர்கள் அடுக்கி வருகின்றனர்.
வார வாரம் முதல் நபராக சேவ் ஆகி வரும் இசைவாணி ஏன் இந்த வாரமே காயினை யூஸ் பண்ணினார் என்கிற கேள்வியும் அவரை காப்பாற்றி வரும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அனைத்துக்கும் மேலாக நான் பேசி முடிச்சோன சண்டை போடுங்க என இசைவாணி சொல்வதெல்லாம் அவர் கேப்டன் பதவிக்கு சற்றும் லாயக்கு இல்லை என்பதையே உணர்த்துகிறது.

அபிநயை வெளியேற்ற
கடந்த சில வாரங்களாகவே எப்போ வெளியேறுவார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த ஜெமினி பேரன் அபிநயை இந்த வாரமும் ஹவுஸ்மேட்ஸ் காப்பாற்ற நினைத்து அவர் பானையை மட்டும் உடைக்காமல் பாவம் பார்த்து விட்டனர். ஆனால், கடைசியில் அவருக்கு கிடைத்த கேப்டன் பதவியை இசைவாணி தனது காயினை யூஸ் பண்ணி கைப்பற்றினார்.

செம நடிப்பு
ஆனால், அதன் பிறகு அபிநய் கேப்டன்ஷிப்பை பறித்தது தனக்கு ரொம்பவே கில்டியாக இருப்பதாக கூறி இந்த வாரம் இசைவாணி போடும் நடிப்பு தான் தாங்க முடியவில்லை சாமி என நெட்டிசன்கள் அவரை கலாய்த்து வருகின்றனர்.

பதவி கிடைத்தும்
பிக் பாஸ் வீட்டில் நெருப்பு ஆளுமை கிடைத்தும் இசைவாணி பெரிதாக ஆளுமையை செலுத்தவில்லை. இந்த வாரம் கேப்டன் ஆகியும் அவரால் மற்ற போட்டியாளர்களை கன்ட்ரோல் பண்ண முடியவில்லை. பேச்சைக் கேட்கவில்லை என்றால் பனிஷ்மென்ட் கொடுப்பேன் என இசை சொல்லும் போது கூட அவரை மற்றவர்கள் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. அந்த அளவுக்கு அவர் தன்னை ரொம்ப வீக்காக காட்டிக் கொண்டு வருகிறார்.

சண்டை போட அனுமதி
எல்லாத்தையும் விட இசைவாணி பேசும் போது ராஜு குறுக்கிட்டு அவரது பேச்சை திசை திருப்ப அடுத்தது நிரூப் சந்தேகம் கேட்க, நிரூப்புக்கும் அபிநய்க்கும் இடையே சண்டையே எழுந்தது. ஆனால், ஒரு கேப்டனாக அந்த சண்டையை இசை சரி செய்ய முன் வராமல் என்னை பேச விடுங்க.. நான் பேசி முடித்ததும் உங்க சண்டையை போடுங்க என சொன்னதை பார்த்த ரசிகர்கள் இசை மீது வைத்திருந்த நம்பிக்கையை முழுவதுமாக இழந்து விட்டனர்.

வாயை மூட சொன்ன அக்ஷரா
இசைவாணி பேசும் போது ராஜு, நிரூப் குறுக்கிட்டதற்கு அவளை பேச விடுங்க என பிரியங்கா மற்றவர்களை வாயை மூட சொன்ன நிலையில், அபிநய் மற்றும் நிரூப் சண்டை போடும் போது இசை பேச ஆரம்பிக்க அக்ஷரா கம்முன்னு இரு என்பது போல இசையை சைகையால் ஆஃப் செய்யும் அளவுக்குத் தான் இசைவாணியின் கேப்டன்சி இந்த வாரம் இருக்கிறது.


Click it and Unblock the Notifications











