Chiranjeevi: பூமர் தனமாக பேசிய சிரஞ்சீவி.. நெபோடிசத்தை காக்க பேரன் வேண்டுமா? விளாசும் ரசிகர்கள்
ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியை இணையவாசிகள் தாளித்து வருகிறார்கள். காரணம் அண்மையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, தனது மகன் ராம் சரணுக்கு ஒரு கோரிக்கை வைப்பதாகவும், ஒரு பேரன் மட்டும் பெற்றுக் கொடுங்கள் எனக் கேட்பதாகவும், அப்போதுதான் நமது குடும்பத்தின் லெகசியைத் தொடர முடியும் எனவும் பேசினார். அவரது இந்தப் பேச்சு, இணையவாசிகள் மத்தியில், ரசிகர்கள் மத்தியில், பெண்கள் நல ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது. இதனால், சிரஞ்சீவியை ரசிகர்களும் இணையவாசிகளும் கடுமையாகச் சாடி வருகிறார்கள்.
மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண். இவரது நடிப்பில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆன படம் கேம் சேஞ்சர். இந்தப் படம் சரியாக போகவில்லை. ராம் சரண் கடந்த 2012ஆம் ஆண்டு உபாசனா காமினேனி என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் திருமணத்திற்குப் பின்னர் உடனே குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை. இவர்கள் இருவரும், ஒன்றாக இணைந்து உபாசனாவின் கருமுட்டையை பத்திரப்படுத்தி வைத்திருந்தனர். அதன் பின்னர் சுமார் 10 ஆண்டுகளுக்கு பின்னர் குழந்தை பெற்றுக் கொண்டனர். இவர்கள் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20ஆம் தேதி ஒரு பெண் குழந்தையை பெற்றுக் கொண்டனர். அவர்களின் குழந்தைக்கு கிளின் கார கொண்டேலா என பெயர் வைத்துள்ளனர்.

லேடீஸ் ஹாஸ்டல்: இப்படியான நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சிரஞ்சீவியின் கருத்துக்கு ரசிகர்கள் மத்தியிலும் இணையவாசிகள் மத்தியிலும், பெண்கள் நல ஆர்வலர்களிடமும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதாவது, சிரஞ்சீவி பேசும்போது, எனது மகன் ராம் சரணிடம் ஒரு கோரிக்கை வைத்துக் கொள்கின்றேன். ஒரு பேரன் மட்டும் பெற்றுக் கொடுங்கள். வீட்டில் பேத்திகள், மகள்கள், மகள் வழி பேத்தி களைப் பார்க்கும்போது எனக்கு லேடீஸ் ஹாஸ்டலில் இருப்பதைப் போலவும், நான் லேடீஸ் ஹாஸ்டல் வார்டன் போலவும் உணர்கிறேன். மேலும், நமது குடும்பத்தின் லெகசியைத் தொடர, ஆண் வாரிசு வேண்டும் எனவே இந்த முறை ஆண் குழந்தையை பெற்றுக் கொடு எனக் கூறினார்.
எதிர்ப்பு : சிரஞ்சீவியின் இந்தப் பேச்சுக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதாவது ஆண் குழந்தைகள் தான் குடும்பத்தின் வாரிசுகளாக இருப்பார்களா? ஆண் குழந்தைகள் தான் குடும்பத்தின் லெகசிக்கு உரியவர்களா? ஆண் குழந்தைகள்தான் குடும்பத்தின் பெருமைமிகு அடையாளமாக போற்றப்பட வேண்டியவர்களா? என கடுமையான கேள்விகளை சிரஞ்சீவியை நோக்கி கேட்டு வருகிறார்கள். மேலும் சிரஞ்சீவி போன்ற திரை பிரபலங்கள் இது போன்ற கருத்தினைச் பேசியிருப்பது, அதிர்ச்சி அளிப்பதாகவும் கூறுகின்றனர்.
பூமர் சிரஞ்சீவி: மேலும், சிரஞ்சீவியின் பேச்சு பூமர் தனமாக இருப்பதாகவும், நவீன உலகத்தில் ஆண்களையும் பெண்களையும் தாழ்த்தியும் உயர்த்தியும் பேசுவது முட்டாள் தனமானது எனவும் , சிரஞ்சீவி ஒரு ஆணாதிக்க மனநிலையில் இருந்து தான் இந்தக் கருத்தைப் பேசியுள்ளார். சினிமாவில் ஏற்கனவே தனது மகனைக் கொண்டு வந்த சிரஞ்சீவி, தனது பேரனையும் கொண்டு வந்து நெபோடிசத்தை காப்பாற்றுவதற்காக இப்படியான மனநிலையில் உள்ளார் என காட்டமாக விமர்சித்து வருகின்றனர். சிரஞ்சீவிக்கு எதிராக கண்டன குரல்கள் இணையத்தில் எழுந்து வருகிறது. அதே நேரத்தில் சிலர், ஒருவர் அவரது ஆசையை சொல்லியுள்ளார். அது ஒரு குத்தமா? என சிரஞ்சீவிக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











