Don't Miss!
- News "ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறை!" 12 ஆண்டுகளுக்கு பின் 2ஜி வழக்கின் தீர்ப்பில்.. மத்திய அரசு மேல்முறையீடு
- Finance எம்.எஸ்.தோனி-யை திட்டம் போட்டு தூக்கிய Citreon..!
- Sports தோனிக்கு ஒரு பந்துதான்.. சோலியை முடித்த துபே - ருது.. சிஎஸ்கே பேட்டிங்கை கண்டு கலங்கிய லக்னோ
- Automobiles 20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மிருணாளினி ரவி கெட்டப்புல இருக்கிறதே சியான் விக்ரம் தான் தெரியுமா? எல்லை மீறும் கோப்ரா மீம்ஸ்!
சென்னை: சியான் விக்ரம் பல கெட்டப்புகளை போட்டது எல்லாம் படத்திற்கான புரமோஷனுக்காகவே என்றும் கதைக்கு அந்த கெட்டப்புகள் எந்தவொரு பயனையும் தரவில்லை என முதல் நாள் படத்தை பார்த்து நொந்து நூடுல்ஸ் ஆன ரசிகர்கள் கோப்ரா படத்தை மீம்களாக போட்டு வச்சு செய்து வருகின்றனர்.
ரசிகர்களின் ஒட்டுமொத்த கோபத்தையும் புரிந்து கொண்ட தயாரிப்பு தரப்பு உடனடியாக கோப்ரா நீளத்தை பாரபட்சம் பார்க்காமல் வெட்டித் தள்ளியது.
கிரிஸ்ப்பா இருக்கிற கோப்ரா படம் என்கேஜிங்கா இருக்கு, இதை முதல் நாளிலேயே செய்திருந்தால் நெகட்டிவ் விமர்சனங்களே வந்திருக்காது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
2009 முதல் 2014 திரைப்பட, சின்ன திரை விருதுகள்... சென்னையில் செப்.4ம் தேதி விருது வழங்கும் விழா
கெட்டப் போடும் கெட்டப் பழக்கம்
சினிமாவுக்கு வந்து பாக்ஸ் ஆபிஸ் கிங்காக இருந்தாலும் ஒரே கெட்டப்பில் கடைசி வரை ஏஜ் இஸ் ரிவர்ஸ் கியர் என அப்படியே தங்களை மெயின்டெயின் பண்ணும் நடிகர்களுக்கு மத்தியில் கெட்டப் போடும் கெட்டப் பழக்கம் சியான் விக்ரமுக்கு நிறையவே இருக்கு. எந்த கெட்டப் போட்டாலும், தன்னை அடையாளமே கண்டு பிடிக்காத அளவுக்கு ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிடுவார். அதனால் தான் எத்தனை படங்கள் ஃபிளாப் ஆனாலும், அவரது அடுத்த படத்தை நம்பிக்கையோடு காண ரசிகர்கள் தியேட்டருக்கு வருகின்றனர்.
கதைத் தேர்வு
வழக்கமான கமர்ஷியல் படங்களை தேர்வு செய்து நடிக்காமல் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து தான் நடித்து வருகிறார். ஆனாலும், பல படங்கள் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காமல் ஏமாற்றி விடுகின்றன. கோப்ராவும் தற்போது அந்த வரிசையில் சேர்ந்த நிலையில், ரசிகர்கள் படு மோசமாக மீம்களை போட்டு ட்ரோல் செய்து வருகின்றனர்.
மிருணாளினி ரவியே சியான் தான்
கோப்ரான்னு சொல்லி மண்ணுளி பாம்பை வித்துட்டானுங்க செட்டியார் என்றும் பாம்பே 2.30 மணி நேரத்துக்கு மேல படம் எடுத்தா ஃபிளாப் தான் என விஜய் பேசியதையும் வைத்து பங்கமாக கலாய்த்து வந்த ரசிகர்கள் தற்போது கோப்ரா படத்தில் மிருணாளினி ரவியாக இருப்பதே சியான் விக்ரம் தான் என மீம் போட்டு எல்லை மீறி வருகின்றனர்.
பாதிப்பில் இருந்து மீளுமா
முதல் நாளில் 15 கோடிக்கு மேல் ஓப்பனிங் இருந்த நிலையில், இரண்டாவது நாளில் 7 கோடியாக கோப்ரா படத்தின் ஓப்பனிங் அப்படியே பாதியாக சரிந்து விட்டது. 20 நிமிடம் ட்ரிம் செய்யப்பட்ட பின்னர், படம் நல்லா இருக்கு என ரசிகர்கள் சொல்லி வரும் நிலையில், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் கோப்ரா படத்தின் வசூல் மீண்டும் வெற்றிப்பாதையை நோக்கி சீறுமா? என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம்.