பறவைகள், விலங்குகள் துன்புறுத்தப்படவில்லை.. மனுஷங்களை இப்படி துன்புறுத்துறாங்களே.. மாறன் மீம்ஸ்!
சென்னை: சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ், மாளவிகா மோகனன் நடிப்பில் உருவான மாறன் திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.
மாறன் படத்தை பார்த்த தமிழ் சினிமா ரசிகர்கள் அந்த படம் சொதப்பலாக உள்ளதாகக் கூறி ஏகப்பட்ட மீம்களை சமூக வலைதளங்களில் போட்டு தங்களின் தலைவலியை போக்கி வருகின்றனர்.
அசுரன், கர்ணன் படங்களில் நடித்த தனுஷை மீண்டும் எப்போதான் பார்ப்பது? என்கிற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

மனசே வரல
குறைந்தபட்சம் ரசிகர்களை திருப்திபடுத்தும் அளவுக்காவது நடிகர் தனுஷ் மாறன் படத்தை கொடுத்திருப்பார் என எதிர்பார்த்தால், அதுவும் இல்லை என்பதால் தான் ஏகப்பட்ட தனுஷ் ரசிகர்களே அப்செட் ஆகி உள்ளனர். மாரி 2 படமே ஓடவில்லை என்றால் கூட ரவுடி பேபி பாடல் 1000 மில்லியன் வியூஸை கடந்து ஹிட்டடித்தது. இந்த படத்தில் அப்படி பாடல்கள் கூட ஹிட் அடிக்கவில்லையே என்றும் படத்தில் இருந்து பாடலாசிரியர் விவேக் வெளியேறுவதாக அறிவித்தது என ஏகப்பட்ட ஈகோ கிளாஷ் தான் இப்படியொரு படமாக மாறன் அமைய காரணம் என்கின்றனர்.

பங்கமாக்கும் மீம்கள்
மாறன் படத்தை பார்த்து அப்செட்டான தமிழ் சினிமா ரசிகர்கள் மீம்களாக போட்டு அந்த படத்தை பங்கமாக கலாய்த்து வருகின்றனர். இந்த படத்தில் பறவைகள், விலங்குகள் துன்புறுத்தப்படவில்லை என போடுறாங்க.. ஆனால், என்னைய துன்புறுத்துனீங்கடா 2.30 மணி நேரமா என கலாய்த்து வருகின்றனர்.

ஹெல்ப்னு கேட்டா
"Helpனு கேட்டா , அப்படி கேட்டு வந்தவங்களுக்கு நம்ம செஞ்சி தான் பழக்கம்" என மாறன் படத்தில் மாளவிகா மோகனனை பார்த்து தனுஷ் பேசும் வசனத்தையே போட்டு அதற்காகத்தான் இப்படியொரு படத்தில் நடிகர் தனுஷ் நடித்து கொடுத்திருக்கிறார் போல என ரசிகர்களே பாராட்டுவது போல ட்ரோல் செய்து வருகின்றனர்.

இது என் நேரம்
சார்பட்டா பரம்பரை படத்தில் ஆர்யா சொல்லும் வசன காட்சியை போட்டு கெத்துக் காட்டியிருந்த கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளியாகும் மாறன் வேறலெவலில் இருக்கும் என எதிர்பார்த்த தனுஷ் ரசிகர்களுக்கு இப்படியொரு படத்தை கொடுத்து வச்சிருக்காரே கார்த்திக் நரேன் என ரசிகர்கல் கழுவி ஊற்றி வருகின்றனர்.

மொக்கை மூவி
இந்த மாதிரி ஒரு மொக்கை மூவி உங்ககிட்ட இருந்து வருமென எதிர்பார்க்கவில்லை கார்த்திக் நரேன் அண்ணா என துருவங்கள் பதினாறு படத்தை இயக்கிய இயக்குநரை விதவிதமாக ட்ரோல் மீம்களை போட்டு வெளுத்து வாங்கி வருகின்றனர்.

பபுள் கம் மாளவிகா
மாளவிகா மோகனன் மாஸ்டர் படத்தில் நடித்ததற்கே பங்கமாக மீம்கள் போட்டு அவரை ட்ரோல் செய்தனர். மாறன் படத்தில் வெறும் பபுள் கம் போட்டு வாயில் மென்று கொண்டே நடித்து இருப்பதை பார்த்து ரசிகர்கள் காண்டாகி உள்ளனர். படத்துக்கு புரமோஷன் பண்ணுகிறேன் என்கிற பெயரில் சமூக வலைதளங்களில் கவர்ச்சி போஸ் கொடுக்கும் போதே தெரியும் படத்தில் நடிப்பு இருக்காது என கலாய்த்து வருகின்றனர்.

நீங்க எப்படி ஏமாந்திங்க
"சொல்லுங்க.. நீங்க எப்படி ஏமாந்திங்க... மாறன் - வெற்றிமாறன்.. ஒரு கனெக்சன் இருக்கும்னு நெனச்சி காச கட்டிட்டேங்கயா" என வேற லெவலில் மீம்களை போட்டு மாறன் படத்தால் நொந்த மனசை மீம் போட்டு ஆற்றி வருகின்றனர். மீண்டும் தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் படம் வர பல ஆண்டுகள் ஆகுமே? அதுவரை தனுஷ் ரசிகர்கள் எப்படி தப்பிக்க போகிறார்கள் என்றும் சிம்பு ரசிகர்கள் சீண்ட ஆரம்பித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











