திரௌபதி படத்தை குப்பைகள் என விமர்சித்த பிரபல இயக்குநர்.. மரணமாய் கிழித்து தொங்கவிட்ட நெட்டிசன்ஸ்!

சென்னை: திரௌபதி படத்தை குப்பைகள் என விமர்சித்த இயக்குநரை நெட்டிசன்கள் கிழித்து தொங்கவிட்டுள்ளனர்.

இயக்குநர் ஜி மோகன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் திரௌபதி. இந்தப் படத்தின் ட்ரெயிலர் அண்மையில் வெளியானது.

இதில் இரண்டு சமூகம், நாடகக்காதல், ஆணவக் கொலை ஆகியவற்றை மைய்யப்படுத்தியிருப்பதாக தெரிகிறது. ட்ரெயிலர் ரிலீஸை தொடர்ந்து எதிர்ப்பும் வரவேற்பும் ஒருசேர எழுந்திருக்கிறது.

காட்டமாக பதில்

காட்டமாக பதில்

இந்நிலையில் மூடர்கூடம் படத்தை இயக்கிய இயக்குநர் நவீன் முகமது அலியிடம் திரௌபதி ட்ரெயிலர் குறித்து ரசிகர் ஒருவர் கருத்து கேட்டார். அதற்கு மிகவும் கடுமையான சொற்களால் காட்டமாக பதிலளித்திருக்கிறார் நவீன்.

குப்பைகள்

அதாவது, குப்பைகள் குறித்து கருத்து வேற சொல்லனுமா? என்று பதிலளித்திருக்கிறார் நவீன் முகமது அலி.

மரண கலாய்

மரண கலாய்

அவரது பதிலை பார்த்த நெட்டிசன்கள் செம கடுப்பாகியிருக்கின்றனர். இயக்குநர் நவினை மரணமாய் கலாய்த்து அலற விட்டுள்ளனர்.

இப்பதான் தெரியுது

ஏங்க அவரு அவர் படத்தனு நினைச்சு போதைல சொல்லிருப்பாரு... இவரு இயக்குனர்னு இப்பதான் தெரியுது என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

காப்பி அடிக்கும் போதே

கொரியன் படத்தை பார்த்து காப்பி அடிக்கும் போதே இவ்ளோ பேச்சு பேசுறியே... இயக்குநர் மோகன் மாதிரி சொந்தமா யோசிச்சி படம் எடுத்தா உண்ணலாம் கைலயே புடிக்க முடியாது போல... முதலில் நம் முதுகுக்கு பின் உள்ள அழுக்கை பார்க்கவும்... என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

குப்பைக்கிட்ட கேட்டா..

"இவர தெரியல மூடர் கூட்டமுனு இளைஞர்கள் திருட, கொள்ளையடிக்க, 12 வயசு புள்ள இவர ரொமான்டிக் பண்ண, இந்த மாறி கருத்தா படம் எடுத்த குப்பை டைரடக்கர். அது சரி 12 வயசு குழந்தை சைட் அடிக்கிறமாறி படம் எடுத்த குப்பை கிட்ட கேட்டா குப்பை தான் வரும் என்று காட்டமாக கூறுகிறார் இந்த நெட்டிசன்.

ஆடாதே ப்ரோ

இன்னும் வளரவே இல்ல ஆடாதே ப்ரோ. மூடு விழா நடத்திருவாங்க என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

தாழ்த்த வேண்டாம்

ரொம்ப தப்பு நவீன் ப்ரோ, பிடிக்கவில்லை என்றால் விட்டுவிடுங்கள்.. யாருடைய படைப்பையும் தயவுசெய்து தாழ்த்த வேண்டாம் என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

ஏளனம் செய்கிறீர்களே

திரெளபதி படம் பார்த்தீர்களா? முழு படத்தை பார்க்காமல் சக கலைஞனின் படைப்பை ஏளனம் செய்கிறீர்களே.. கருத்துரிமை அனைவருக்கும் உண்டு.. குப்பை என்று சொல்லிவிட்டு எளிதில் கடந்துவிட முடியாது என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

ஒன்னும் செய்யல பங்கு

அடுத்தவன் படத்தை குறை கூறும் அளவுக்கு நாம இன்னும் ஒன்னும் செய்யல பங்கு என்கிறார் இவர்.

பயங்கர பிளாட்டினம்

ஆமா இவரு எடுக்குற படமெல்லாம் பயங்கர பிளாட்டினம்.. என்று கலாய்க்கிறார் இந்த நெட்டிசன்.

பாலச்சந்தர் ரேஞ்சுக்கு

ஒரு ஷாட் ஃபிலிமயோ இல்ல ஈரானிய படத்தையோ திருடி படமா எடுத்துட்டா பாலசந்தர் ரேஞ்சுக்கு பீத்திக்கிறானுவ.. போங்கடாடேய்.. என்று கூறிகிறார் இந்த நெட்டிசன்.

ஆஸ்கார வாங்கி குவிச்சவரு

ஆஸ்கார வாங்கி குவிச்ச ந'வீண்' சொல்லிட்டாரு.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X