அங்க தொட்டு.. இங்க தொட்டு.. கமல் கிட்டயே உன் வேலைய காட்டுறியாம்மா சுச்சி.. வெளுக்கும் ஃபேன்ஸ்!

சென்னை: இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோவை பார்த்த ரசிகர்கள், டுபாக்கூர் நீதிபதி சுசித்ராவை ரொம்பவே வறுத்தெடுத்து வருகின்றனர்.

Recommended Video

நீதிபதியாக சுச்சி செய்தது தவறு, கமல்ஹாசன் வருத்தம் | Bigg boss 4 Tamil

நீதிபதி பதவி கொடுத்தா அதை பண்ணாம சுசித்ரா அந்த டாஸ்க்கையே கேள்விக் குறியாக மாற்றி விட்டார் என்கிற விசாரணை இன்று நடக்கப் போகிறது.

புரமோவின் இறுதியில், எல்லாத்தையும் நீங்க சொல்லித்தானே செஞ்சேன் என ஒரே போடாக போட்டு கமலையும் கோர்த்து விட்டுட்டார்.

அதையும் கேளுங்க

அதையும் கேளுங்க

கேம் விளையாட போனாங்களா.. இல்லை பாலாஜிக்கு சப்போர்ட் பண்ண போனாங்களா கொஞ்சம் அதையும் கேளுங்க என்றும், சுசித்ரா வந்த பிறகு தான் பாலாஜி முருகதாஸ் ரொம்பவே ஆடுகிறார் என்றும் பிக் பாஸ் ரசிகர்கள் புரமோவை பார்த்த பிறகு கமெண்ட் பக்கத்தில் பொளந்து கட்டி வருகின்றனர்.

கமல் எப்போ சொன்னாரு

கமல் எப்போ சொன்னாரு

முதல் புரமோவில் கமல்ஹாசனை கோர்த்து விட்டு கொளுத்திப் போட்ட சுசித்ராவை பிக் பாஸ் ரசிகர்கள் கழுவி ஊத்தி வருகின்றனர். "கமல் சார் எப்போ சொன்னாரு.. நீங்க உள்ளே போய் எல்லாரையும் ஆட்டி வைங்கன்னு.. நீ தானே ஷேக் பண்ணப் போறேன்னு ஏலியன் மூஞ்சியை வச்சுக்கிட்டு சொன்ன" எனவும் பங்கம் செய்துள்ளனர்.

சுச்சியை விட சுரேஷ் சார் யங்

சுச்சியை விட சுரேஷ் சார் யங்

சுசித்ரா வருவதற்கு முன் ஆஹோ ஓஹோன்னு அலப்பறை விட்டவங்களாம், அவங்களை முதல் முதலா பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்த்ததில் இருந்து அய்யோ பேய் என அலறி அடித்து ஓடி போகின்றனர். சுச்சியை விட சுரேஷ் சார் ரொம்பவே யங்கா இருக்காரு.. நீங்க நம்பலனாலும் அது தான் நெசம் என இந்த நெட்டிசன் சுச்சியை ட்ரோல் செய்துள்ளார்.

இன்னைக்கு கேஸே

இன்னைக்கு கேஸே

கேஸே இன்னைக்கு ஜட்ஜ் மேடம் மேல தான் போல என இந்த பிக் பாஸ் ரசிகர் புரமோவை பார்த்து பூரித்துப் போயுள்ளார். இப்படி கை தூக்க வச்சி நீதி வழங்குங்க, அது பெரிய பிரச்சனையாகவும், சர்ச்சையாகவும் பேசுவாங்க, அப்புறம் கமல் வந்து பஞ்சாயத்து பண்ணுவார். அதுவரைக்கும் சுச்சியை பத்தி யாரும் பேசக் கூடாது என எல்லாமே ஒரு ஸ்க்ரிப்ட் தாங்க என்றும் சிலர் தெளிவாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

எனக்கே விபூதி அடிக்க பாத்தல

எனக்கே விபூதி அடிக்க பாத்தல

கமல்ஹாசனுக்கே சுசித்ரா விபூதி அடிக்க பார்த்து விட்டார் என இந்த நெட்டிசன் செம நக்கலாக மீம் போட்டு வேற லெவலில் செய்துள்ளார். இன்றைய நிகழ்ச்சி சுச்சி ரோஸ்ட், சுரேஷ் அவுட் என சுவாரஸ்யமாகவும், சோக மயமாகவும் இருக்கப் போகிறது.

எப்படி அழுவாங்கன்னு பாருங்க

எப்படி அழுவாங்கன்னு பாருங்க

இந்த சீசனில் ஹீரோவும் வில்லனகாவும் ரசிகர்கள் அன்பை பெற்ற சுரேஷ் சக்கரவர்த்தி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் போது, அர்ச்சனா, அனிதா, கேபின்னு எல்லா போட்டியாளர்களும் எப்படி தேம்பித் தேம்பி அழுது நடிக்கப் போறாங்கன்னு மட்டும் பாருங்க, சுரேஷ் இந்த வாரம் பர்பார்ம் பண்ணலைன்னு வெளியே அனுப்புவதாக இருந்தால், எந்த வாரமும் பர்ஃபார்ம் பண்ணாதவர்களுக்கு என்ன தீர்ப்பு?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X