ஆபாசத்தின் உச்சம்.. இரண்டாம் குத்து ஸ்நீக் பீக்கே இப்படி இருந்தால்.. படம் எவ்வளவு மோசமாக இருக்கும்?

சென்னை: இனிமேல் ஆபாசமான விளம்பரங்களை பண்ண மாட்டோம் மன்னிச்சிடுங்க என பாரதிராஜாவுக்கு மன்னிப்பு கடிதம் எழுதி விட்டு, வெளியிடுவது எல்லாமே ஆபாசத்தின் உச்சம் தான்.

தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ள இரண்டாம் குத்து படத்தின் ஸ்நீக் பீக் தற்போது ரிலீசாகி மீண்டும் ஒரு சர்ச்சையை கிளப்பி உள்ளது.

காம வக்கிரங்களை எல்லாம் ஸ்நீக் பீக்காக போட்டு அதற்கு ஃபன் ஸ்நீக் பீக் என்றும் கேப்ஷன் போட்டுள்ளனர்.

வாழைப்பழம் சாப்பிடும் ஹீரோயின்

பிக் பாஸ் டேனிக்கு ஜோடியாக இருக்கும் நடிகை வாயில் வாழைப் பழத்தையும், ஹீரோ சந்தோஷ் பி. ஜெயக்குமாருக்கு ஜோடியாக நடித்துள்ள நடிகை ஹாட் டாக் ஒன்றையும் வாயில் வைத்து சாப்பிடுவது போன்ற படு மோசமான காட்சி தற்போது வெளியாகி உள்ள ஸ்நீக் பீக்கில் இடம்பெற்றுள்ளது.

பெரிய வாழைப்பழம்

பெரிய வாழைப்பழம்

ஏற்கனவே ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் பெரிய வாழைப் பழத்தை அந்த இடத்தில் பிடித்து இருப்பது போல இருவரும் இருக்கும் போஸ்டர் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் குத்து படத்திற்கு எதிராக கண்டனங்கள் கிளம்பிய நிலையில், இயக்குநர் சந்தோஷ் பகிரங்க மன்னிப்பும் கேட்டார்.

கருமம் கருமம்

கருமம் கருமம்

இயக்குநரும் ஹீரோவுமான சந்தோஷ் பி. ஜெயக்குமார் மற்றும் பிக் பாஸ் டேனியை அவர்களது காதலி போல நடித்து பேய் ஒன்று இருவரது பேன்ட்டையும் கழட்டி பண்ணி கருமம் புடிச்ச வேலையை அப்பட்டமாக அப்படியே காட்டி உள்ளனர் இந்த ஸ்நீக் பீக்கில்.

தியேட்டர்கள் ஆர்வம்

தியேட்டர்கள் ஆர்வம்

பார்த்திபனின் ஒத்த செருப்பு சைஸ் 7 உள்ளிட்ட படங்கள் மீண்டும் தீபாவளிக்கு ரீ ரிலிஸ் செய்ய தியேட்டர்களை அணுகிய போது, இரண்டாம் குத்து படத்திற்கே ஏகப்பட்ட தியேட்டர்கள் ஆர்வத்துடன் காட்சிகளை ஒதுக்குவதாக ஒரு பதிவை பார்த்திபன் போட்டு வெளுத்து இருந்தார்.

டீசர் நீக்கம்

டீசர் நீக்கம்

ஆபாசத்தின் உச்சத்திற்கே சென்று ஆண்குறியை எல்லாம் அப்பட்டமாக காட்டிய இரண்டாம் குத்து டீசரை சமூக வலைதளங்களில் இருந்து அதிரடியாக நீக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு போட்டதை அடுத்து, அந்த டீசர் நீக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஸ்நீக் பீக் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

அனுமதியின்றி பார்க்க முடியாது

அனுமதியின்றி பார்க்க முடியாது

வக்கிரத்தின் ஆணி வேராக இருக்கும் இந்த புதிய ஸ்நீக் பீக் காட்சியை அனுமதியின்றி பார்க்க முடியாது என்றும், ரசிகர்கள் சம்மதம் தெரிவித்த பின்னரே பார்க்கும் படியாகவும் யூடியூபில் அப்லோடு செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலும் ஆபாச படங்களுக்கு இப்படியான ஒரு விஷயம் நடப்பது வழக்கம்.

கிளம்பியது எதிர்ப்பு

கிளம்பியது எதிர்ப்பு

2 நிமிட ஸ்நீக் பீக்கிலே எல்லை மீறிய ஆபாசம் கொட்டிக் கிடப்பதால், இந்த படத்தை திரையிடக் கூடாது என்றும், அந்த இயக்குநரை தடை செய்ய வேண்டும் எனவும் சமூக வலைதளங்களில் ஏகப்பட்ட நெட்டிசன்கள் தங்களின் கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X