எடுத்த ரெண்டும் பலான படம்..பாரதிராஜா பத்தி பேசலாமா? இரண்டாம் குத்து இயக்குனரை விளாசும் நெட்டிசன்ஸ்!
சென்னை: இயக்குனர் பாரதிராஜாவை கேள்வி கேட்ட இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமாரை ரசிகர்கள் விளாசியுள்ளனர்.
கவுதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்த அடல்ட் படம் இருட்டு அறையில் முரட்டுக் குத்து.
சந்தோஷ் ஜெயகுமார் இயக்கி இருந்த இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் இப்போது உருவாகி உள்ளது.

வாழைப்பழம்
இதை இயக்கி ஹீரோவாகவும் நடித்திருக்கிறார் இயக்குநர் சந்தோஷ் ஜெயகுமார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த போஸ்டரில் டேனியலும் சந்தோஷ் ஜெயகுமாரும் ஆள் உயர வாழைப்பழத்தை வைத்தப்படி போஸ் கொடுத்திருந்தனர். இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.

முகம் சுழிக்க
இந்நிலையில், இப்போது வெளியான இதன் டீசரில் அதிகமான ஆபாச மற்றும் இரட்டை அர்த்த வசனங்கள் உள்ளன. இது ரசிகர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது. சமூக வலைதளங்களில் இதற்கும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் இதற்கு இயக்குனர் பாரதிராஜா ஆவேசமாக இதற்கு கண்டனம் தெரிவித்தார்.

காமத்தைப் போதிக்கவா?
அவர் வெளியிட்ட அறிக்கையில், இரண்டாம் குத்து என்ற படத்தின் விளம்பரத்தை என் கண்ணால் பார்க்கவே கூசினேன். இத்தமிழ் நாட்டிலுள்ள எத்தனை நல்ல குடும்பங்கள் இதைப் பார்க்கக் கூசியிருக்கும்? எத்தனை வளரிளம் பருவத்தினரிடையே கசட்டை துப்பி வைத்திருக்கும்? கல்வியை போதிக்கிற இடத்தில் காமத்தைப் போதிக்கவா முன்வந்தோம்?

கிடுக்கிப்பிடி வேண்டும்
இப்படியொரு ஆபாசம் தமிழ்த் திரையுலகிற்கு ஆகாது எனக் கண்டிக்கிறேன். இதற்கெல்லாம் கிடுக்கிப்பிடி வேண்டும் என அரசையும் சென்சார் போர்டையும் வலியுறுத்துகிறேன். சமூகச் சீர்கேடுகள் செய்யும் படத்தை அரங்கேற்றாதீர்கள். எத்தனை கற்பழிப்புகள்? குழந்தைச் சிதைவுகள்? போதாதா? இப்படிப்பட்ட படங்களும் சிந்தனையும் கழிவுகளையே சாப்பாட்டுத் தட்டில் வைக்கின்றன என்று கூறியிருந்தார்.

இப்போ கூசிருச்சோ?
இந்நிலையில், இயக்குனர் பாரதிராஜாவுக்கு இரண்டாம் குத்து இயக்குனர் சந்தோஷ் ஜெயக்குமார் தனது ட்விட்டரில் பதில் தெரிவித்தார். கடந்த 1981-ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான டிக் டிக் டிக் பட ஸ்டில்லை பதிவிட்டு, 'இந்தப் படத்தை பார்த்து கூசாத கண்ணு, இப்போ கூசிருச்சோ? என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

வேதம் புதிது மாதிரி
இதையடுத்து ரசிகர்கள், பாரதிராஜாவை கேள்விகேட்ட, சந்தோஷ் ஜெயக்குமாரை விளாசித் தள்ளியுள்ளனர். ஒருவர், முதல்ல முதல் மரியாதை, நீ மொதல்ல 16 வயதினிலே, முதல் மரியாதை, வேதம் புதிது மாதிரி ஒரு நல்ல படம் எடுத்துட்டு அப்புறம் பேசுங்க. எடுத்த ரெண்டு படமும் பலான படம். இந்த அழகுல பாரதிராஜா பத்தி பேசலாமா? என்று கேட்டுள்ளார்.

தரம் தாழ்த்தி
மற்றொரு நெட்டிசன், மிகச் சிறந்த கலைகளில் ஒன்று படம் எடுப்பது. அதை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல முடியாவிட்டாலும் தரம் தாழ்த்தி இறக்கவேண்டாம் என்றும் இன்னொரு நெட்டிசன், சென்சார் என்ன பண்றாங்கன்னு தெரியலை என்றும் கூறியுள்ளனர்.

வித்தியாசம் இல்லையா?
ஒருவர், கவர்ச்சிக்கும் அருவறுப்பு தரக்கூடிய விஷயங்களுக்கும் வித்தியாசம் இல்லையா? மோசன் போஸ்டர் பார்த்தீர்களா? என்று கேட்டுள்ளார். இதே போல பலரும் ஆபாசமாக திட்டியுள்ளனர். ஒருவர் பாரதிராஜா இதற்கு கண்டனம் தெரிவித்ததன் மூலம், படத்துக்கு இலவச பப்ளிசிட்டியை தேடி தந்துவிட்டார் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











