வக்கிரத்தின் உச்சம்.. இவ்ளோ பச்சையாவா.. கேவலம்.. இரண்டாம் குத்து போஸ்டரை காரி துப்பும் நெட்டிசன்ஸ்!
சென்னை: இரண்டாம் குத்து படத்தின் போஸ்டரை பார்த்த நெட்டிசன்கள் காரித்துப்பி திட்டி தீர்த்துள்ளனர்.
சந்தோஷ் ஜெயகுமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்த படம் இருட்டு அறையில் முரட்டுக் குத்து.
அடல்ட் காமெடி படமான இந்த படம் கடந்த 2018ம் ஆண்டு வெளியாகி ஹிட்டானது. அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி ஹீரோவாகவும் நடித்துள்ளார் அதன் இயக்குநர் சந்தோஷ் ஜெயகுமார்.

டபுள் மீனிங் டயலாக்
முதல் பாகமே ஆபாச காட்சிகள், இரட்டை அர்த்த டயலாக்குகளால் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி, மொத்துப் பட்டது. இந்நிலையில் படு துணிச்சலாக இரண்டாம் பாகத்தை எடுக்கும் பணியில் இறங்கினார் சந்தோஷ் ஜெயக்குமார்.

பெயரே ஆபாசம்
இரண்டாம் பாகமான இந்தப் படத்திற்கு இரண்டாம் குத்து என தலைப்பு வைத்தனர். அதுவே ஆபாசமாக இருப்பதாக கூறி பெரும் சர்ச்சைக்குள்ளானது. பெயரே விமர்சனத்துக்குள்ளானது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது.

வாழைப்பழத்துடன்
இதில் நடுவில் ஒரு பெண் உள்ளாடைகளுடன் நிற்க ஒரு பக்கம் பிக்பாஸ் டேனியல் பாலாஜியும் மறுபக்கம் சந்தோஷும் அந்த இடத்தில் ஆள் உயர வாழைப்பழத்தை வைத்தப்படி போஸ் கொடுத்துள்ளனர். இப்படி பச்சையாக போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.

இவ்ளோ கேவலமா..
இதனை பார்த்த நெட்டிசன்கள் படு மோசமாக திட்டி தீர்த்து வருகின்றனர். போஸ்டரை பார்த்த அனைவரும் கோபம் தீர திட்டுவதோடு ஆசை தீர ஆபாச வார்த்தைகளால் அர்ச்சித்தும் உள்ளனர். போஸ்டரே இவ்ளோ கேவலமாக இருக்கிறதே படம் எப்படி இருக்கும் என்றும் விமர்சித்துள்ளனர். அவற்றில் சில,

பிட்டு படமே எடுக்கலாம்
போஸ்டரை பார்த்த இந்த நெட்டிசன், யோவ்.. இவ்ளோ பச்சையாவா போஸ்ட் ரெடி பண்ணுவீங்க என கேட்டுள்ளார். மற்றொரு நெட்டிசனான இவர் இதுக்கு நேரடியா பிட்டு படமே எடுத்து ரிலீஸ் பண்ணலாம். அரசாங்கத்துக்கிட்ட அனுமதி பேட்டு போடுறாங்க புரோ.. ரசிகர்கள் நாங்க பக்க பலமா நெட்டுல ஹேஷ்டேக் வேணா போட்டு தெறிக்க விடுறோம்.. பிட்டுக்கு அவ்ளோ ரசிகர்கள் இருக்காங்க இங்க என கூறியுள்ளார்.

கேர்ஸ்லாம் இருக்காங்க
மற்றொரு நெட்டிசனான இவர் ஏண்டா உங்க வீட்ல சின்ன பசங்க பெண்கள்லாம் இல்லயாடா என கேட்டுள்ளார். இந்த நெட்டிசன் தமிழ் சினிமா அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கிறது என பதிவிட்டுள்ளார். மற்றொரு நெட்டிசனான இவர் என்னங்க புரோ டிவிட்டர்ல கேர்ள்ஸ் இருக்காங்க.. படம் எடுங்க ஆனா தப்பா ஃபர்ஸ்ட் லுக் விடாதீங்க என பதிவிட்டுள்ளார்.

த்தூ கருமம்
இன்னும் சில நெட்டிசன்கள் ச்சீ, த்தூ, கருமம், கேவலம், அசிங்கம் என ஒற்றை வார்த்தையில் கழுவி ஊற்றியுள்ளனர். சிலர் இது பார்ன் படம் போன்று இருக்கிறது, தயவு செய்து இந்த போஸ்டரை மாற்றி டீசன்ட்டான ஒன்றை வெளியிடுங்கள் என எச்சரித்துள்ளனர்.

அப்பா பேரையும் தாத்தா பேரையும்
மேலும் சில நெட்டிசன்கள் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட நடிகர் கவுதம் கார்த்திக்கையும் திட்டி தீர்த்துள்ளனர்.
இந்த நெட்டிசன் உங்கப்பா பெற கெடுக்காத பங்காளி என கூறியுள்ளார். அதனை பார்த்த மற்றொரு நெட்டிசனான இவர்,
தாத்தா முத்துராமன் பேரையும் சேர்த்து சொல்லுங்க ப்ரோ என்று கூறியதோடு இந்த போஸ்டர் வக்கிரத்தின் உச்சம் என்றும் விளாசியுள்ளார்.

ஏன் திரும்பவும் தப்பு?
ஆபாச திரைப்படத்திற்கு ஆதரவாக இருக்கிறார் கௌதம் கார்த்திக். உங்கள் மேல் மரியாதை உள்ளது. ஒரு தடவை நீங்கள் தவறு செய்து விட்டீர்கள் மீண்டும் அந்தத் தவறை ஏன் செய்கிறீர்கள் என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











