இதுக்குமேல ஆபாசமா சொல்ல முடியாது.. பிட்டு படம்னே சொல்லலாம்.. 2ஆம் குத்து டீசரை விளாசும் நெட்டிசன்ஸ்!
சென்னை: இரண்டாம் குத்து டீஸரை பார்த்த நெட்டிசன்கள் கழுவி ஊற்றியுள்ளனர்.
இரண்டாம் குத்து படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. நடிகர் ஆர்யா டீசரை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார்.
100 சதவீத அடல்ட் காமெடி ஹாரர் படமான இந்தப்படம் கடநத் 2018ஆம் ஆண்டு வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகம் ஆகும்.

ஃபர்ஸ்ட் லுக்
முதல் பாகமே டபுள் மீனிங் வசனங்கள் ஆபாச காட்சிகள் என நிரம்பி வழிந்தது. இந்நிலையில் இரண்டாவது பாகமான இந்த படத்தின் தலைப்பே படம் எப்படி இருக்கும் என்பதை அரசல் புரசலாய் கூறியது. கடந்த வாரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

எவ்வளவு ஆபாசம்
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வக்கிரத்தின் உச்சமாய் இருந்தது. இந்நிலையில் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதில் எப்படியெல்லாம் வக்கிரத்தையும் ஆபாசத்தையும் திணிக்க முடியுமோ அவ்வளவு மோசமாய் திணித்து வைத்துள்ளார்கள்.

காரித்துப்பி..
வசனங்கள், காட்சிகள் என எல்லா விதத்திலும் ஆபாசமும் வக்கிரமும் திகட்ட திகட்ட கொடுத்துள்ளனர். ஏற்கனவே ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை காரித்துப்பிய நெட்டிசன்கள் இதன் டீசரையும் காரித்துப்பியுள்ளனர்.

நீங்களும் உங்க படமும்
இரண்டாம் குத்து படத்தின் டீசரை பார்த்த இந்த நெட்டிசன், ரொம்ப மோசம்டா.. போங்கடா நீங்களும் உங்க படமும் என டிவிட்டி தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

நாசமா போக அறிகுறி
இரண்டாம் குத்து படத்தின் டீசரில் ஆபாச வசனங்களும் காட்சிகளும் நிறைந்து இருப்பதை பார்த்த இந்த நெட்டிசன், தமிழ் சினிமா நாசமாக போக இது ஒரு அறிகுறி என தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











