ஜன நாயகன் FDFS Scam.. டிக்கெட் ரூ 3000.. கூவி கூவி விற்பனை செய்த TVK பொறுப்பாளர்.. வாய் திறப்பாரா விஜய்?
சென்னை: ஜன நாயகன் படத்தின் சென்சார் தொடர்பான வழக்கில் இன்று அதாவது ஜனவரி 9ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. படக்குழு சார்பில் இன்றைய தேதியில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். இதனால் படத்திற்கு முதல் நாள் முதல் காட்சிக்கு என்று பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட்ட படத்தின் டிக்கெட்டுகளின் விலை என்பது தியேட்டருக்கு தியேட்டர் அதிகப்படியான விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் தவெக பெண் நிர்வாகி ஒருவர், சென்னையில் உள்ள பிரபல தியேட்டரில் முதல் நாள் முதல் காட்சிக்கு ரூபாய் 3000க்கு டிக்கெட் இருக்கிறது, வேண்டுமா என்று கேட்கும் ஆடியோ வெளியாகி உள்ளது.
அதாவது, இணையவாசி ஒருவர் பகிர்ந்த வீடியோவில் அவர் தனக்கு நெருங்கிய நண்பரும் தவெகவில் பொறுப்பாளராக இருப்பவராகிய பெண் நிர்வாகியிடம் ஜன நாயகன் படத்திற்கு முதல் நாள் முதல் காட்சிக்கு ரோகினி தியேட்டரில் ரூபாய் 5000 என ஒரு டிக்கெட்டின் விலை கூறுகிறார்களே என்ன செய்வது என்று கேட்கிறார். அதற்கு அந்த பெண் எதிரில் இருந்து கொண்டு, உட்லண்ட்ஸ் தியேட்டரில் ரூபாய் 2000 தான் என்றும், மற்றொரு தியேட்டரில் ரூபாய் 3000 தான் என்றும் கூறுகிறார்.

ஊழல்: அதற்கு அந்த நபர், சாதாரணமாக ஒரு டிக்கெட்டின் விலை எவ்வளவு என்று கேட்கிறார். அதற்கு அந்த பெண் நிர்வாகி, ரூபாய் 200 அல்லது 300 இருக்கும் என்று கூறுகிறார். உடனே அந்த நபர், ஊழல் செய்கிறீர்களா என்று கேட்டதற்கு, அந்த பெண் நிர்வாகி சிரித்துக் கொண்டே ஆமாம் ஊழல் தான் என்று கூறுகிறார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
டிக்கெட் விலை: விஜய் பாட்டிலுக்கு 10 ரூபாய் என்று பாடினாரே, தற்போது அவரது ஜன நாயகன் படத்திற்கு முதல் நாள் முதல் காட்சிக்கு ரூபாய் 2000, ரூபாய் 3000, ரூபாய் 5000-க்கு டிக்கெட்டுகள் விற்பனை செய்கிறார்களே, அதற்கு என்ன சொல்வது. 200 ரூபாய் டிக்கெட்டை ரூபாய் 2000, ரூபாய் 3000, ரூபாய் 5000-க்கு விற்பனை செய்பவர்கள் தான் ஊழல் குறித்தும் ஊழல் ஒழிப்பு குறித்தும் பேசுகிறார்கள். இது தொடர்பாக விஜய் வாய் திறப்பாரா என்று கேள்வி கேட்டு வருகிறார்கள்.



Click it and Unblock the Notifications











