காலையிலேயே உங்க முகத்துலதான் முழிச்சுருக்கோம்.. என்ன நடக்கப்போகுதோ.. நடிகையால் அஞ்சும் நெட்டிசன்ஸ்!
சென்னை: காலையிலேயே டிவிட்டரில் கருத்து சொன்ன நடிகையை நெட்டிசன்கள் விளாசி தள்ளியிருக்கின்றனர்.
பிக்பாஸ் சீசன் ஒன்றில் பங்கேற்றவர் மரிய ஜூலியானா. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் கிடைத்த தனது பெயரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று கெடுத்துக்கொண்டார் ஜூலி.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் நடந்து கொண்ட விதத்தை பார்த்து திட்டாத மக்களே இல்லை என்று கூறலாம். ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு ஜூலிக்கு தொலைக்காட்சியில் தொகுப்பாளராகும் வாய்ப்பு கிடைத்தது.

சோஷியல் மீடியா
அதனை தொடர்ந்து சினிமாவிலும் ஹீரோயின் சான்ஸ் கிடைத்தது. உத்தமி, அம்மன் தாயி, டாக்டர் அனிதா ஆகிய படங்களில் நடித்தார். சதுகு வலைதளங்களில் ஆக்ட்டிவாக உள்ள ஜூலி அவ்வப்போது தனது போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
நிரந்தரமில்லை
மேலும் கடந்த சில நாட்களாக காலையிலேயே டிவிட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார். அந்த வகையில் இன்றும் நடிகை ஜூலி டிவிட்டரில் கருத்து பதிவிட்டார். அதில், நன்றாக சிந்தித்துப்பார் இந்த உலகில் அதிகமாக தோற்றவர்கள் தான் வரலாற்றில் இடம்பிடிக்கின்றனர்..ஆகையால் தோற்பதை கண்டு அஞ்சாதே இவ்வுலகில் எதுவும் நிரந்தரமில்லை..காலை வணக்கம் என பதிவிட்டுள்ளார்.

காரசாரமான பதில்
மேலும் டிவிட்டுடன் தனது போட்டோவையும் ஷேர் செய்திருக்கிறார் ஜூலி. ஜூலியின் இந்த டிவிட்டை பார்த்த நெட்டிசன்கள் கடுப்பாகி விட்டனர். அவரது டிவிட்டுக்கு காரசாரமான பதில்களை தெரிவித்து வருகின்றனர். காலையிலேயே தூங்கி எழுந்ததும் உங்கள் முகத்தில்தான் முழித்திருக்கிறோம், என்ன நடந்தாலும் நீங்கள்தான் பொறுப்பு என தெரிவித்து வருகின்றனர்.
உங்க முகத்துல
ஜூலியின் இந்த டிவிட்டை பார்த்த இந்த நெட்டிசன், தூங்கி எழுந்துதும் ட்விட்டரல உன் முகத்துல தான் முழிச்சுருக்கன் வெள்ளிக்கிழமை அதுமா. நாள் சரி இல்லனா இன்னைக்கு நைட் நீ செத்த.. என காட்டமாக டிவிட்டியிருக்கிறார்.
என்ன நடக்கப்போகுதோ?
இன்னைக்கு உங்க மூஞ்சிலதான் நான் முழிச்சு இருக்கேன் என்ன நடக்கப்போகுதுன்னு தெரியல என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
ஃபோட்டோ போடுறீயே
இந்த நெட்டிசன், காலைலேயே இப்படி ஃபோட்டோ போடுறியே.. உன் முஞ்சீல முளுச்சா வெளங்குமா? என கேட்டிருக்கிறார்.
துரோகம் என்பது வேறு
தோல்வி என்பது வேறு துரோகம் என்பது வேறு நீ ஒரு எச்ச தத்துவம் எல்லாம் சொல்லி கடுப்பேத்தாத என்று கோபமாக கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.
கருத்து சொல்ல வந்துட்டிங்க
என்ன பட வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லையா இப்படி கருத்து சொல்ல வந்துட்டிங்க என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.
மதிப்பு இல்லாதவை
அடிக்கடி டிவிட் போடாதீங்க அக்கா ஏன்னா நீங்க போடுற ஒவ்வொரு வார்த்தையும் விலைமதிப்பு இல்லாதவை என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
புலம்ப வைத்துவிட்டார்கள்
பிக்பாஸுக்கு முன்பு வரை உன்னை அனைவரும் வீரப்பெண்மணியாக மதித்தனர். அதற்குப்பின் உன் செயலால் உன்னை இப்படி புலம்ப வைத்து விட்டார்கள்.. என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
ஸ்பெல்லிங் மிஸ்டேக்
இதனிடையே ஜூலி தனது டிவிட்டில் நிரந்தரமில்லை என்பதை தவறான ஸ்பெல்லிங்குடன் பதிவிட்டிருந்தார். இதனை கண்டுபிடித்த நெட்டிசன்கள் பலர் அவருடை தவறை சுட்டிக்காட்டி கரெக்ட் செய்தனர்.


Click it and Unblock the Notifications











