உங்களை தமிழ் போராளி என்று நம்பி ஏமாந்த தருணம்.. ஒத்த போட்டோவை போட்டு வாங்கிக்கட்டிய நடிகை!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் ஜூலி தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்த போட்டோவை பார்த்து நெட்டிசன்கள் புலம்பி தீர்த்துள்ளனர்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரியில் பெரும் போராட்டம் நடைபெற்றது. சென்னை மெரினா, மதுரை, கோவை என தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்று பிரபலமானவர் ஜூலி. போராட்டத்தில் அவர் எழுப்பிய முழக்கம் வைரலாக வீர தமிழச்சி என அவரை கொண்டாடினர் நெட்டிசன்கள். இதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், நடிகை ஓவியாவை கார்னர் செய்ததோடு, பல பொய்களையும் கூறினார்.

ஜூலி போட்டோ
இதனால் மக்களின் கோபத்திற்கு ஆளானார் ஜூலி. சமூக வலைதளங்களிலும் நெட்டிசன்கள் அவரை கழுவி ஊற்றினர். இந்நிலையில் ஜல்லிக்கட்டில் பங்கேற்றபோது எடுத்த போட்டோவை ஜூலி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ஏமாந்த தருணம்
கடந்த 17ஆம் தேதி வெளியிட்ட அந்த போட்டோவை
பார்த்த நெட்டிசன்கள் அவரை சரமாரியாக விளாசியுள்ளனர். உங்களை தமிழ் போராளி என்று நம்பி ஏமாந்த தருணம் என்று கூறியிருக்கிறார் இந்த நெட்டிசன்.
உன்னைப் பார்த்து..
தமிழகமே உன்னை பார்த்து ஏமார்ந்த அந்த நாள் என ஜூலி ஷேர் செய்த போட்டோ குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
தகுதி இல்லை
நீ கலக்கு ஜூலி.. உன்னை குற்றம் சொல்ல இங்கே யாருக்கும் தகுதி இல்லை என்று கூறியிருக்கிறார் இவர்.
காமெடி பீஸ்
அக்க்ஷன் ஹீரோயினா வந்து காமெடி பீசா போய்ட்டீங்களே ஜி என்று கலாய்த்திருக்கிறார் இந்த நெட்டிசன்.
ஏமாற்றாதே..
காசுக்காக வேடமிட்டு தமிழகத்தின் இளைஞர்களை ஏமாற்றிய நாள்... தயவு செய்து இதை போன்று தமிழின் பெயரால் ஏமாற்றாதே.. என கூறியிருக்கிறார் இவர்.
இந்த ஒரு வார்த்தை
வீர தமிழச்சி.. இந்த ஒரு வார்த்தைலதான் ஏமாந்து போனேன் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.
இந்த போட்டோ..
இன்னுமா இந்த போட்டோ சுத்திக்கிட்டு இருக்கு என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.
தலை எழுத்து மாறியிருக்கும்
நீ மட்டும் அந்த பிக்பாஸ் போகாமல் இருந்திருந்தால்
இந்நேரம் தமிழ்நாட்டின் தலை எழுத்து மாறி இருக்கும் என்று கூறியிருக்கிறார் இவர்.
கெடுத்துக்கிட்டீங்க
எஃப்பில ப்ரொபைல் பிக்சரா வச்சிருந்தேன்..!
உங்க மரியாதையை நீங்களே கெடுத்துகிட்டீங்க..!
உண்மையாக இருங்கள். போலிக்கு ஆயுள் குறைவு.
தவறுகள் சகஜம் தான். மீண்டு வர வாழ்த்துக்கள் என்று கூறியிருக்கிறார் இவர்.
ஏமாற்ற தொடங்கிய நாள்
வீரத்தமிழச்சி என்று பொய் வேடம் போட்டு பிக் பாஸ் கூலிக்கு மாரடிக்க தமிழர்களை ஏமாற்றத் தொடங்கிய நாள்!! பிக் பாஸே !பிக் பாஸே பிராடு ஜூலி எங்கய்யா!!! என அவர் எழுப்பிய முழக்கத்தை எழுப்பியிருக்கிறார் இந்த நெட்டிசன்.
ஃபேமஸ் ஆகலாம்னு..
உங்கள பத்தி இப்போ யாரும் பேசாததுனால, இந்த போட்டோ போட்டு பேமஸ் ஆகலாம்ன்னு பாக்குறீங்களா?? என்று கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.
மீண்டும் போடவேண்டாம்
அனைத்தும் நடிப்பே என எங்களை ஏமாற்றிய புகைப்படத்தை தயவுசெய்து மீண்டும் போடவேண்டாம் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார் இவர்.


Click it and Unblock the Notifications











