இந்தியாவை சூறையாடிய கொடும்பாவிகளின் பெயரை மகன்களுக்கு சூட்டுவதா.. கரீனா கபூரை விளாசும் நெட்டிசன்ஸ்!

மும்பை: நடிகை கரீனா கபூர் தனது இரண்டாவது மகனுக்கு வைத்த பெயரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

கரீனா கபூர் என்றாலே சர்ச்சை என்கிற நிலைமைக்கு மாறி வருகிறார். சமீப காலமாக அவரை சுற்றி ஏகப்பட்ட சர்ச்சைகள் வெடித்து வருகிறது.

முதல் குழந்தைக்கு தைமூர் என வைத்த நிலையில், இரண்டாவது குழந்தைக்கு ஜெகாங்கீர் என பெயர் சூட்டி மீண்டும் ஒரு புதிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறார் நடிகை கரீனா கபூர். அவருக்கு எதிராக ஏகப்பட்ட நெட்டிசன்கள் ட்விட்டரில் கண்டனங்களை தெரிவித்து ஹாஷ்டேக்குகளை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

ஜெ அல்ல ஜெகாங்கீர்

ஜெ அல்ல ஜெகாங்கீர்

கரீனா கபூர் கானின் தந்தை ரந்தீர் கபூர் சமீபத்தில் தனது பேரனின் பெயர் ஜெ எனக் குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில், கரீனா கபூர் தனது மகனுக்கு ஜெகாங்கீர் என பெயர் வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஆகஸ்ட் 2020ல் தான் இரண்டாவது முறையாக கருத்தரித்திருப்பதை அறிவித்த கரீனா கபூர் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இரண்டாவது ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

பெயர் சர்ச்சை

பெயர் சர்ச்சை

பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானின் இரண்டாவது மனைவியான கரீனா கபூர் 2016ம் ஆண்டு முதல் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு தைமூர் என அவர் பெயர் வைத்த போதே ஏகப்பட்ட சர்ச்சைகள் உருவானது. இந்நிலையில், இரண்டாவது குழந்தைக்கு ஜெகாங்கீர் என கரீனா கபூர் பெயர் சூட்டி இருப்பது மேலும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

முகலாய மன்னர்கள்

முகலாய மன்னர்கள்

தைமூர் மற்றும் ஜெகாங்கீர் என அடுத்தடுத்து முகலாய மன்னர்களின் பெயர்களை தனது மகன்களுக்கு சூட்டியுள்ளார் நடிகை கரீனா கபூர். இந்தியாவை ஆக்கிரமித்து ஏகப்பட்ட அக்கிரமங்களை செய்த இருவரின் பெயர்களை திட்டமிட்டே நடிகை கரீனா கபூர் தனது குழந்தைகளுக்கு சூட்டி உள்ளார் என்று பாலிவுட் ரசிகர்கள் அவரை திட்டித் தீர்த்து வருகின்றனர்.

இந்துக்களை கொன்றவன்

இந்துக்களை கொன்றவன்

கரீனா கபூரின் இரண்டாவது குழந்தையின் பெயர் கசிந்துள்ள நிலையில், கரீனா கபூர், தைமூர் மற்றும் ஜெகாங்கீர் ஹாஷ்டேக்குகள் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன. முதல் குழந்தை தைமூரின் பெயர் தீவிரவாதியின் பெயர் என்றும் பல லட்சம் இந்துக்களை கொன்று குவித்தவன் என்றும் நடிகை கரீனா கபூரையும் நடிகர் சைஃப் அலி கானையும் விளாசி வருகின்றனர்.

சீக்கியர்களை துன்புறுத்தியவன்

சீக்கியர்களை துன்புறுத்தியவன்

இந்த ஆண்டு ஆரம்பத்தில் பிறந்த இரண்டாவது மகனுக்கு ஜெகாங்கீர் என கரீனா கபூர் பெயர் வைத்துள்ளார் என தகவல்கள் வெளியாகிய நிலையில், 1606ம் ஆண்டு ஜூன் 16ம் தேதி 5வது சீக்கிய குருவான குரு அர்ஜுன் தேவ் அவர்களை சிறையில் அடைத்து 5 நாட்கள் கொடுமைப்படுத்தியவன் ஜெகாங்கீர் என்றும் சுதந்திர இந்தியாவில் அந்த கொடும்பாவிகளின் பெயர்களை வைத்து இந்துக்களுக்கு எதிரான போக்கை நடிகை கரீனா கபூர் மற்றும் அவரது கணவர் சைஃப் அலி கான் கடைபிடித்து வருகின்றனர் என்றும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

பிரெக்னன்ஸி பைபிள்

பிரெக்னன்ஸி பைபிள்

ஏற்கனவே பிரசவ கால வலிகள் மற்றும் அனுபவங்கள் குறித்து நடிகை கரீனா கபூர் எழுதிய புத்தகத்திற்கு தலைப்பாக பிரெக்னன்ஸி பைபிள் என வைக்கப்பட்டது கிறிஸ்துவர்கள் மத்தியில் கடும் கோபத்தை கிளப்பியது. அந்த புத்தகத்தின் பெயரை மாற்ற வேண்டும் என புகார்களும் குவிந்தன.

சீதா தேவியாக நடிக்கக் கூடாது

சீதா தேவியாக நடிக்கக் கூடாது

மேலும், சீதா தேவியாக நடிக்க நடிகை கரீனா கபூர் 12 கோடி கேட்ட விவகாரமும் மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கியது. இந்துக்களின் கடவுளான சீதாவாக இஸ்லாமியத்திற்கு கன்வெர்ட் ஆன நடிகை நடிக்கக் கூடாது என இந்து அமைப்பினர் அதற்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இப்படி தொடர்ச்சியாக ஏகப்பட்ட மத சர்ச்சைகளில் நடிகை கரீனா கபூர் தொடர்ந்து சிக்கி வருகிறார்.

அமீர்கான் படம்

அமீர்கான் படம்

ஹீரோயின், ரா ஒன், 3 இடியட்ஸ் உள்ளிட்ட பல பிளாக்பஸ்டர் படங்களில் நடித்துள்ள நடிகை கரீனா கபூர் தற்போது அமீர்கான் நடிப்பில் உருவாகி வரும் லால் சிங் சத்தா படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார். 5 மாத கர்ப்பிணியாக இருக்கும் போது ஒரு பாடலுக்கு அவர் நடனமாடியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X