பட்டியல் சமூக மக்களை இழிவாக பேசலாமா?.. பயில்வான் பார்த்த வேலை.. வசமாக சிக்கிய கார்த்திக் குமார்?

சென்னை: தனது முன்னாள் மனைவி சுசித்ரா குறித்து ஆடியோ ஒன்றில் கார்த்திக் குமார் பேசியதாக பயில்வான் ரங்கநாதன் யூடியூப் ஒன்றில் பேசும் போது வெளியிட்ட ஆடியோவில் சர்ச்சைக்குரிய வகையில் பட்டியல் சமூக மக்களை இழிவுப்படுத்தும் விதமாக கார்த்திக் குமார் பேசியிருப்பது பஞ்சாயத்தை கிளப்பி உள்ளது.

ஏற்கனவே மீரா மிதுன் இதே போலத்தான் பட்டியல் சமூக மக்கள் குறித்து அவதூறாக பேசிய நிலையில், வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் அவர் தற்போது எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை.

Netizens slams Karthik Kumar for utters bad mouth with caste related comments

இந்நிலையில், சினிமாவை விட்டு விலகி ஸ்டாண்ட் அப் காமெடியனாக வலம் வரும் கார்த்திக் குமார் பேசிய ஆடியோவை சோஷியல் மீடியாவில் நெட்டிசன்கள் ஷேர் செய்து கார்த்திக் குமாரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

பயில்வான் ரங்கநாதன் பேட்டி: பாடகி சுசித்ரா சமீபத்தில் பல பிரபலங்களை தாக்கி பேசிய நிலையில், அந்த பேட்டிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய பயில்வான் ரங்கநாதன் சுசித்ரா ஒரு கிரிமினல் மனநோயாளி அவரைப் பற்றி என்ன பேசுவது என்றும் அவர் சொல்லும் அனைத்தும் பொய்யான கருத்துக்கள் அதில் கொஞ்சம் கூட உண்மை இல்லை என்றும் அவர் பேசியதற்கு வழக்கு தொடரப் போகிறேன் என்றும் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். மேலும், விவாகரத்து செய்த பின்னர் முன்னாள் கணவர் குறித்து ஆபாசமாக பேசுவது முற்றிலும் சட்டத்துக்கு புறம்பானது என்றும் கூறினார்.

கார்த்திக் குமார் ஆடியோ: அந்த பேட்டிக்கு நடுவே கார்த்திக் குமார் சுசித்ரா குறித்து பேசிய ஆடியோ ஒன்றையும் பயில்வான் ரங்கநாதன் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில், அந்த ஆடியோ தற்போது கார்த்திக் குமாருக்கு எதிராக திரும்பியிருக்கிறது. அதில், பட்டியலின மக்கள் குறித்து மிகவும் மோசமான வார்த்தைகளில் கார்த்திக் குமார் பேசியுள்ளார்.

சுசித்ராவின் முன்னாள் கணவர்: தனுஷ், நயன்தாரா நடித்த யாரடி நீ மோகினி படத்தில் தனுஷின் நண்பராக நடித்த கார்த்திக் குமார் கடைசியாக கடந்த ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளியான அன்னபூரணி படத்தில் வில்லனாக நடித்திருந்தார். சுசித்ராவின் முன்னாள் கணவரான கார்த்திக் குமார் சுசித்ராவை விவாகரத்து செய்த நிலையில், நடிகை அம்ருதா ஸ்ரீனிவாசனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

அரெஸ்ட் பண்ணுங்க?: மீரா மிதுனை கைது செய்தது போல கார்த்திக் குமாரை இந்த விவகாரத்தில் கைது செய்ய வேண்டும் என நெட்டிசன்கள் பலரும் அவரது ஆடியோவை சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். சுசித்ரா ஒரு படித்த பெண் போல பேட்டிகளில் பேசவில்லை என்றும் படிக்காத நபர் போல படுமோசமாக பிரபலங்கள் குறித்து மோசமாக பேசுகிறார். தான் செய்யும் தவறுகளை அடுத்தவர் செய்வதாக சுசித்ரா கூறி வருகிறார் என சொன்ன நிலையில், பட்டியல் சமூகத்தை குறிக்கும் வார்த்தைகளை பயன்படுத்தி அவர் மிகவும் கீழ்த்தரமாக பேசியதற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். பயில்வான் ரங்கநாதன் வெளியிட்ட ஆடியோவால் தற்போது கார்த்திக் குமார் வசமாக சிக்கி உள்ளார். இந்த பிரச்சனை எங்கே போய் முடியப் போகிறதோ தெரியவில்லை.

Netizens slams Karthik Kumar for utters bad mouth with caste related comments

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X