ரியாலிட்டி ஷோல ரியாலிட்டியே இருக்காது... கஸ்தூரியை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

சென்னை : பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கஸ்தூரி. நிஜத்தில் வழக்கறிஞரான கஸ்தூரி, தற்போது சமூக பிரச்சனைகள், கரென்ட்டில் இருக்கும் பிரச்சனைகள் பற்றி அடிக்கடி ட்வீட் செய்து வருகிறார்.

அவ்வப்போது சர்ச்சை ட்வீட்களை போட்டு பரபரப்பையும் கிளப்பக் கூடியவர் கஸ்தூரி. சினிமா, அரசியல், டிவி என அனைத்தை பற்றியும் ட்வீட் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

Netizens slams Kasthuri tweet on reality show

அந்த வரிசையில் இன்று ரியாலிட்டி ஷோக்களை கலாய்த்து கஸ்தூரி ட்வீட் செய்துள்ளார். அதில் அவர், அந்த டிவி culture அப்படித்தான். Reality show la reality சுத்தமா இருக்காது. தப்பான ஆட்களை தாறுமாறா promote பண்ணுவாங்க. கண்டபடி பேசுறதுக்கு content னு பேரு. ஆனா இப்பல்லாம் சாயம் சீக்கிரமே வெளுத்துருது. #vaaymaiyeVellum என குறிப்பிட்டுள்ளார்.

வாய்மையே வெல்லும் என்ற ரியாலிட்டி ஷோ வசந்த் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதை கலாய்த்து தான் கஸ்தூரி இவ்வாறு ட்வீட் செய்துள்ளார். இதற்கு முன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ், சொல்வதெல்லாம் உண்மை உள்ளிட்ட ரியாலிட்டி ஷோாக்களை கலாய்த்தும் கஸ்தூரி ட்வீட் செய்துள்ளார்.

Netizens slams Kasthuri tweet on reality show

பிக்பாஸ் நிகழ்ச்சியை கலாய்த்த கஸ்தூரி, பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். வைல்ட் கார்டு என்ட்ரியாக வந்த கஸ்தூரி 18 நாட்களில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதை வைத்து நெட்டிசன்கள் கஸ்தூரியை கழுவி ஊற்றி வருகின்றனர். ரியாலிட்டி ஷோக்களை கழுவி ஊற்ற கஸ்தூரி போட்ட ட்வீட், தற்போது அவருக்கே ஆப்பாக மாறி உள்ளது. கஸ்தூரியின் ட்வீட்டை சிலர் வரவேற்றுள்ளனர். ஆனால் பலர் கஸ்தூரியை கிண்டலடித்து வருகிறார்கள்.

ரியாலிட்டி ஷோவில் ரியாலிட்டி இல்லையென்றால் நீங்க எதுக்காக பிக்பாஸ் போனீங்க. அப்போ தெரியலியா ரியாலிட்டி இல்லைன்னு. இது எந்த நிகழ்ச்சியை சொல்லீருக்கீங்க. பிக்பாசை சொல்றீங்களா. இப்போநாச்சும் உண்மையை சொன்னீங்களே என பலர் கமெண்ட் செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X